.

Wednesday, August 15, 2007

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்

சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.

பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.

தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமணியிலிருந்து நேரடி பதிப்பு செய்யப்பட்டுள்ளது

இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்

கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தற்போது இவை கூகிள் ஆய்வகத்தில்(Labs) இருக்கின்றன.

தமிழ் உட்பட்ட 14 மொழிகளில் தேட தட்டச்சுக் கருவிகளை குறுங்கருவிப் பட்டைகளாக(Gadgets/Widgets) பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட கூகிள் துவக்கப் பக்கத்தில் (iGoogle Personalized page) இந்தக் கருவிப் பட்டைகளை நிறுவி ஒருங்குறியில்(Unicode) தேடலாம்.

மேலும் ஆங்கிலவழியில் ஹிந்தியில் தட்டச்சவும் ஒரு கருவியை கூகிள் உருவாக்கியுள்ளது.

இந்திய மொழிகளில் தேடும் கருவிக்கு இங்கே சுட்டவும்

ஹிந்தி தட்டச்சுக் கருவிக்கு இங்கே சுட்டவும்.

Flash News: இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

மெல்போர்ன் :அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் அளிக்கும் யுரேனியத்தை கொண்டு இந்தியா அணு ஆயுதம் தயாரிக்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்க தங்களது ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா நிபந்தனை விதித்துள்ளது.

- நன்றி: தினமலர்

சவூதி: இன்று இந்தியாவுக்கு 50% தொலைபேசி கட்டணச்சலுகை.

இந்தியாவின் இனிய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சவூதிஅரேபிய தொலைதொடர்புத்துறை
இன்று 24 மணி நேரத்துக்கு இந்தியாவுக்கான தொலை அழைப்புகளுக்கு 50% கட்டணக்குறைப்பு செய்து தன்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

இதே போன்ற சலுகை ஆகஸ்ட் 14ல் பாக்கிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 17ல் இந்தோனேசியாவுக்கும் வழங்கப்படுகிறது.

லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்.
மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த மாதகாலத்தில் இரண்டாவது முறையாக தன் பொம்மைகள்ளை திரும்பப்பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மாட்டெலின் பங்குகள் இன்று 6% சரிந்தன.

Mattel Recalls Chinese Toys, Second Time in Two Weeks (Update4)Bloomberg
Mattel recalls 18m more Chinese toys ABC Online
UPDATE 3-Mattel recalls millions more Chinese-made toys Reuters.uk

ஈராக்கில் 175பேர் பலி

ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கில் யாஜிடீக்கள் எனும் பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

At least 175 killed in north Iraq bombings: army - ்Reuters

சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்்

சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்.. இதோ போட்டி முடிவுகள் வந்துவிட்டன.

எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பு இல்லை என்றே நினைத்தோம். செய்திவிமர்சனம் என்பது பதிவர்களுக்கு எளிதாய் வரவேண்டிய ஒன்று. ஒரு மாத காலத்தில் ஏதேனும் ஒரு செய்தி நம்மை பாதிக்கும். அதுகுறித்து குறைந்தது இரண்டு கருத்துக்களாவது நமக்குத் தோன்றும். அதை உங்கள் பாணியிலே எழுத வேண்டியதுதான் மிச்சம். உலக அரங்கில் வலைப்பதிவர்களில் பெரிதாக கவனிக்கப்படும் விதயங்களி ஒன்று செய்தி விமர்சனம்.

அதிக பங்கெடுப்பு இல்லை என்பதால் பரிசு அறிவிப்பில் சில (நல்ல) மாற்றங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் சிறப்பான பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.


முதல் பரிசு சேவியர் - தலைமுறையை முடமாக்கும் குளிர்பானங்கள்
ரூ. 2500 மதிப்புள்ள புத்தகங்கள்



இரண்டாம் பரிசு வெயிலான் கனியா கனி்களும், கண்ணாடி கனவுகளும்…..
ரூ. 1750 மதிப்புள்ள புத்தகங்கள்



மூன்றாம் பரிசு 1 சி.வி.ஆர் வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 4
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள்




மூன்றாம் பரிசு 2 உண்மைத் தமிழன் அடுத்த ஜனாதிபதி யார்? கட்சிகள் போடும் ஜிங்சாங்.. ஜிங்சாங்..
ரூ. 1000 மதிப்புள்ள புத்தகங்கள



ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் இரண்டு படைப்புக்களுக்கு ரூ500 வீதம் பரிசுக்கள் அறிவித்திருந்தோம். போட்டி வலுவாயில்லாததாலும் இந்த முயற்சியில் தனித்தன்மையோடு வந்து பங்களித்தவர்கள் எல்லோருமே வெற்றியாளர்கள் என்கிற உண்மையை விளக்கவும் பங்களித்த எல்லோருக்குமே ரூ. 400 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு.

போட்டியில் பங்கெடுத்து பரிசுபெறுபவர்கள்.
பெனாத்தல் சுரேஷ்(விக்கி பசங்க சார்பில்)
நாகை சிவா
லோகேஷ்
கதிரவன்
வெட்டிப்பயல்
ஷைலஜா
சந்தோஷ்
சத்தியா
வவ்வால்
தென்றல்
இலவசக் கொத்தனார்
மகேஷ்
உலகம் சுற்றும் வாலிபி
ஜீ
அருண பாரதி
இளா

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டி சிறக்க முயற்சிகள் மேற்கொண்ட சற்றுமுன் குழு நண்பர்களுக்கு நன்றி. எங்களோடு பரிசுகளை வழங்க முன்வந்த மாற்று குழுவுக்கு நன்றி. புத்தகங்களை வழங்க முன்வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...