.

Tuesday, May 15, 2007

"பாஸ் மார்க்' நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாதவன்

கரூர் வெண்ணெய்மலை அருகேயுள்ள சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.மாதவன் பிளஸ் 2 தமிழ்ப் பாடத்தில் 196 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

எஸ். மாதவன் கூறியது:
"எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் உண்டு. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோரும் காரணம். அடுத்து மருத்துவம் பயின்று, ஏழைகளுக்குச் சேவை செய்வேன்."

Dinamani

சற்றுமுன்... கருத்துக்கணிப்பு முடிவு

எந்த உயர் கல்வியில் சேரலாம்?: புதிய இணையதளம் அறிமுகம்

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்த உயர் கல்வியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய www.collegesintamilnadu.com என்ற இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் மாணவர் தனது பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைத் தெரிவித்தால், அவர் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நிலையை அறியலாம்.

Dinamani

முன்னணி கல்விக்கூடங்களில் பழங்குடிகள் படிக்க நிதியுதவி

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்க, மாணவர்கள் தங்குவதற்காகும் செலவு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கல்விக் கட்டணம், பிற செலவுகள் ஆகிய அனைத்துக்குமான நிதியுதவி அளிப்பதற்கான அரசு திட்டம் தயாராகிவருகிறது என்று பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் பி.ஆர். கிண்டய்யா தெரிவித்தார்.

Dinamani

ச: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வேண்டுகோள்

சென்னை, மே 15:

ராமர் பாலம் விஷயத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலைக்கல்லூரிகளில் 2வது ஷிப்டு முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால் உத்தர பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் சகோதரர் அல்லது சகோதரி முதல்வராக வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- மாலைச் சுடர்

இந்தியா-பங்களாதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே சிட்டகாங்கில் நடைபெறவிருந்த மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பெய்த மழையினால் இன்று கைவிடப் பட்டது.நடுவர்கள் மூன்றுமுறை பார்வையிட்டபிறகும் ஈரம் காயாததால் இம்முடிவு எடுக்கப் பட்டது.


India-Bangladesh 3rd ODI called off-The Times of India

ச: பாகிஸ்தான்: பெஷாவர் ஓட்டலில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாநில தலைநகரான பெஷாவரில் ஒரு ஓட்டலின் வரவேற்பறையில் வெடித்த குண்டுவெடிப்பில் 24 பேர்வரை மரணமடைந்திருப்பதாக அம்மாநில அதிகாரிகள் கூறினர். ஆஃப்கானியர்கள் அதிகம் புழங்கும் அந்த ஓட்டல் பெஷாவர் நகரத்தின் மையத்தில் புகழ்பெற்ற மசூதியின் அண்மையில் உள்ளது.

Hotel bomb kills at least 24 in Pakistan's Peshawar | U.S. | Reuters

ச: தினகரன் தாக்குதல்: அட்டாக் பாண்டியன் கைது

தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியன் இன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டார். ்மதுரை ஊரக காவல்நிலையத்தில் வலிய வந்தடைந்த அட்டாக் பாண்டியனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.


Main accused in Dinakaran attack arrested - India

சற்றுமுன்: இங்கிலாந்தில் மேயராகும் முதல் இந்தியர்

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் மாநகராட்சியில் தேர்தல் நடந்தது. அதில் பார்ட்டன் டிரெட்ஒர்த் பகுதி கவுன்சிலராக தொழில் கட்சி சார்பில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஜித் கில் போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் கிளவ்செஸ்டர் நகரின் மேயராக தேர்ந்து எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ஹர்ஜித் கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள தகோகாவை சேர்ந்தவர். ஜலந்தரில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பிரபலமான ஹாக்கி வீரர் ஆவார். இவர் இந்திய ஆணியில் இடம் பெற்று பல சர்வேதச போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது ஹாக்கி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஹர்ஜித் கில் 1978ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அதே ஆண்டே இங்கிலாந்தை சேர்ந்த ஜம்மிந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குர்கமால் (26) மகனும், அம்ரிதி (24) மகளும் உள்ளனர். ஹர்ஜித் கிளவ்செஸ்டர் நகரின் 527வது மேயராக வருகிற 21ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் கில்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ஆஸ்திரேலிய யோசனை - ஜிம்பாப்வே மறுப்பு

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக ஜேம்ஸ் சுதர்லேண்ட், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஓஜியாஸ் பூட்டை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மூன்றாவது நாட்டில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை பூட் மறுத்துவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாட அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவார்ட் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தார்.

பொதுவான இடத்தில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டதால் தற்போது இந்தப் போட்டிகள் நடைபெறாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நன்றி:- MSN தமிழ்

சற்றுமுன்:- தயாநிதியின் இடத்தை பிடிக்கிறார் அமைச்சர் ராசா: ராதிகா செல்வி, குப்புசாமி, குமரன்-ஒருவருக்கு பதவி

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அைமச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி அளித்த கடிதங்களை பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கொடுத்தேன். அக்கடித்தத்தில் என்ன எழுதியிருந்தது என எனக்கு தெரியாது. அதை படித்த பிரதமர் இதில் குறிப்பிட்டுள்ளபடி நிறைவேற்றுவதாக கூறினார்.

மாறன் வகித்த துறை யாருக்கு வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், அமைச்சர்கள் பற்றி கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள். இதில் காங்கிரஸ் தலையிடாது என்றார்.

இந் நிலையில் தயாநிதி மாறன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிற்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ராஜா வகித்து வரும் வனத்துறையின் கேபினட் பதவி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்திடம் தரப்படலாம் எனவும் தெரிகிறது.

இதன் மூலம் இணைமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் கேபினட் மந்திரியாக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி மாணிக்கம் வசம் உள்ள நிதித்துறை இணையமைச்சர் பதவி மூத்த எம்பியான குப்புசாமி அல்லது ராதிகா செல்வி, குமரன் ஆகியோரில் ஒருவருக்குத் தரப்படலாம் என்று தெரிகிறது.

இந்த குமரனிடம் இருந்து தான் தினகரன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ரூ. 130 கோடிக்கு வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையை மாறன் குடும்பத்திடம் விற்பதை தனது மாமனாரான தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனிடம் கூட குமரன் தெரிவிக்கவில்லை என அப்போது செய்திகள் வந்தது நினைவுகூறத்தக்கது.

இதனால் மாறன் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஆதித்தன். இப்போது தயாநிதி பதவி காலியாகி அதன் மூலம் குமரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரன் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றவர் ஆவார்.

அமைச்சர் பதவிக்கு பெயர் அடிபடும் இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.

மத்திய அமைச்சரவையில் நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திமுக மீது அந்த சமூகத்தினர் குமுறல் வெளியிட்டு வந்தனர். குமரனுக்கோ அல்லது ராதிகா செல்விக்கோ அந்தப் பதவி தரப்பட்டால் அச் சமூகத்தினரின் மன வருத்தத்தையும் போக்க முடியும் என திமுக கருதுகிறது.

நன்றி:-தட்ஸ் தமிழ்

ச: மும்பையில் தீ விபத்து

இன்று காலை 8 மணியளவில் மும்பை கல்பாதேவி பகுதியில் உள்ள L K மார்கெட்டில் ஐந்துமாடிக் கட்டிடமொன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எட்டு தீயணைப்பு வண்டிகள், இரண்டு ஆம்புலன்சுகள் மற்றும் எட்டு தண்ணீர் வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காரணங்கள் , சேதங்கள் இதுவரை தெரியவில்லை.

The Hindu News Update Service

உள்துறை செயலாளரை மிரட்டிய தயாநிதி!

மே 15, 2007

சென்னை: மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மிரட்டுவது போல பேசினார் தயாநிதி மாறன் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை டெல்லிக்கு எடுத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுத்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் ஆற்காடு வீராசாமி.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று தயாநிதி மாறன் கூறுவதில் உண்மை இல்லை. மதுரை சம்பவம் நடந்த பின்னர் அவர் உள்துறை செயலாளருக்குப் போன் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா, இல்லையா. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். தவறினால் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். அது வரம்பு மீறிய செயல்.

அவரது தாத்தாதான் முதல்வர். விரும்பியிருந்தால் அவரிடம் பேசியிருக்கலாம். அதை விடுத்து உள்துறைச் செயலாளரை மிரட்டியுள்ளார் என்றார் ஆற்காடு வீராசாமி.

முன்னதாக டெல்லியில் பிரதமர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தார் ஆற்காடு வீராசாமி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் அனுப்பியிருந்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்த பிரதமர், அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

அதேபோல சோனியா காந்திக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத யாரும் அமைச்சராவார்களா என்பது எனக்குத் தெரியாது. தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்றார் ஆற்காடு வீராசாமி.

நன்றி :
தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ரிசல்டுக்கு முன்பே பிளஸ் டூ மாணவி தற்கொலை

சென்னையில் பிளஸ் டூ தேர்வு முடிவை அறியும் முன்பே மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் யமுனா (17) பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார்.

இவர் சரியாக படிப்பதில்லை என அவரது பெற்றோர் அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் மன வருத்தம் அடைந்தார் யமுனா.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேல்வியடைந்து விடுவமோ என்ற பயத்தில் நேற்றிரவு யமுனா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

தயாநிதி மாறன் பேட்டி - வீடியோ

ச:அகமதாபாத் பஸ் விபத்து 20 பேர் பலி

அகமதாபாத் அருகே CNG(Compressed Natural Gas) சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்த பஸ் ஓன்று கெமிக்கல் லாறியில் மோதியதில் பஸ் வெடித்து 20பேர் உருத்தெரியாமல் எரிந்து இறந்தனர்.

உயிர் தப்பித்த பயணிகள் அருகாமையிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

20 killed as CNG Gujarat bus catches fire The Hindu

-o❢o-

b r e a k i n g   n e w s...