.

Friday, July 20, 2007

தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். எனவே அரசே கேபிள் டி.வி.யை ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கேபிள் டி.வி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்த தொழில் நுட்பத் துறை அதிகாரிகளை முதல்- அமைச்சர் கருணாநிதி அனுப்பி வைத்தார்.

அப்போது டாக்டர்ராமதாஸ் "தமிழ்நாட்டில் கேபிள் டி.வி. தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டுமானால் எல்லா கேபிள் டி.வி.க்களையும் அரசே கையகப்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்'' என்று ஆலோசனை தெரிவித்தார்.

தனியார் கேபிள் டி.வி.க் களை கையகப்படுத்தும் பட்சத்தில் அதில்சட்ட சிக்கல்கள் எழலாம் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

புதிய கேபிள் டி.வி.யை தமிழக அரசு சொந்தமாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த கேபிள் டி.வி.யையும் அரசு கையகப்படுத்த முடியாது. அது தேவை இல்லாத சட்ட பிரச்சினைகளை உருவாக் கலாம். எனவே தான் அரசே சொந்தமாக கேபிள் டி.வி.தொழிலில் ஈடுபடுகிறது.

'டாஸ்மாக்' போல கேபிள் டி.வி.யும் தமிழக அரசுக்கு அதிக வருமானத்தை பெற்றுத் தரும். முதல் கட்டமாக கேபிள் டி.வி. தொழில் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வருமானம் அரசின் மேம்பாட்டு பணிகளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் தற்போது முதல் கட்ட அளவில் தான் உள்ளது.

புதிய கேபிள் டி.வி.யை அமல்படுத்த கால நிர்ணயம் எதுவும் செய்யவில்லை. அரசின் கேபிள் டி.வி.யை சிறப்பாக கூடுதல் லாபத்துடன் இயங்க வைக்கும் வழிகள் குறித்து தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுடன் நாங்கள் கருத்து கேட்டு இருக்கிறோம்.

நிபுணர்களின் முழுமை யான ஆலோசனை கிடைத்த தும் அரசின் புதிய கேபிள் டி.வி. நடைமுறைக்கு வரும் முதலிலேயே தமிழ்நாடு முழுவதிலும் அரசின் கேபிள் டி.வி.யை கொண்டு வர இயலாது. படிப்படியாக அரசின் கேபிள் டி.வி. தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

முந்தைய சற்றுமுன்...: டிடீஎச் கட்டணங்களை ட்ராய் கட்டுப்படுத்தாது

மாலைமலர்

The Hindu : Front Page : Government-run cable TV service coming

ஜனாதிபதி தேர்தல் துளிகள்

  • நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இந்த விவரம் தெரியாமல் ஓட்டுப் போடுவதற்காக பாராளுமன்ற வாக்குச் சாவடிக்கு வந்த நியமன உறுப்பினர் கபிலா வாத்சாயன் பின்னர் திரும்பிச் சென்றார்.

  • டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநில ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.எல்.ஏ. ஆர்.எல்.மகாதோ டெல்லி சட்டசபை கட்டிடத்துக்கு ஆம்புலன்சில் வந்து ஓட்டுப் போட்டார்.

  • டெல்லி திகார் சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. பப்பு யாதவ் சிறை வாகனத்தில் வந்து ஓட்டுப் போட்டார்.

  • இதேபோல் பீகாரில் உள்ள சிறையில் இருக்கும் முகமது சகாபுதீன் எம்.பி. பாட்னா நகரில் உள்ள சட்டசபைக்கு சென்று வாக்கு அளித்தார்.

  • பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டுவிட்டு திரும்பும் போது 'பெண்கள் சக்தி வாழ்க' என்று கோஷம் போட்டனர்.

  • மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் தவறுதலாக முதலில் செகாவத்துக்கு ஓட்டுப் போட்டு விட்டார். உடனே அந்த தவறை உணர்ந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் கூறி வேறு வாக்குச் சீட்டு வாங்கி மறுபடியும் ஓட்டுப் போட்டார். இதனால் அவர் முதலில் வாக்கு அளித்த சீட்டு நிராகரிக்கப்பட்டது.

  • ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஓட்டுப் போடுவதற்கு தவறாக தனது பேனாவை பயன்படுத்தி விட்டதாக கூறினார். இதனால் அவர் ஏற்கனவே வாக்களித்த வாக்குச் சீட்டு மாற்றபட்டு அவருக்கு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.

  • இதேபோல் ஜெயாபென் கக்கர் (காங்கிரஸ்) அடுத்தடுத்து வாங்கிய இரு வாக்குச்சீட்டுகளும் தவறாக இருந்ததால் அவை மாற்றப்பட்டு வேறு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது.

  • தெலுங்கு தேசம் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பாரெட்டி, ஜி.நாகசிவா ரெட்டி ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டனர்.

  • எம்.பி.க்களான நடிகைகள் ஹேமமாலினி, ஜெயப்பிரதா, ஜெயாபச்சன் ஆகிய மூவருமே ஓட்டுப் போடவில்லை. ஹேமமாலினி நியமன உறுப்பினர் என்பதாலும், மற்ற இருவரும் தேர்தலை புறக்கணித்த சமாஜ்வாடியை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஓட்டுப் போடவில்லை.

தினத்தந்தி

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்த ஊழியர்கள்

மீனம்பாக்கம், ஜூலை 20-
சென்னை விமான நிலையத்தில் ரஜினியை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டன.

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சென்னையில் இருந்து லுப்தான்சா விமானத்தில் பிராங்பார்ட் வழியாக லண்டன் செல்வதாக இருந்தார். அதற்காக அவர் நள் ளிரவு 12.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். வழியனுப்ப அவரது மனைவி லதா உடன் வந்தார்.

ரஜினிகாந்த் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்து மேக்கப் இல்லாமல் இருந்ததால் முதலில் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவருக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடந்து கொண் டிருந்தன. அப்போதுதான் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டனர். இதையடுத்து இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதும், அவருடன் இணை ந்து போட்டோ எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர்.

ஊழியர்கள் இல்லாததால் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர். இதன் பின்னர்தான் விமான நிலைய மேலாளருக்கு தகவல் சென்றது. அவர் உடனே முதல் மாடிக்கு ஓடினார்.
ரஜினியை சூழ்ந்து நின்றிருந்த ஊழியர்களை உடனே பணிக்கு திரும்பும்படி கூறினார். உடனே ரஜினியும், "என்னோட போட்டோ எடுக்க ஆசைப்பட்டீங்க. எடுத்தாச்சுல.
இனி போய் உங்க வேலையை பா ருங்க. அதுதான் முக்கியம்" என்றார். இதையடுத்து அனைவரும் ரஜினியை பிரிய மனம் இல்லாமல் கீழ் தளத்துக்கு வந்தனர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு.."

முன்னால் முதல்வர் தம்பி வீட்டில் வருமான வரி சோதனை !

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப் படாத சொத்து ஆவணங்கள், பாங்கி கணக்குகள், கண்டு பிடிக்கப்பட்டன.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ராஜா வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா வீட்டுக்கு சென்றனர். ஏற்கனவே சோதனை நடத் தியது தொடர்பாக மீண்டும் சொத்து மதிப்பீடு பற்றி கேட்டனர். காலை 8.30 மணியில் இருந்து மதியம் வரை இந்த விசாரணை நீடித்தது.இது பற்றி பத்திரிக்கையாளர்கள் பன்னீர்செல்வம் அவர்களை தொடர்புக்கொண்டு பேசுகையில் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறினார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜர்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவலில் இருந்தவர்களின் காவல் முடிவடைந்ததால் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். நீதிபதி அவர்களது கோர்ட் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் சூடு பிடிக்கிறது

குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த வேளையில், அரசியல் கூட்டணிகள் தங்கள் கவனத்தை துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளன. முதலில் இறங்கிய UNPA உபி சமாஜ்வாடிக் கட்சியின் ரஷீத் மசூத்தை நிறுத்தியுள்ளன. அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் ஆளும் கூட்டணி ஏதேனும் சிறுபான்மை வேட்பாளரையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. வியாழனன்று கூடிய இடதுசாரிக் கட்சிகள் ஆளும் கட்சிக் கூட்டணி வேட்பாளராக சிறுபான்மை கமிஷனின் தலைவரும் முன்னாள் வெளியுறவு அதிகாரியுமான ஹமீத் அன்சாரியை தெரிவு செய்துள்ளன. அரசியல்வாதியல்லாத அரசியல் தெரிந்த நபரைத் தேடிய இடதுசாரிகளின் விருப்பத்திற்கு பொருத்தமானவராக அன்சாரி அமைகிறார். மேலும்...IBNLive.com >

இதனிடையே தமிழக முதல்வர் மு.கருணாநிதி சுர்ஜித் சிங் பர்னாலா பெயரை பரிந்துரைத்திருக்கிறார். பஞ்சாபின் முன்னாள் முதல்வராக இருந்துள்ள பர்னாலா அனைத்துக் கட்சியினருடனும் சுமுகமாக செல்லக் கூடியவர். வெளியேறும் ஷெகாவத்திற்கு இணையான அரசியல் செல்வாக்கு உள்ளவர்.

ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள் ஜூலை 23 ஆகும்.

ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்

லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதனால் அனீப் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக அனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தினர். தற்போது இக்குற்றச்சாட்டும் பொய்யானதாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதனால் ஹனீஃப் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னை அருகே நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: அமைச்சர் ஸ்டாலின்

கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சென்னை அருகே நெமிலியில் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழாவில் வியாழக்கிழமை அவர் பேசியதாவது:

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினமும் 53 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்படும். நாட்டின் 2-வது பெரிய சுத்திகரிப்பு நிலையமாக இது திகழும். சென்னையின் மக்கள் தொகை 53.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது.

வடசென்னை பகுதிக்காக மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை கட்டும் பணிகள் வரும் ஆண்டில் ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும். இதே போல தென்சென்னை மக்களுக்காக நெமலியில் 40 ஏக்கரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும். இத்திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.

குடிநீர் தரம் அறிய நவீன சாதனம்: குடிநீரின் தரத்தைக் கண்டறிய உதவும் நவீன சாதனத்தை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் இச் சாதனத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர்.

தினமணி

NDTV.com: New water treatment plant in Chennai

முதியோர்களை கவனிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை

குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை வீட்டில் இருந்து கொண்டுவந்து குப்பைத் தொட்டியில் போட்டதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

பெற்றோரை இவ்வாறு தவிக்கவிடுவது மன்னிக்க முடியாதக் குற்றம் எனவும்,இவ்வாறு செய்பவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறுகிறார் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். கூட்டுக் குடும்ப முறை குறைந்துள்ளதும் வாழ்க்கை முறை மாறியுள்ள்மை போன்றவையே இவ்வாறு முதியவர்கள் கவனிக்கப்படாமல் விடப்படுவதற்கு காரணம் என்றும் அமைச்சர் பூங்கோதை கூறுகிறார்.

முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அரசு சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

BBC Tamil

BBC NEWS | South Asia | India grandmother 'dumped on tip'
'Trashed' granny found at dump - CNN.com

-o❢o-

b r e a k i n g   n e w s...