தென்கிழக்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு வங்கத்தின் கங்கைச் சமவெளியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தின் ْகொல்கத்தா நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் ரயில் மற்றும் விமானப்ْபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டவாளங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததாலும், சிக்னல்கள் பழுதடைந்ததாலும் ரயில் போக்குவரத்து சுமார் மணி நேரம் பாதிக்கப்பட்டதாக ரயில்ْவே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலத்த மழையினால் போதிய வெளிச்சமில்லாததால் சுபாஷ் சந்திர ْபோஸ் சர்வْதேச விமான நிலையத்தில் 1 மணி ْநேரம் விமானப்ْபோக்குவரத்து பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் இருப்பினும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தினமணி
Wednesday, June 13, 2007
மழை: மே.வங்கம் பாதிப்பு
Posted by
வாசகன்
at
10:18 PM
0
comments
எம்.பி-யும் முதல்வராகலாம் - உச்சநீதிமன்றம்.
எம்.பி.,க்கள் மாநில அமைச்சர்களாகவோ, முதல்வராகவோ தேர்ந்தெடுக்கப்படும் போது, அச்சமயம் அவர்கள் தங்களது எம்.பி.,பதவியை துறக்க அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தற்சமயம் எம்.பி.,க்களாகவுள்ள உ.பி., முதல்வர் மாயாவதி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர் எஸ்.சி. மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக அசோக் பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழசு: எம்.பி முதல்வராகலாமா?
Posted by
வாசகன்
at
10:03 PM
0
comments
பிராமண ஏடு தினமலர் - முரசொலி விமர்சனம்
பிராமணர் களால், பிராமணர்களுக் காக, பிராமண ஜெயலலிதாவுக்காக நடத்தப்படுகிற பிராமண ஏடு தினமலர், நாள் தோறும் வாசகர்கள் கடிதம் என்ற பெயரில், தனது ஆசிரியர் குழு மூலம் மொட்டைக் கடிதாசிகளை எழுதி பிரசுரித்து வருகிறது. ஜூன் 11, தினமலர் இதழில், ஒரு கடிதம்... அது, கருணாநிதி ஆட்சியை அந்நியர் ஆட்சி என்கிறது. இந்த அந்நியர் ஆட்சியை அகற்றுவதன் மூலம் தான் நமது பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறது. பார்ப்பன பாரம்பரியத்தைக் காப்பாற்ற, அந் நிய ஆட்சியான தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண் டுமாம்! அக்கிரகாரத்துப் பெருச்சாளிகளின் சிந்தனையும், செயல்பாடும் எந்த அடிப்படையில், எந்தக் கண்ணோட்டத்திலிருக்கிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதையே தான் ஜெயலலிதா, 2006 தேர்தல் பிரசாரத்தின் போது, "நடப்பது தி.மு.க., வுக்கும், அ.தி.மு.க., வுக் கும் இடையிலான போட் டியல்ல; இருவேறு பரம்பரைகளுக்கிடையிலான யுத்தம்' என்றார்...
- நன்றி: தினமலர்
Posted by
சிவபாலன்
at
9:54 PM
9
comments
அமிதாப்பை மிஞ்சிய ரஜினி.
வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி.
மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும், அமிதாப்புக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஸ்கிரீன் பத்திரிக்கை ஆசிரியர் பாவனா செளம்யா, அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற பிரமுகர் சஞ்சய் படோடியா ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர்.
விவாதத்தில் கலந்து கொண்டு சோ பேசுகையில்,ரஜினி அற்புதமான நடிகர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும நடிக்கக் கூடியவர் ரஜினி.
அவரது படங்களுக்கு உலக அளவில் சந்தை மதிப்பு உள்ளது. அவரது செல்வாக்கும் உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. அதேசமயம், அமிதாப் பச்சனின் செல்வாக்கையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றார்
Posted by
வாசகன்
at
7:53 PM
5
comments
ச: திஹார் சிறை: ஏழுநாளில் ஏழுபேர் மரணம்
ஆசியாவின் மிகப்பெரிய சிறையான தில்லி திஹார் சிறையில் தொடரும் சாவுகள், கடந்த ஏழுநாட்களில் ஏழு சாவுகள், மாநில அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்று அங்குள்ள வார்டர் ஒருவர் காசநோயால் இறந்துள்ளார். கடந்த ஆறு நாட்களாக மரணித்தவரின் பாதிப்பால் சிறை நிர்வாகம் தினசரி மருத்துவ பரிசோதனைகளை நடத்திவருகிறது. தவிர கடுமையான கோடைவெயிலை சமாளிக்க குளிர்காற்று சாதனங்களையும் வெளியேற்று விசிறிகளையும் அமைத்து வருகிறது.
இந்த வழமைக்கு மாறான மரணங்கள் தில்லி அரசை நீதிமன்ற விசாரணையை மேற்கொள்ள தூண்டியிருக்கிறது. தேசிய மனித உரிமைக் கழகமும் ஆய்விற்கு உத்திரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் சிறைநிர்வாகத்தையும் மாநகராட்சியையும் விளக்கம் கேட்டுள்ளது.
DNA - India - Death continues to haunt Tihar, govt orders probe - Daily News & Analysis
Posted by
மணியன்
at
7:48 PM
0
comments
சிவாஜி: அந்த ஏழு நிபந்தனைகள்.
புதுச்சேரியில், முருகன், பாலாஜி, ராமன் ஆகிய மூன்று தியேட்டர்களில் சிவாஜி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில்தான் புதுவையில் புதிய படங்கள் திரையிடும்போது, முதல் காட்சியை ரசிகர்களுக்காக போடுவதற்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
ரசிகர்களால் பெரும் ரகளை ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவாஜி படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் உழவர்கரை நகராட்சித் தலைவர் ஜெயபால், ஆணையாளர் தியாகராஜன், 3 தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ரஜினி ரசிகர் மன்றம் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரசிகர்களால் தங்களுக்கும், தியேட்டர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் விளக்கினர். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், 7 நிபந்தனைகளுடன் ரசிகர் காட்சிக்கு அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, தியேட்டரில் சீட்கள் மீது ஏறி நின்று ஆட்டம் போடக் கூடாது, தியேட்டர் திரையில் முத்தம் கொடுக்கக் கூடாது, கற்பூரம் ஏற்றிக் காட்டக் கூடாது, பூக்கள், காகிதங்களைக் கிழித்து போடக் கூடாது, கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் செய்யக் கூடாது. இதை விட முக்கிமயாக எந்தக் காட்சிக்கும் ஒன்ஸ்மோர் கேட்கவே கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.இதை ரஜினி ரசிகர் மன்றம் ஏற்றுக் கொண்டதால், ரசிகர் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Posted by
வாசகன்
at
7:33 PM
1 comments
ஜனாதிபதி தேர்தல் கட்சிகள் வாரியாக ஓட்டுகள் விவரம்
ஜனாதிபதி தேர்தலில் நாடு முவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க் களின் மொத்த ஒட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.ஒவ்வொரு கட்சிகளுக்கும் உள்ள ஓட்டுகள் (ஓட்டு மதிப்பு) விவரம் வருமாறு:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி :-
1. காங்கிரஸ் -2,85,516
2. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு -94,753
3. பகுஜன் சமாஜ் -58,300
4. ராஷ்ட்ரீய லோக் தளம் -30,822
5. தி.மு.க. -29,898
6. தேசியவாத காங்கிரஸ் -24,007
7. பா.ம.க. -8,150
8. புரட்சிக்கர சோசலிஸ்ட்,பார்வர்டுபிளாக் -13,343
9. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி -7,428
10. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -6,452
11. லோக் ஜனசக்தி -4,594
12. மக்கள் ஜனநாயக கட்சி -2,584
13. ஏ.ஐ.எம்.ஐ.எம் -1,456
14. கே.இ.சி. -1,324
15. முஸ்லீம் லீக் -716
16. இந்திய குடியரசு கட்சி (ஏ) -716
17. ஏ.பி.எல்.டி.சி. -208
தேசிய ஜனநாயக கூட்டணி:-
1. பாரதீய ஜனதா- -2,46,593
2. எஸ்.எச்.எஸ். -21,590
3. பிஜு ஜனதா தளம் -19,829
4. அகாலி தளம் -12,728
5. ஜனதா தளம் (எஸ்) -11,938
6. திரிணாமுல் காங்கிரஸ் -7,243
7. தேசிய மாநாட்டு கட்சி -4,164
8. எஸ்.டி.எப். -1,656
9. என்.பி.எப். -1,603
10. எம்.என்.எப். -1,600
11. எஸ்.ஜே.பி. -716
மூன்றாவது அணி மற்றும் இதர கட்சிகள்:-
1. சமாஜ்வாடி -59,757
2. அ.தி.மு.க. -19,328
3. தெலுங்கு தேசம் -14,116
4. இந்திய தேசிய லோக் தளம் -4,944
5. அசாம் கணபரிசத் -4,216
6. ம.தி.மு.க. -3,920
7. தே.மு.தி.க. -176
மாலைமலர்
Posted by
Boston Bala
at
7:28 PM
0
comments
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா?
குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி அணியின் சார்பில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலேசனைகள் நடக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பாஜக கூட்டணி இந்த விஷயத்தில் நிலை தடுமாறி வருகிறது. துணை ஜனாதிபதி ஷெகாவத்தை போட்டியிட வைக்கவுள்ளது அந்தக் கட்சி. ஆனால், அவரை சுயேச்சையாக நிறுத்தினால் பாஜக எதிர்ப்பு அணியின் வாக்குகளும் விழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த கணக்கைக் குலைக்கும் வேலையில் மூன்றாவது அணி இறங்கியுள்ளது.
மூன்றாவது அணி சார்பில் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்தி காங்கிரஸையும் பாஜக அணியையயும் குழப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லா இப்ேபாது ஆஸ்திரேலியாவில் ஓய்வில் இருந்தபடி மூன்றாவது அணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் களத்தில் இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்.
Posted by
வாசகன்
at
7:28 PM
0
comments
சிக்குன் குனியா:மருந்து கடைகளுக்கு எச்சரிக்கை.

தலைமைச் செயலாளர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் தீனபந்து உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் இல்லை. ஆயினும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு மருந்து, மாத்திரை உள்ளது. வருகிற 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தேதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் எல்லா பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வெளி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு சிக்குன் குனியா நோய் அறிகுறி இருந்தால் அருகில் உள்ளமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு முழுவதுமாக நோய் நீங்கி குணமான பிறகுதான் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பப் படுவார்கள். இதற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் எல்லையோர பகுதிகளில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்குன் குனியா நோய் கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூசியா என்ற மீன்கள் பயன்படுகிறது என்று அறியப்பட்டு இருப்பதால் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தவகை மீன்களை வளர்த்து கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிக்குன் குனியா நோய் தடுப்பு மருந்து என்று தனியார் மருந்து கடைகளில் எவரேனும் தன்னிச்சையாக மருந்து, மாத்திரைகளை விநியோகித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி என்ற கிராமத்தில் இறந்தவர் இந்த நோய் தாக்கி இறக்கவில்லை. மூச்சுதிணறல் காரணமாக இறந்தார் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Posted by
Adirai Media
at
7:19 PM
0
comments
அஸ்ஸாம்: மீண்டும் குண்டு வெடிப்பு.
குவஹாத்தி அருகிலுள்ள ஒரு வாராந்திர மொத்த விற்பனைச் சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். காயமடைந்தோர் 42 பேராகும். அவர்களுள் 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இறந்தவர்களில் 55 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுவும் உல்ஃபா பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மரித்தவர்களுக்கு ரூ.3 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.பத்தாயிரமும், சிகிச்சை வசதியும் அளிக்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பி/டி/ஐ செய்தி
Posted by
வாசகன்
at
7:03 PM
0
comments
ச: 'இந்தியன்' தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது
அரசின் தற்காலிகபணி நீக்கம் என்ற கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் இந்தியன் விமானசேவை தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள்.அந்நிறுவனத்தின் மேலாண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் அவர்கள் விமானத்துறை அமைச்சர் பிரஃபுல் படேலுடன் பேச மறுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாததிற்கு அமைச்சரையே காரணம் காட்டுகின்றனர்.
Despite govt rap, 'Indian' employees to continue stir-India Business-Business-The Times of India
Posted by
மணியன்
at
6:44 PM
0
comments
சவூதி: உடல்திறன்வேண்டுவோர் உதவித்தொகை 812 மில்லியன் ரியால்.
சவூதி அரேபியாவில், குடிமக்களில் உடல்திறன் மேம்பட வேண்டியோருக்கான உதவித்தொகையாக 812 மில்லியன் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டன. இதனால் 1,30,000 பேர் பலனடைவர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 486 மில்லியன் ரியால்களுக்கு இது 326 மில்லியன் இவ்வருடம் அதிகமாகும்.
இவர்களுக்கான வருடாந்திர உதவித்தொகை குடும்பத்தைப் பொறுத்து 10,000 ரியாலிலிருந்து 2000 ரியால்கள் வரை வேறுபடுகின்றன.
இந்த உதவித்தொகை பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதாக சவூதி நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அரப் நியூஸ்
Posted by
வாசகன்
at
6:41 PM
2
comments
ச: குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 நடைபெறும்
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நடைபெறும். அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் 16 அன்று வெளியிடப்படும். வேட்புமனுக்களை அளிக்க கடைசி நாள்:ஜூன்30.
ஆய்வு: ஜூலை2
வேட்புமனுவை மீட்டுக் கொள்வதற்கு கடைசி நாள்: ஜூலை 4
Presidential Race India: Patil vs Shekhawat | Current Affairs In India | Current Indian Affairs | Current World Affairs
Posted by
மணியன்
at
6:35 PM
0
comments
ச:குருவாயூர் கோவில் சம்பவம்: தேவஸ்வம் போர்ட் மன்னிப்பு கேட்டது
குருவாயூர் கோவிலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் வயலார் இரவியின் மகன் ரவி கிருஷ்ணா குழந்தைக்குப் பெயரிட வந்தபோது 'சுத்தப் 'படுத்திய நிகழ்விற்காக அதன் தேவஸ்வம் போர்ட் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
அவரின் மதம் பற்றி சரியாகத் தெரியாததாலேயே இத்தவறு நிகழ்ந்ததாக கோவில் அதிகாரிகள் கூறினர். மேலும் 'ஆசார்ய சதஸ்' ஒன்று நடத்தி கோவில் வழக்கங்களில் மாறுதல்கள் பற்றியும் விவாதிக்க இருப்பதாகவும் 'தேவ பிரச்னம்' நடத்தி குருவாயூரப்பன் நடந்த நிகழ்ச்சிகளால் பாதிக்கப் பட்டிருக்கிறானா என்றும் போர்ட் தலைவர் தோட்டத்தில் ரவீந்திரன் கூறினார்.
Guruvayoor board apologises to Vayalar Ravi's son - Yahoo! India News
Posted by
மணியன்
at
6:08 PM
0
comments
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் மாநாட்டு பேனர் கிழிப்பு.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு கடைதெரு, பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பு சார்பில் ஒரு பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. பேனரில் ஜுன் 17-ந் தேதி நெல்லையில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார் என்றும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் எழுதப் பட்டு இருந்தது.இந்த நிலையில் இந்த மாநாட்டு வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பாளர் சரவணன் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில் கடந்த ஜனவரி மாதம் அதே போல் இங்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனரை சிலர் கிழித்து தகராறு செய்தனர்.அந்த கோஷ்டியினரே தற்போதும் பேனரை கிழித்து இருக்காம் என்று தெரிவித்து உள்ளார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் பாப்பாநாடு, ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Posted by
Adirai Media
at
2:11 PM
0
comments
ஜெ மீது நடவடிக்கை : நீதி மன்றம் உத்தரவு
2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடத்தில் போட்டியிட்டதற்காக அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளார் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 'சற்றுமுன்' உத்தரவிட்டிருக்கிறது.
Posted by
பொன்ஸ்~~Poorna
at
1:54 PM
7
comments
வேகமாய் பரவும் சிக்குன்குனியா.

Posted by
Adirai Media
at
1:17 PM
0
comments
ஜார்ஜ்புஷ்ஷின் கைகடிகாரம் அபேஷ்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷின் கை கடிகாரம் பறிப்பு.அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் அரசு முரை பயணமாக அல்பெனியா நாட்டிற்க்கு சென்றார் அங்கு ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஜார்ஜ்புஷ் பொது மக்களை நேரில் சந்திப்பதற்க்காண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது ஜார்ஜ்புஷ் அனிந்திருந்த கைகடிகாரத்தை ஒரு மர்மநபர் பறித்ததாக தனியார் தொலைகாட்ச்சி செய்தி ஒன்றில் கூறப்பட்டது.ஆனால் இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
சன் தொ.கா செய்தி.
Posted by
Adirai Media
at
10:56 AM
4
comments
விமான நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்.
திடீர் வேலைநிறுத்தம்
ஆனால் இந்த பேச்சுவார்த்தை நேற்று முறிந்தது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த உறுதிமொழியில் இருந்து நிர்வாகம் பின் வாங்குவதாக கூறி, இந்தியன் விமான நிறுவன ஊழியர்கள் நேற்று இரவில் நாடு தழுவிய அளவில் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இதுபற்றி விமான கழக ஊழியர்கள் சங்க பொது செயலாளர் ஜே.கே.படோலா கூறுகையில்; நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், அனைத்து ஊழியர்களும் இரவு 9.30 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் சோதனை செய்யும் ஊழியர்கள் முதல் விமானங்களில் சரக்கு ஏற்றும் பணியாளர்கள் வரை பங்கேற்று உள்ளனர் என்று தெரிவித்தார்.
விமான சேவை பாதிப்பு`இந்தியன்' ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தினால் நேற்று இரவில் சென்னை, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Posted by
Adirai Media
at
10:24 AM
0
comments
தில்லியில் போலீஸ்-மக்கள் மோதல்
தென்மேற்கு தில்லியில் விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
விமான நிலையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி ஷஹாபதா கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்கள் ஏற்றிவந்த டிராக்டருக்கு தீவைத்த ஒரு கும்பல், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
தினமணி | 20 injured in mob fury, police action near Delhi airport- Hindustan Times
Posted by
Boston Bala
at
1:46 AM
0
comments
b r e a k i n g n e w s...