.

Wednesday, June 6, 2007

உ.பியில் வெப்பத்துக்கு 22பேர் பலி

லக்னோ, ஜூன் 6: உத்திரப் பிரதேசத்தில் இன்று இறந்த 6 பேர் உட்பட மொத்தம் 22பேர் கோடை வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 43டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டது. நாளை வெயில் இன்னும் அதிகமாகலாம் என தரிவிக்கப்பட்டுள்ளது.

Six die due to heat in UP, toll 22 The Hindu

வெப்ப ஆற்றலிலிருந்து.. மின்னாற்றலுக்கு..!

ஆற்றல் மாறா கோட்பாட்டின் அடிப்படையில்...
வீணாகும் வெப்பத்தை ஒலியலைகளைக்கொண்டு மின்சாரமாக மாற்றுகிற சாதனமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரெஸ்ட் சைம்கோ தனது ஐந்து ஆய்வு மாணவர்களுடன் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அக்கொஸ்டிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா என்கிற அமைப்பின் வருடாந்திர மாநாட்டில், ஜூன் 8ம் தேதி இக்கண்டுபிடிப்பு காட்சிபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு அமெரிக்க ராணுவம் புரவலராகியுள்ளது. ராடாரிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கையடக்க மின்சாதனமாக மாற்றி போர்க்களங்களில் உபயோகிப்பதில் அவர்கள் ஆர்வங்கொண்டுள்ளனராம்.

Heat to Sound, to Electricity (TOI)

சென்னையில் SEVENTY MM வாடகை டிவிடி

சென்னை, ஜூன் 7: பெங்களூரைச் சேர்ந்த செவன்ட்டி எம்எம் நிறுவனம், சினிமா டிவிடிக்களை வாடகைக்கு விடும் திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபாங்கர் சர்க்கார், விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் அனுஜ் முகர்ஜி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழ், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் உரிமை பெற்ற சினிமாக்களை டிவிடி வடிவில் வாடக்கை விடும் திட்டத்தை பெங்களூரில் தொடங்கினோம். தற்போது சென்னையில் அறிமுகம் செய்துள்ளோம்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹிட் பேக், சூப்பர் ஹிட் பேக் மற்றும் பிளாக்பஸ்டர் பேக் என மூன்று வித திட்டங்கள் உள்ளன. தேவைப்படும் சினிமா டிவிடிக்களை இணையதளத்தில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் ஆர்டர் செய்யலாம். வீட்டுக்கு வந்து டிவிடி டெலிவரி செய்யப்படும். எத்தனை நாள் வேண்டுமானாலும் படத்தை வைத்திருந்து பார்க்கலாம். ஒரு படத்தை பார்க்க ரூ.8 தான் செலவாகும்.


மேலும் முழு செய்திக்கு "தினகரன்"

அந்த வாடகை டிவிடி வலைதளம் "SEVENTYMM.COM"

பார்வையின்மையை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'கள்!

பொதுவான பார்வையின்மை குறைபாட்டை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'களை பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இத்திட்டம் வெற்றி கண்டால் நிறையப் பேருக்கு பலனளிக்கும் என்று தெரிகிறது.

'கேடராக்ட்'எனப்படும் விழிப்படல அறுவை சிகிச்சையைப் போன்றே இதுவும் ஒரு எளிய ஒருநாளில் முடியும் அறுவை சிகிச்சையாக அமையுமாம்.

TOI

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் எரிபொருள் மீது மாநில அரசின் விற்பனை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால் அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் டெல்லியில் பெட்ரோலுக்கு 67 பைசாவும் டீசலுக்கு 23 பைசாவும் உயர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது, மத்திய அமைச்சர் முரளி தியோரா மாநில அரசுகள் விற்பனைவரி விதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா சிறையில் ஒரு மெக்ஸிகன் உண்ணாவிரதம்

எட்வர்டோ அன்டோனியோ (Febles Ortiz Eduardo Antonio ) என்ற நாற்பத்தி ஏழு வயது மெக்ஸிகன் பயணி, மார்ச் 21ஆம் தேதி, தில்லியிலிருந்து பாங்காங் செல்லும் இந்திய விமானம் ஒன்றில் குடிபோதையில் சக பயணிகளை மிரட்டிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அபாயகரமான வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக அவர் செய்த கலாட்டாவில் விமானத்தைக் கொல்கத்தாவில் தரையிறக்கி அவரைப் போலீஸார் வசம் ஒப்புவித்தனர்.

அவருக்கு பெயில் அளிக்கப்பட்டு விட்ட பிறகும், அதற்கான தொகையான ரூ 4,50,000/- ஐ அவரால் கட்ட முடியாமல் போனதால் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இந்தத் தொகை மிக அதிகம் என்றும், தன்னால் கட்ட முடியாது என்றும் சொல்லும் அந்தோனியோ, தன்னை விடுவிக்கச் சொல்லி நேற்று முதல் சிறையிலேயே கால வரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

Mexican on hunger strike in Kolkata jail - DNA

ஹுண்டை - பள்ளிக்கூடங்களுக்கு உதவி

ஹுண்டை மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மரச்சாமான்களை (மேசை, பெஞ்ச்) வழங்கி உதவ இருக்கின்றது.

முதல் கட்டமாக இருங்காட்டுக்கோட்டை பஞ்சாயத்து பள்ளிக்கூடத்துக்கு 350 பெஞ்ச், மேசைகள் வழங்கப்பட்டன. வருடத்துக்கு 10,000 ஜோடி பெஞ்ச் மேசைகள் வினியோகிக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டது.

Hyundai to donate furniture to needy schools The Hindu

ச:அனுமதி இல்லாத கட்டிடங்கள் - மறுபரிசீலனை மனு

சென்னையில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவேண்டும் எனும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு ஒன்றை தமிழக அரசு அனுப்ப முடிவு செய்ய்துள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.

நடுத்தர மக்களின் நலனும், வியாபாரக் கூடங்களின் நலனும் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இந்த முடிவு என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலமையில் ஒரு கமிட்டி இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்த அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்புள்ள 75,000 கட்டிடங்களையும் இடிக்கவேண்டும் என்றும் மறுபரிசீலனை மனு செய்யக் கூடாது என்றும் வலியுறுத்திவருகிறார்.

TN to file review petition on illegal constructions issue Zee News

ச:போப் வண்டிமீது குதித்த வாலிபர்

செயிண்ட் பீட்டர் ஸ்கொயரில் போப் தன் பிரத்யோக வண்டியில் வலம் வந்துகொண்டிருக்கையில் 27 வயது நிரம்பிய ஜெர்மெனிய வாலிபர் பாதுகாப்பு அரணைத் தாண்டி போப்பின் வண்டி மீது குதிக்க முயன்றார்். போப்பின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இந்த பரபரப்பை கண்டுகொள்ளாமலேயே போப் பயணத்தை தொடர்ந்தார்.

Pope security breachedNDTV.com
Man tries to jump into popemobile Houston Chronicle, TX
Man Tries to Jump Into Popemobile Newsday, NY

மூன்றாவது அணி-ஜெ அறிவிப்பு .

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் சென்றடைந்தார். இன்று காலை சந்திரபாபு நாயுடுவின் வீட்டில் நடந்த இக் கூட்டத்தில் மூன்றாவது அணி உருவானது. இக் கூட்டத்தில் கேரள காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆனாலும் கூட்டணியில் சேர்வதாக அக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இதில் ஜெயலலிதா, நாயுடு, முலாயம் சிங் யாதவ், அவரது வலதுகரமான அமர்சிங், சமாஜ்வாடி கட்சியின் கர்நாடக பிரிவுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பங்காரப்பா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா சார்பில் பாபுலால் மராண்டி, அஸ்ஸாம் கன பரிஷத் சார்பில் பிருந்தாவன் கோஸ்வாமி, லோக் தள் சார்பில் செளதாலா, வைகோ ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஏற்பட்ட பிளவில் உருவானது தான் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது எனத் தெரிகிறது. பாஜக சார்பில் சுயேச்சையாக நிறுத்தப்படவுள்ள துணை ஜனாதிபதி ஷெகாவத்தை இக் கூட்டணி ஆதரிக்கக் கூடும். அல்லது தனி வேட்பாளரை நிறுத்தக் கூடும் என்று தெரிகிறது.

வாயில் தீக்குச்சியை கொளுத்திப்போட்ட கொடூரம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அவருடைய மகன் சன்னாசி (வயது 15).

வாலிபர் சன்னாசி நேற்று முன்தினம் இரவு, அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள குமாரின் வீட்டிற்கு சென்று டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே காலனியை சேர்ந்த வாலிபர் குணசேகரன் அங்கு வந்தார்.

அவர், டி.வி. நிகழ்ச்சிகளை மும்முரமாக ரசித்துக் கொண்டிருந்த சன்னாசியை கடைக்கு சென்றுவரும்படி கூறி வேலை வாங்கினார். அதற்கு சன்னாசி மறுக்கவே, அவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், ஒரு தீக்குச்சியை கொளுத்தி, சன்னாசியின் வாயில் வலுக்கட்டாயமாக போட்டதாக கூறப்படுகிறது. இதில் சன்னாசியின் நாக்கு மற்றும் உதடு ஆகியவற்றில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நல்லதம்பி, வாலிபர் குணசேகரனிடம், "ஏன் இதுபோல் செய்தாய்?" என்று கூறி தட்டிக்கேட்டார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த குணசேகரன், அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து தாத்தாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நல்லதம்பி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலாம்பாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிவிட்ட வாலிபர் குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

திமுகவினர் மிரட்டுவதாக விஜயகாந்த் புகார்

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேமுதிகவினரையும், கட்சி கவுன்சிலர்களையும் திமுகவினர் மிரட்டி வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியலில் என்னை முடக்க சதி திட்டம் நடத்தப்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் முடக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அது நடக்காது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி வந்திருக்கிறேன். மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட முடியாதவாறு ஆளும் கட்சியினர் தேமுதிகவினரை மிரட்டி வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களின் வீட்டிற்கு சென்று பேரம் பேசி வருகின்றனர். தேமுதிக அனைத்து இடையூறுகளையும் கடந்து மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறும் என்றார் விஜயகாந்த்.

ஏழு வயதில் மெட்ரிக் தேர்ச்சி! - இந்தியச் சாதனை.


அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

மெட்ரிகுலேஷன் படிப்பு

சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி. தாய் சாயா. குடும்பத்தலைவி.

வறுமை காரணமாக சுஷ்மாவை அவளது பெற்றோர், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. ஆனால் சுஷ்மா பொது அறிவில் சிறந்து விளங்கினாள்.

அவளுடைய கல்வி திறனை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி மாநில பள்ளிக் கல்வித்துறையும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதையடுத்து லக்னோ செயின்ட் மீனா பள்ளியில் சுஷ்மாவை 9-ம் வகுப்பில் நேரடியாக சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு அவள் 10-ம் வகுப்பு மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினாள்.

7 வயது சிறுமி மெட்ரிக் எழுதும் தகவல் அறிந்ததும் பத்திரிகைகளும், டி.வி.க்களும் சுஷ்மாவை பற்றி பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அளவுக்கு அதிமான விளம்பரத்தால் சுஷ்மாவின் திறமை பாதிக்கப்படலாம் என்று பள்ளி நிர்வாகம் கவலை அடைந்தது.

சாதனை

உ.பி.மாநில மெட்ரிகுலேஷன் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சிறுமி சுஷ்மா 600-க்கு 354 மதிப்பெண்கள் வாங்கி தேர்வு பெற்றாள்.

அவள் இந்தியில் 58, ஆங்கிலத்தில் 60, கணிதத்தில் 66, விஞ்ஞானத்தில் 63, சமூக அறிவியலில் 68, கம்ப்ïட்டர் பாடத்தில் 39 மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.

இதற்கு முன்பு பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த துளசி என்ற 9 வயது சிறுமி மெட்ரிகுலேசன் பரீட்சையில் பாஸ் செய்து இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சாதனையை படைத்த மாணவி என்ற பெருமையை பெற்று இருந்தாள். அந்த சாதனையை இப்போது சுஷ்மா முறியடித்து விட்டாள்.

அவளுக்கு சக மாணவிகள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். சாதனை படைத்த சுஷ்மா கூறுகையில், "கம்ப்ïட்டர் பாடத்தில் மார்க் குறைந்ததால் முதல் வகுப்பில் பாஸ் செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதுதான் தனது வருத்தம்'' என்று குறிப்பிட்டாள்.

சுஷ்மாவின் குடும்பத்தை பொறுத்தவரை அவள் மட்டுமின்றி அவளுடைய அண்ணன் சைலேந்திரனும் அறிவு ஜீவிதான். இவன் 11-வது வயதில் 12-ம் வகுப்பு பாஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவன். ஆங்கிலத்தில் இவனுடைய அபார திறமையை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவனுக்கு மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் பண வசதி இல்லாததால் அவன் அமெரிக்கா போகமுடியவில்லை.

தினத்தந்தி
அஞ்சல்வழித் தகவல்: நண்பர் 'ஷஃபீக்'

பி.சுசீலா: இரண்டாவது இன்னிங்ஸ்

பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா...உனக்கொரு உனக்கொரு கோரிக்கை...தொட்டுவைத்த முகமும் விட்டுவைத்த அழகும்...உனக்கொரு உனக்கொரு காணிக்கை...'' என்று அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது.

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாடகியாக கொடிகட்டி பறந்த பி.சுசீலா, பல வருடங்களாக சினிமாவில் பாடவில்லை. மேடைகளில் மட்டும் பாடி வந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப்பின், அவர் சினிமாவுக்காக பாடினாலும், அந்த இனிய குரல் இன்னும் அப்படியே இருப்பதாக கவிஞர் வைரமுத்துவும், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் கூறினார்கள்.

பி.சுசீலா பேட்டி

மிக நீண்ட இடைவெளிக்குப்பின், சினிமாவுக்காக பாடியது பற்றி பி.சுசீலா `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

``1952-ம் ஆண்டில் நான் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனேன். `பெற்ற தாய்' என்ற படத்துக்காக, ``ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு அழைத்தாய்'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன்.

இதுவரை தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிவிட்டேன். கடைசியாக, `புதிய முகம்' என்ற படத்துக்காக 1994-ம் ஆண்டில் பாடினேன். ``கண்ணுக்கு மையழகு'' என்ற அந்த பாடலை கவிஞர் வைரமுத்துதான் எழுதியிருந்தார்.

13 வருடங்கள் கழித்து மீண்டும் அவர் எழுதிய பாடலை, இப்போது பாடியிருக்கிறேன்.''

இவ்வாறு பி.சுசீலா கூறினார்.

ச: மூன்றாம் அணிக்கு முன்னோடி

ஹைதராபாத்தில் காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் மாற்றாக மூன்றாம் அணி அமைப்பதற்கு முன்னோடியாக ஐந்து பிராந்தியக் கட்சிகளின் கூட்டம் இன்று சந்திரபாபு நாயுடு வீட்டில் கூடியது. அ இ அதிமுக தலைவர் ஜெயலலிதா, சமாஜ்வாடிக் கட்சியின் முலாயம்சிங் யாதவ், அசோம் கணபரிஷத் தலைவர் ப்ரிந்தாவன் கோஸ்வாமி, இந்திய தேசிய லோக் தளத்தின் ஓம் பிரகாஷ் சௌதாலா,முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா,முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மாராண்டி, மதிமுக தலைவர் வைகோ, மற்றும் கேரள காங்கிரசின் கேஜே தொமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களில் கடைபிடிக்கக் கூடிய வாய்ப்புக்களை விவாதித்தனர்.

The Hindu News Update Service

ச: ஓமனில் வரலாறு காணாத கடுங்காற்று, மழை

ஓமனின் கடலோராப்பிரதேசங்களில் இன்று வீசிய புயல் ஆயிரக்கணக்கான மக்கலை தாழ்ந்த பகுதிகளிலிருந்து இடம் பெயர வைத்தது. தெற்கு ஈரானைநோக்கி நகரும் இந்த புயற்சின்னம் வலுவிழந்து வருகிறது. ஓமனிலும் தலைநகர் மஸ்கட்டிலும் உயிர்சேதம் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மழை மேலும் வலுக்கும் என்று தெரிகிறது.
மின்சாரம் சில பகுதிகளுக்கு தடைபட்டது, சாலைகள் சில மூடப்பட்டன, ஆனால் வடமேற்கில் இயங்கும் எண்ணெய் ஆலைகள் தடைபடாது இயங்கின.
The Hindu News Update Service

ச:சிங்கூரில் நிலம் வாபஸ்: மம்தா போராட்டம் வெற்றி ?

மேற்குவங்க அரசும் ஆளும் சிபிஎம் கூட்டணியும்செவ்வாயன்று சிங்கூரில் டாடாவின் சிறுகார் திட்டத்திற்காக விருப்பமில்லாத விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அவர்களுக்கு திருப்பித் தர ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர். திங்களன்று நடந்த மம்தா-ஜோதிபாசு சந்திப்பிற்குப் பிறகு இந்த மனமாற்றம் நடந்திருக்கிறது. இந்தசெய்கை ்மூலம் நந்திகிராமத்திலும் அமைதி திரும்ப வழிவகுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

CPM blinks on Singur too, may return land - Yahoo! India News

கோயில் யானைக்கு கால்பந்தாட்ட பயிற்சி.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோயில் யானை செங்கம்மாவுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கம்மா. இதற்கு 17 வயதாகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு பக்தரால் இந்த யானை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது. தற்போது இந்த யானை சர்க்கரை நோயால் அவதிப்படுகிறது. சர்க்கரையின் அளவை குறைக்க இந்த யானை பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்கிறது. செங்கம்மாவை தினமும் பயிற்சிக்கு அழைத்து செல்கிறார்களா என கோயில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. நடைபயிற்சி மட்டுமல்லாமல், மாதத்திற்கு 2 முறை கால்பந்து விளையாட்டிலும், ஓய்வு நேரங்களில் மவுத்தார்கன் வாசிப்பதிலும் இந்த யானை ஈடுபடுகிறது. ராஜகோபாலசுவாமி புறப்பாடு நடைபெறும் போது சுவாமிக்கு செங்கம்மா சாமரம் வீசுவது இப்பகுதியில் பிரபலம். மனிதர்களை போல் காலையில் டீ குடிக்கும் பழக்கம் உடையது. தனக்கு டீ கொடுக்காவிட்டால் பாகனையும் இந்த யானை டீ குடிக்க விடாது. செங்கம்மா குழந்தைபோல சுட்டித்தனம் செய்யும் செங்கம்மாவுக்கு மன்னார்குடியில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.இதுகுறித்து பாகன் ராஜா கூறும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளும் ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்வு முகாமிற்காக முதுமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது யானைகளுக்கு போதாது. முகாமிலிருந்து வந்த பிறகும் செங்கம்மாவுக்கு நடை, கால்பந்து உள்பட பல்வேறு பயிற்சிகளை விடாமல் அளித்து வருகிறோம். இதனால் புத்துணர்வு முகாமிற்கு போவதற்கு முன்பே செங்கம்மா புத்துணர்வுடனே பராமரிக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து கோயில் யானைகளுக்கும் பாகன்கள் பயிற்சி அளிக்கவேண்டும். இதன்மூலம் யானைகள் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும், என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜெர்மனி பயணம்.

பிரதமர் மன்மோகன்சிங் நான்குநாள் சுற்றுப்பயணமாக இன்று ஜெர்மனி செல்கிறார்.ஜெர்மனியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நான்குநாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி செல்கிறார். டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் புறப்படுகிறார்.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சீன அதிபர் ஹூ- ஜிந்தோ மற்றும் மெக்சிகோ, ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேஷில் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.இந்த சுற்றுப்பயணத்தின்போது வரும் 8ம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். சீன அதிபரையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.

நெல்லையில் பலத்த மழை.

வீட்டு சுவர் விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பழி.

திருநெல்வேலியில் பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் பலியானார்கள். நேற்றிரவு திருநெல்வேலியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பேட்டை பகுதியில் மரம் சாய்ந்து வீட்டின் சுவர் மீது விழுந்தது. இதனால் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோமதியம்மாள்(55), ரேவதி(12), கண்ணம்மாள்(9) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேவதி, கண்ணம்மாள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இடைத் தேர்தலில் தோல்வி: இமாச்சல் பிரதேச அமைச்சர் பதவிவிலகல்

இமாசலப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் பாஜக மாநில தலைவருமான பிரேம்குமார் துமால் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராம் லால் தாகூரை தோற்கடித்தார்.

இமாச்சல் பிரதேச மாநில வனத்துறை அமைச்சராக இருந்த ராம்லால் தாகுர், அமீர்பூர் மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் மாநில அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

தினமணி

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து: ரூ.4.65 லட்சம் அபராதம் - 19 ஆண்டு வழக்கில் தீர்ப்பு

வருமான வரித்துறை வழக்கில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு கீழ் கோர்ட் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதே நேரத்தில் அவருக்கு ரூ. 4.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

1986-ம் ஆண்டு அ.தி.மு.க. நிதியில் இருந்து ரூ.4.65 லட்சம் ரொக்கமாகப் பெற்றார் வெண்ணிற ஆடை நிர்மலா. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இத்தொகையை அவருக்கு வழங்கினார்.

10,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை வாங்கினால் அதை ரொக்கமாக வாங்கக் கூடாது என்றும், காசோலை அல்லது டிராப்ட் மூலமாகத்தான் வாங்க வேண்டும் என்றும் வருமான வரிச் சட்டத்தின் 269-வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

எனவே ரூ.4.65 லட்சத்தை நடிகை நிர்மலா ரொக்கமாக வாங்கியது குற்றம் என்று 10.3.1988-ல் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம், நிர்மலாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவர் அ.தி.மு.க.விடம் இருந்து பெற்ற ரூ.4.65 லட்சத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. 1.10.1997-ல் இத்தீர்ப்பு வெளியானது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்மலா அப்பீல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் இவ்வழக்கை விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். நிர்மலாவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்தார். கீழ் கோர்ட் விதித்த அபாரதம் சரியானதே என்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை ஏற்கெனவே நீதிமன்றத்தில் செலுத்தி விட்டார் நிர்மலா.

தினமணி

வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது

வாக்களிக்கும் வயதை 16 வயதாகக் குறைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக ஆஸ்திரியா வந்துள்ளது. அங்கு நாடாளுமன்றத்தில் உள்ள 5 கட்சிகளில் 4 கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சி அதற்கு எதிராக வாக்களித்தது.

நாடாளுமன்ற பதவிக் காலத்தை 4 ல் இருந்து 5 ஆக அதிகரித்தமை உட்பட பல பரந்துபட்ட திட்டங்களைக் கொண்ட பிரேரணைப் பொதியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கையாகும். ஆஸ்திரியாவின் சில பகுதிகளில் உள்ளூர் தேர்தல்களில் 16 வயதினர் வாக்களிக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், பெரும்பாலான நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆகவே இருக்கின்றது.

- பிபிசி தமிழ்

World in Brief - News - World - Times Online

சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு

அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.

செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என எல்லா வடிவங்களிலும் செய்தியின் அடிப்படையில் பின்னப்பட்ட படைப்புக்களை வரவேற்கிறோம்்கிறோம். படைப்புக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வகைபபாடுகளின்்டுகளின் கீழ் வரவேண்டும்.

போட்டிக்கான வகைகள்:-

அரசியல்
சமூகம்
அறிவியல் /நுட்பம்
விளையாட்டு
பொருளாதாரம்/வணிகம்

பரிசுத் தொகை மாற்றங்கள்.

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 2500/- மதிப்புள்ள புத்தகங்கள் (முன்பு 1500)

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1750/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 1000)

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.(முன்பு 500)

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 10 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். (முன்பு 15 பரிசுகளாக இருந்தது)

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 750/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு) - (முன்பு 500)

போட்டியில் பங்கேற்கும் முதல் 50 பேருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
போட்டிக்கு படைப்புக்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30.

மேற்கூறிய மாற்றங்கள் அல்லாத மற்ற விதிகள் முன்பு அறிவித்தவாறே இருக்கும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...