.

Wednesday, August 15, 2007

ஈராக்கில் 175பேர் பலி

ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கில் யாஜிடீக்கள் எனும் பழங்குடியினர் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

At least 175 killed in north Iraq bombings: army - ்Reuters

4 comments:

வடுவூர் குமார் said...

இங்கு செய்தியில் சொன்னது.யாஜிடிகள் இஸ்லாத்துக்கு முந்தைய மதத்தில் இருப்பவர்களாம்,சமீபத்தில் இவர்கள் பெண்ணை சன்னி பையனுக்கு மணமுடிக்க மறுத்து அந்த பெண்ணை கல்லெரிந்து கொன்றதால் ஏற்பட்ட நிகழ்வாம் இது.
கேட்கவே கொடுமையாக இருந்தது.
இராக் எப்போது அமைதியாக இருக்கும்??

Anonymous said...

"இராக் எப்போது அமைதியாக இருக்கும்??"

Summa irunda sanga oothi keduthathu yaaru?. when the Iraq will get Peace ? Answer for this question is , America and its coalition troops should getout from there and the president of iraq should rule like Sadaam.It means the birth of New sadaam will give a peace to iraq.

சீனு said...

யார் மேல இருக்கிற கோவத்த யாரு கிட்ட காட்டுறாங்க? அப்பாவி பொதுமக்கள் தான் கிடைச்சாங்களா? போயி அங்க இருக்கிற அமெரிக்க ராணுவ வீரர்கள எதிர்க்க வேண்டியது தான! லூசு பயலுங்க.

Anonymous said...

இராக்கில் இன்று தவிர்க்க முடியாததாகி விட்ட உள்நாட்டுப்போருக்கு அமெரிக்காவின் எண்ணைத்தாகம் தான் காரணம்.
இராக் என்றில்லை, இந்தியாவாக இருந்தாலும் கனிமவளமோ, எண்ணையோ நிறைந்துவிட்டால் இதே கதிதான்.
இதைவிளங்கிக்கொள்ளாமல் 'அவர்கள்'தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றால்... அமெரிக்காவுக்கு ஆதரவாக எழுதநினைத்து பலிகடாக்களை வசைபாடுபவர்கள் தான் உண்மையிலேயே.....

-o❢o-

b r e a k i n g   n e w s...