.

Thursday, May 31, 2007

ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்!

எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

ஹிந்து தனியார் சட்ட வாரியத்தின் அஷோக் பாண்டே என்பவர் இவ்வாறு மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தின் வழிகாட்டும் ஆணையை அளிக்கும் படி அவர் கோரியுள்ளார். மாயாவதியுடன், அவர் அமைச்சரவையிலுள்ள சதீஷ் சந்திர மிஸ்ரா என்பவரும் இதில் பிரதிவாதியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சட்ட மன்ற தேர்தலில் நிற்கும் முன் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை விட்டும் இவர்கள் விலகவில்லை என்பது அடிப்படை குற்றச்சாட்டு!

பி.டி.ஐ செய்தி

1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

முன் நிகழ்வு ஒன்று உள்ளதே!

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது நினைவில் உள்ளதா?

அச்சமயத்தில் எம்.பி யாக இருந்த ஒருவர் ஒரு மாநில முதல்வராகவும்
இருந்தார்(அனேகமாக ஆந்திராவின்
ஜனார்த்தன ரெட்டி[காங்] என்று நினைக்கின்றேன்)

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது
வாக்களிப்பதற்கு அவரை அனுமதிக்கலாமா என்பதுபற்றி நீண்ட விவாதம் நடைபெற்று அனுமதிக்கப்பட்டார்

வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகள்
தடைசெய்யப்பட்டுள்ள தற்சமயம்
இதன் தீர்வு எப்படி இருக்கும்?

-o❢o-

b r e a k i n g   n e w s...