சென்னையில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவேண்டும் எனும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு ஒன்றை தமிழக அரசு அனுப்ப முடிவு செய்ய்துள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.
நடுத்தர மக்களின் நலனும், வியாபாரக் கூடங்களின் நலனும் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இந்த முடிவு என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலமையில் ஒரு கமிட்டி இது குறித்த ஆய்வு ஒன்றை நடத்த அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்புள்ள 75,000 கட்டிடங்களையும் இடிக்கவேண்டும் என்றும் மறுபரிசீலனை மனு செய்யக் கூடாது என்றும் வலியுறுத்திவருகிறார்.
TN to file review petition on illegal constructions issue Zee News
Wednesday, June 6, 2007
ச:அனுமதி இல்லாத கட்டிடங்கள் - மறுபரிசீலனை மனு
Labels:
அரசியல்,
சட்டம் - நீதி,
தமிழ்நாடு
Posted by சிறில் அலெக்ஸ் at 7:38 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
சென்னையில் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்வரை தமிழக அரசு உத்தரவுகள் பிறப்பித்து வந்தது.ஒரு கால கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது.இதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டின் பேரில்,ஒரேஒரு முறை மீண்டும் வரைமுறைப்படுத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அதற்குப்பின் நடந்ததுதான் கூத்து.தமிழக அரசு ஒருமுறை அல்ல,இருமுறை அல்ல,நான்குமுறை பல காலகட்டங்களில் மேற்படி உத்தரவுகள் பிறப்பித்தது.இந்நிலையில் டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் இவ்வுத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடுத்தார்.
இதன் பேரில் ஆஜரான அரசு வழக்குரைஞர் உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தபிறகு அதில் தலையிடுவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.இவ்வாதத்தை ஏற்கமறுத்த உயர்நீதிமன்றம்,ஒருமுறை வரைமுறைப் படுத்தத் தான் உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது என்றும்,தமிழக அரசு தான் மேற்கண்ட உத்தரவை வைத்து நான்கு முறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும்,சென்னை நகரைப் பாழ்படுத்தி விட்டீர்கள் என்றும் சாடி,இத்தகைய கட்டிடங்களை இடிப்பதைக் கண்காணிக்கவும்,செயல்படுத்தவும் ஆணை பிறப்பித்தது.
இது தான் இன்றைய நிலை.இப்போது மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போலத் தமிழக அரசு மீண்டும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்சமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது. ம்!என்ன செய்வது?மக்களின் மறதி தானே அரசியல்வாதிகளின் மூலதனம்!!
இப்போது பந்து உச்சநீதி மன்றத்தில்.
Post a Comment