.

Thursday, May 31, 2007

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி வகுப்பு - PHOTO


தமிழக அரசின் புதிய சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடக்கிறது.இங்குள்ள இந்து அறநிலையத்துறை வைணவ அர்ச்சகர் பயிற்சி மாணவர் இல்லத்தில் இதற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது.வெளியூர் மாணவர்களும் தங்கி பயில உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் 10 ம்வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பயிற்சி பெறுகிறார்கள் . பயிற்சி வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.


நன்றி: "தினகரன்"

3 comments:

சிவபாலன் said...

தமிழக அரசிற்கு வாழ்த்தும் நன்றியும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிபா

கண்ணுக்கு இனிய காட்சி.
நடைமுறைப் படுத்தி நடத்தும் தமிழக அரசுக்கும், எம்பெருமானார் ராமானுச ஜீயர் மடத்துக்கும் நன்றிகள் பல!

இழி குலத்தவர்கள் இல்லை
எம் அடியார்கள் ஆகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின்.
வழிபட அருளினாய் போம்
அரங்க மா நகர் உளானே!
என்ற ஆழ்வார் பாசுரத்தை உணர்ந்து செய்துள்ளார்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்குள்ள இந்து அறநிலையத்துறை...மாணவர் இல்லத்தில் இதற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது//

படத்தில் உள்ளது மாணவர் இல்லம் இல்லை சிபா.
திருவல்லிக்கேணியில் உள்ள எம்பெருமானார் ராமானுச ஜீயர் மடம் அது! சுவற்றின் மேலே பார்த்தால் தெரியுது பாருங்க! :-)

இதன் ஜீயர் அரசு ஆணைக்கு முன்னரே,
சுமார் முப்பது ஆண்டுகளாக, இது போல் செய்து வருகிறார்!
இவரைத் தான், கலைஞர் பாடத் திட்டம் வகுக்கவும் கேட்டுக் கொண்டார்.

இம் முயற்சிகள் பெயர் அளவில் இல்லாமல், பெயர் சொல்லும் அளவில் நிலைக்க வேண்டும் என்பது தான் ஆசையும், பிரார்த்தனையும் கூட!

-o❢o-

b r e a k i n g   n e w s...