.

Sunday, July 8, 2007

இராக்கில் இன்றைய வன்முறையில் பலர் பலி

இராக்கின் ஃபலுஜா நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில் இராணுவத்தில் சேர்வதற்காக காத்திருந்தவர்களில் குறைந்தப்பட்சம் 23 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹஸ்வா நகரத்தில் இருக்கின்ற இராணுவ ஆள் சேர்ப்பு மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அருகில் இருக்கின்ற கார்மா நகரத்தில் பொலிஸ் சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட வேறு ஒரு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதேநேரம், தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தப்பட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

- BBC Tamil

115 are killed in north Iraq as blast hits Shi'ite village - The Boston Globe: Insurgents seen moving attacks from Baghdad

ABC News: Series of Iraq Blasts Kill at Least 140

தொடர்ந்து ஐந்தாவது முறையாக விம்பிள்டனை வென்றார் ரோஜர் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர் 7-6 (9-7), 4-6, 7-6 (7-3), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தி விம்பிள்டனை வென்றார். ஃபெடரருக்கு இது பதினொன்றாவது கிரான்ட் ஸ்லாம் வெற்றியாகும்.

2003 -ல் வெல்ல ஆரம்பித்தவர் ஐந்தாண்டுகளாகத் தொடர்ச்சியாக வாகை சூடி போர்க் (Bjorn Borg) -இன் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

Five for Federer: Swiss star wins Wimbledon - 07/08/2007 - MiamiHerald.com

சினிமாக்காரர்கள் அறிவுஜீவிகள் அல்லர்: ராமதாஸ்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சனிக்கிழமை நடத்திய "மாற்றுத்திரை குறும்பட, ஆவணப் படத் துவக்க விழாவில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்கள் புதிய வேகத்துடன் நல்ல குறும்படங்களை தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறும்பட, ஆவணப் படங்கள் தயாரிக்க அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் .

இன்றைய தமிழ் சினிமாவைப் பற்றி நான் மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவும், சினிமாக்காரர்களும் நம் இளைஞர்களையும், தமிழக மக்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் யதார்த்தத்தைதான் சொல்கிறோம் என்கிறார்கள். உண்மையில் குறும்பட, ஆவணப் படம் எடுக்கும் படைப்பாளிகள்தான் யதார்த்தத்தை சொல்கிறார்கள்.

குறும்படங்கள் தயாரிக்கிறவர்கள் மாவட்டங்கள் தோறும் குழுக்கள் ஏற்படுத்தி அனைவரும் பார்க்கின்ற வகையில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்த முயற்சியில் இறங்கினால் சினிமா மோகத்தில் சீரழியும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகளிலும் குறும்படங்களைத் திரையிட வேண்டும்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட பேச்சுத் தமிழ், இயல்புத் தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல தமிழில் குறும்படங்களைத் தயாரித்து சமுதாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக இளைஞர்கள் மன்றங்களை அமைக்க வேண்டும். குறும்படங்களை ரசிப்பவர்கள்தான் உண்மையான ரசிகர்கள். சினிமாவுக்கு மன்றங்கள் வைப்பவர்கள் முட்டாள்கள். குறும்பட, ஆவணப் படங்களுக்கு மன்றம் வைத்தால் நானே நேரில் வந்து திறந்து வைக்க தயாராக இருக்கிறேன் என்றார் ராமதாஸ்.

தினமணி

தீரன் சின்னமலை வரலாறை திரைப்படம் எடுக்க அரசு நிதிஉதவி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் இளங்கோவன்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க, அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவது தொடர்பாக, ஈரோடு கொங்கு கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: வடமாநிலங்களில், தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றிக் கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என அவர்கள் நினைக்கின்றனர்.

ஜான்சிராணி, பகத்சிங் போன்ற தியாகிகளை மட்டுமே அவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தீரன் சின்னமலை, வாஞ்சிநாதன் ஆகியோரை வடமாநிலத்தவர்கள் அறியும் வகையில் பரப்ப வேண்டும். தீரன் சின்னமலை வரலாறை திரைப்படமாக எடுக்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும். சமுதாயப் படம் என்றால்தான் சிறப்பாக ஓடும்; சரித்திரப் படம் ஓடாது என்ற நிலையை மாற்ற வேண்டும். நடிகர் வடிவேலு நடித்த சரித்திரப் படம் அண்மையில் சிறப்பாக ஓடியது என்றார்.

தினமணி

புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு

பல கோடி மனிதர்களின் பங்களிப்பில் இணையத்தில் கருத்துக் கணிப்பு நிகழ்த்திய ஆய்வில் புதிய ஏழு உலக அதிசயங்களாக அறிவிக்கப்பட்டவை:
1.தாஜ் மஹால், இந்தியா
2.சீன நெடுஞ்சுவர், சீனா
3.பெட்ரா, ஜோர்டன்
4.கிறிஸ்துவின் சிலை, பிராசில்
5.சிசென் இட்சாவிலுள்ள மாயன் அழிவுகள்,மெக்சிகோ
6.மாச்சு பிச்சு, இங்கா பேரரசின் மலைவாழ் குடியிருப்பு, பெரு
7. கொலொசியம்,ரோம்,இத்தாலி
இதற்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும்...World | Africa - Reuters.com

சென்னையில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி சந்திப்பு

மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாறு ஜெயலலிதாவுக்கு, அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. இச்சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் மம்தா பேட்டியளித்தார். மேற்கு வங்கத்தில் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது. மாநிலத்தில் நடந்த நந்திகிராம், சிங்குர் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்துப் பிரமாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் சார்பில் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்திற்கு வருகை புரியுமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

மேலும், ஜெயலலிதாவும் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கான தன் ஆதரவு எப்போதும் உள்ளதாக தெரிவித்தார். இச்சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் குறித்துக் கலந்தாலோசிக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்தான அவரவர் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வு ஜனாதிபதி அப்துல் கலாம் தான். எதிர்பாராதவிதமாக அவர் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார் என்று கூறினார்.

பாக்கிஸ்தான்: தீவிரவாதிகளுக்கு முஷாரப் எச்சரிக்கை!

செம்மசூதியிலிருந்தபடி தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுவோருக்கெதிராக பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சரணடையுங்கள், இல்லையேல் சுட்டு வீழ்த்தப்படுவீர்கள்" என்று முஷாரப் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
'அமைதிக்கும் நாட்டின் சட்டத்திற்கும் எதிராக ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது" என்றார் அவர்.

மேலும் படிக்க...TOI

நாலு கால்களுடன் பிறந்த குழந்தை.

அரிய நிகழ்வாக தென் ஆஃப்ரிக்க தலைநகர் பிரிட்டோரியாவின் புறநகர் பகுதியில் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருக்கிறது.

தென் ஆஃப்ரிக்காவின் தேசிய வானொலி நிலையம் இச்செய்தியை அறிவித்துள்ளது.

கூடுதல் உறுப்புகளுடன் பிறப்பதை மருத்துவ அறிவியலில் "பாலிமிலியா" என்றழைக்கப்படுகிறது.

இதே போன்ற நிலையில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் ஜாம்பியாவிலும் குழந்தை பிறந்துள்ளது.

Child born with four legs in South African town

ரிலையன்ஸ்ஸுக்கு எதிராக இராமதாஸ் அறிக்கை.

ரிலையன்ஸ் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த பெரிய தொழிலாக சில்லரை வணிகம் உள்ளது. தங்களது சக்திக்கு எட்டிய வரையில், சிறு சிறு கடைகளை வைத்து வணிகம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள்தான் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கடைகளில் அவற்றின் அளவைப் பொருத்து மேலும் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர கடைகளுக்குச் சரக்குப் போடுவது, பணம் வசூலிப்பது உள்ளிட்ட வேலைகளிலும் ஏராளமானவர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் சில்லரை வணிகர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் பல லட்சம் பேர் இந்த சில்லரை வணிகத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

ரிலையன்ஸ் போன்ற இங்குள்ள நிறுவனங்களும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு சில்லரை வணிகத்தில் ஈடுபட்டால், தற்ேபாது சில்லரை வணிகத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பறிபோய் நடுத்தெருவுக்கு வரும் நிலை உருவாகும்.

இதைத் தடுத்து நிறுத்தக் கோரி தொடர்ந்து பாமக போராடி வருகிறது. ஆனாலும் தமிழகத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.

கேரளாவில் புதிதாக ரிலையன்ஸ் கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளை மூடி விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையை இங்கும் எடுக்க வேண்டும்.

அல்லது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளதுபோல, ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்ற தடையையாவது விதிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் மண்ணின் மைந்தர்களான சில்லரை வணிகர்களையும், அவர்களை நம்பி வேலை பெற்று வரும் பல லட்சம் பேரையும் காக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தட்ஸ் தமிழ்

வீதியில் யானை: பீதீயில் மக்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை திடீரென வீதிகளில் ஓடியதால் மக்கள் பீதியடைந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள பெண் யானை கட்டப்படும் இடத்தை சுத்தம் செய்வதற்காக யானையை பாகன் அழைத்து சென்றார். அப்போது யானை திடீரென பாகன் பிடியிலிருந்து விடுபட்டு ஓட ஆரம்பித்தது.

இதையடுத்து யானையின் காலில் உள்ள இரும்புச் சங்கிலியைப் பிடித்து பாகன் இழுத்தார். ஆனால் அதற்கும் கட்டுப்படாமல் ஓடியது அந்த யானை.

திடீரென சாலையில் யானை ஓடி வருவதைப் பார்த்த பக்தர்களும், மக்களும் அலறி அடித்து அங்குமிங்கும் ஓடினர். வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர்ந்து பாகனும் விரைந்து வந்தார்.

ஓடிய யானை ஒரு மரத்திற்குக் கீழே போய் நின்று கொண்டது. அந்த யானையை பாகன் சமாதானப்படுத்தி, அழைத்துச் சென்றார். அதன் பிறகுதான் யானை பீதி விலகியது.

தட்ஸ் தமிழ்

20-20 உலகக் கோப்பை: சச்சின், திராவிட், கங்குலி இல்லை

தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற உள்ள 20-20 சுற்று உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் விலகியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் புறக்கணிக்கப்பட்ட சேவக், ஹர்பஜன் சிங் மீண்டும் உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக காயம் மற்றும் மோசமான திறன்நிலை (ஃபார்ம்) காரணமாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, முனாப் படேல், முகமது கைப், ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர, மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டவர்கள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர்.

உத்தேச அணியில் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனிருதா ஸ்ரீகாந்த்(தமிழகம்), யூசுஃப் பதான் (பரோடா), நீரஜ் படேல்(குஜராத்), கரன் கோயல்(பஞ்சாப்), நிரஞ்சன் பெஹேரா (ஒரிசா), பிரவீன் குமார் (உத்தரபிரதேசம்), அபிஷேக் ஜுன்ஜுன்வாலா(பெங்கால்), சட்டீஸ்வர் புஜாரா(சவுராஷ்டிரா) ஆகிய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக அணியில் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதி அணி வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

அணியில் அறிமுக வீரர்களுக்கு அதிக வாய்ப்பு குறித்து தேர்வுக் குழு தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் தாமாகவே விருப்பப்பட்டு விலகியுள்ளனர். தமது விருப்பத்தை இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் என்னிடம் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்

தினமலர்

பணிபுரியும் பெண்கள்: விரைவில் பாதுகாப்பு சட்டம்.

பணியாற்றும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை தடுக்க வகை செய்யும், பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளது. பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்கள் இனி, கணிசமான அளவில் அபராதம் செலுத்த வேண்டும்.

வீடுகளில் கணவனின் கொடுமைக்கு ஆளாகும் மனைவிகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சமீபத்தில் குடும்ப வன்முறை சட்டம் கொண்டுவரப்பட்டது. குடித்து விட்டு வந்து மனைவிகளை அடித்து உதைத்து கொடுமைப் படுத்திய பல கணவர்கள் தற்போது இந்த சட்டத்தின் பலனாக கம்பி எண்ணி வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசின் கவனம் தற்போது பணிபுரியும் பெண்களை நோக்கி திரும்பியுள்ளது. சக ஆண் ஊழியர்கள் அல்லது உயரதிகாரிகள், மூன்றாம் நபர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. புகார் செய்தால் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பல பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என பெண்கள் அமைப்புகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தன.

விசா மோசடி: விமான நிலைய ஊழியர் கைது.

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது43). இவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனால் அவருக்கு விமான நிலைய அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதைப்பயன்படுத்தி திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் வெளிநாடு செல்ல விசா வாங்கி தருவதாக கூறி உள்ளார். அவர் விமான நிலைய ஊழியராக இருந்ததால் அவரை நம்பி 100க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து உள்ளனர். ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.1 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விசா வாங்கியவர்கள் விமான நிலையம் சென்றதும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் அவை போலி விசா என்பது தெரியவந்தது அவர்கள் இது குறித்து விஜயகுமாரிடம் கேட்டால் கஸ்டம்ஸ் அதிகாரியாக தற்போது உள்ளதாகவும் மீண்டும் விரைவில் விசா ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரிடம் விசா வாங்கி ஏமாந்த ஒருவர் இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்பு போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலைமலர்

மேற்குவங்கம்: கடும் மழையால் 43 இலட்சம் மக்கள் பாதிப்பு.

கடந்த சில நாட்களாக, வட இந்திய மாநிலங்களில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கத்தக்கதாக மழை வெள்ளத்தின் வீச்சு இருந்தது.

மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் 8 மாவட்டங்களில் வெள்ள நிலைமை மிக மோசமாக இருக்கிறது. இங்கு 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்காளத்தில் மழை வெள்ளத்துக்கு 27 பேர் பலியாகிவிட்டார்கள்.

மேற்கு மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கிராங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதே போல் ஒரிசா மாநிலத்தில் பாலாசூர், பத்ராக் மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

உலக அதிசயங்கள்: தாஜ்மஹலுக்கு முதலிடம்

உலக அதிசயங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த தனியார் "அற"க்கட்டளை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் தாஜ்மஹால் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது இந்தியர்களிடையே மகிழ்ச்சியையும், இந்தியாவெங்கும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்ற உலக அதிசயங்கள் - அவை பெற்ற வாக்கு அடிப்படையில்:

2. சிஜன் இட்சா பிரமிடு - மெக்சிகோ

3. ரெடிமர் ஏசு சிலை -பிரேசில்

4. சீனப்பெருஞ்சுவர்

5. மெசுபிச்சு - பெரு

6. பெத்ரா-ஜோர்டான்

7. ரோமன் கொலேசியம்-இத்தாலி

வன்முறைப் பேச்சு: உமாபாரதி மீது தமிழ்நாட்டில் வழக்கு.

பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து பாரதீய ஜனசக்தி என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்த சாமியாரிணி உமாபாரதி ராமேஸ்வரத்தில், பாரதீய ஜனசக்தி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், ராமர் பாலத்தை பாதுகாக்கவும் பாரதீய ஜனசக்தி சார்பில் ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி சேது சமுத்திர கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.

ஒரு வாரத்துக்குள் கால்வாய் தோண்டும் பணியை அரசு நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் உயிரை பறிக்கவும் தயங்கமாட்டோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உமாபாரதி மீது வன்முறையை தூண்டும் விதமாகவும், பொதுஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக இந்திய தண்டனை சட்டம் 153ஏ மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணம்.

புற்றுநோய் தாக்குதலால் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இன்று காலை 08:45 மணியளவில் மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 80 ஆகும்.
கடந்த மூன்று மாதங்களாக டெல்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவரது உடல் டெல்லியில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உடலுக்கு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சந்திரசேகர் உடல் தகனம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

சந்திரசேகர் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 21-ந்தேதி வரை பிரதமராக பதவி வகித்தார்.

வி.பி. சிங் அரசு கவிழ்ந்ததால் சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆனார். அதன் பிறகு காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவி இழந்தார். பொது தேர்தல் வரை பிரதமராக நீடித்தார்.

பிரதமர் மன்மோஹன் சிங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

எட்டு வயதில் தந்தையை பிரிந்து 23 வருடத்துக்குப்பின் கண்டுபிடித்த பெண்.

எட்டு வயதில் தந்தையைப் பிரிந்த பெண் 23 வருடங்களுக்குப்பிறகு தந்தையை துப்பறியும் நிறுவனம் உதவியுடன் கண்டு பிடித்து மகிழ்ந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த ஊரிகை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நஜிமா (வயது32) இவர் சவுதிஅரேபியாவில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து வசதியான வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இவரது இளமை காலத்தில் தந்தை சகோதரிகளுடன் கஷ் டப்பட்டு வாழ்க்கை நடத்தினார். சென்னையில் பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து பிழைத்தார். கடைசியாக ஒரு பிராமணர் வீட்டில் வேலைக்கு சேர்ந்த நஜிமா அவர்கள் மூலம் சவுதிஅரேபியாவைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்தார். 2குழந்தைகள் உள்ளனர். சவுதியிலேயே வசித்து வருகிறார்.

தற்போது நஜிமாவுக்கு 32வயதுஆகிறது. இவருக்கு நீண்ட நாட்களாக தந்தையையும், சகோதரிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை. இதற்காக பிரார்த்தனை நடத்தினார். அது வீண்போகவில்லை. தந்தையை கண்டுபிடித்து விட்டார்.

சென்னையைச் சேர்ந்த சன் டிடெக்டிவ் நிறுவனம் பற்றி கேள்விப்பட்டு போன் மூலம் தந்தையை பற்றிய விவரங்களை தெரிவித்து தேடும் பணியில் ஈடுபட்டார். தந்தையின் பெயர் இப்ராகிம்செரீப், வாய் பேச முடியாத ஊமை என்று மட்டும் தெரியும். 2சகோதரிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

ஊர் பெயர் காஞ்சீபுரம் அருகே உள்ள அண்ணாநகர் என்றும் கூறினார்.

இந்த தகவல்களை வைத்து துப்பறியும் நிறுவனம் நஜிமாவின் தந்தையை தேடும் பணியில் இறங்கியது. ஒரே வாரத்தில் அவரை தேடிகண்டு பிடித்து விட்டனர்.

தந்தை இப்ராகிம் செரீப் ஆற்காட்டில் உள்ள ஒரு ஓட் டலில் வேலை பார்த்து வந் தார். அங்கு துப்பறியும்நிறுவ னத்தினர் சென்று மகள் நஜிமா சவுதியில் இருப் பதாக தெரிவித்தனர்.இதை கேட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இப்ராகிம் செரீப் முதலில் பீடிசுற்றும் தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி ரொக்காயா பீ இறந்து விட்டதால் 3 மகள்களுடன் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத் தினார்.

3 மகள்களும் வெவ்வேறு இடத்தில் வீட்டு வேலை செய்தனர். நஜிமாவுக்கு 8வயதான போது தந்தை சகோதரிகளை சந்திக்க முடி யாதபடி பிரிந்து விட்டார்.

முதலில் போலீஸ்காரர் ஒருவர் வீட்டிலும், தொடர்ந்து விமானப்படை அதிகாரி, முஸ்லிம் பிரமுகர் வீடுகளில் வேலை பார்த்தார். கடைசியாக சென்னையைச் சேர்ந்த பிரா மணர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்த நஜிமா அவர் மூலம் தொழில் அதிபரை மணந்து உயர்ந்து நிலையை அடைந்தார்.

மேலும் படிக்க...

-o❢o-

b r e a k i n g   n e w s...