.

Saturday, June 2, 2007

அமிதாப் நிலம் திரும்பப் பெறப்படுமா?

மோசடி வழிகளில் விவசாய நிலத்தை பெற்றது நிரூபணமானால், அமிதாப் பச்சனுடைய 20ஏக்கர் நிலம் அரசால் திரும்பப் பெறப்படும் என்று மஹாராஷ்ட்ர வருவாய்த்துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநில சட்டத்தின்படி விவசாயியாக இல்லாதோர் வேளாண் நிலங்களை வாங்கிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பியின் முந்தைய முலாயம் அரசு அமிதாப்பை விவசாயியாக அங்கீகரித்திருந்ததும் இதில் அறியப்பட வேண்டிய செய்தி.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

புத்தகம் இல்லா கல்வித்திட்டம்!

தொடக்கப்பள்ளி மாணவர் களின் புத்தகச்சுமையை குறைத்து, அவர்கள் தானாக கல்வி கற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பட அட்டை களுடன் கூடிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் புத்தகங் கள் இல்லாமல் விளக்கப்படங்கள் அடங்கிய அட்டைகளை வைத்து கல்வி கற்கலாம்.

கடந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பள்ளி களில் 1, 2-ம் வகுப்புகளுக்கு புத்தகம் இல்லாத பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற புதிய கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 3, 4, 5-ம் வகுப்புகளுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பட அட்டைகளை வைத்து மாண வர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு செயல் வழி கற்றல் பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி: ஜூன்2, 2007

சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து!

சென்னை விமான நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுக்கும் பகுதி உள்ளது. இதன் அருகே தனியார் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அறை இருக்கிறது.
இந்த அறையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் `ஒயர்'கள் தீப்பிடித்து எரிந்தன. அந்த அறை புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பயணிகள் ஓட்டம்
அங்கு தங்கள் உடைமைகளை எடுக்க வந்த பயணிகள் தீயைக் கண்டதும் ஏதோ விபரீதம் ஏற்பட்டதாக நினைத்து அலறியடித்து ஓடினார்கள். இந்த தீ விபத்து பற்றி விமானநிலைய அதிகாரிகளிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தரப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து வந்து, தீப்பிடித்த இடத்தில் `ஸ்பிரே' உதவியுடன் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

தினத்தந்தி

பாப் உல்மர்: இறுதி முடிவு என்ன?

இரண்டரை மாத விசாரணைக்குப் பிறகு பாப் உல்மர் மரணம் இயற்கையானது தான் என்று ஜமைக்கா காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அடுத்தவாரம் இதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படுமாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அயர்லாந்திடம் தொடக்கத்திலேயே தோல்வியைத் தழுவி வெளியேற, அதைவிட அதிர்ச்சியாய் அதன் பயிற்சியாளர் பாப் உல்மர் மரணம் அமைந்தது.

கொலை, மாஃபியா கும்பல், சூதாட்டம், விஷம், துணை பயிற்சியாளர் முஸ்தாக் அகமது, அல்காயிதா என்று பல அனுமானங்களை ஊடகங்களில் உலவவிட்டபடி இருந்த இம்மரணம், ஜமைக்கா காவல்துறையினரின் இந்தக் கருத்தால் முடிவுக்கு வரக்கூடும்.

டைம்ஸ் ஓஃப் இந்தியா

ச: இராஜஸ்தான் முதல்வர் பதவி விலக வேண்டும்: ஜஸ்வந்த் சிங் கோரிக்கை

கடந்த நாட்களாக இருந்துவரும் சாதிச்சண்டையையும் கலவரங்களையும் முடிவுக்குக் கொண்டுவர இராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேக்கு வழி காணையலாவிடில் அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இவரது மனைவி ராஜேயை தேவியாக சித்தரித்து வந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். பிஜேபியின் தலைமை இதனை ஏற்கவில்லையெனினும் ராஜே மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் இன்று குஜ்ஜர் இன மக்களுடன் அவர் நடத்தும் பேச்சு வார்த்தை மிகவும் முக்கியமானதாகும்.

இன்று பிரதமர் மன்மோகன்சிங்கும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Jaswant wants Vasundhara axed - Yahoo! India News

ச:கேரளாவில் சிக்குன்குன்யா பரவுகிறது

கேரளவில் சென்ற வாரம் சிக்குன்குன்யாவா இல்லையா என்று எழுந்த விவாதம் இப்போது ஆயிரமானவர்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நோயாக பரவியிருக்கிறது. கொசுக்களினால் பரவும் இந்த நோயதிக சுரத்துடன் கை,கால்களை முடக்கிப் போடும் தன்மை கொண்டது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளநிலையில் இது மேலும் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகள் பிளாஸ்டிக் கப் ்/ தேங்காய் ஓடு இவற்றை இரப்பர்பால் சேகரிக்க மரத்தினடியே கட்டுவதால் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் பெருக வழிவகுக்கின்றனர்.

Chikungunya takes an epidemic shape in Kerala - Yahoo! India News

ச: திருப்பதியில் திராவிட்டுக்கு விஐபி தரிசனம் இல்லை

சென்றமுறை ஐஸ்வர்யா-அபிஷேக்கிற்கு அளித்த வரவேற்பு சர்ச்சையில் முடிந்த நிலையில் இன்று திருப்பதிக்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ராகுல் திராவிட்டிற்கு தனி ஏற்பாடு எதுவும் கோவில் அதிகாரிகள் செய்யவில்லை.அவரும் அவர் குடும்பத்தாரும் ரூ500 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு 45 நிமிடம் காத்திருந்து தரிசனம் கண்டனர். ஆனால் கோவிலுக்கு வெளியே அவர்களுக்கு நல்ல தங்கும் வசதி செய்து கொடுத்திருந்தனர்.


DNA - Sport - No VIP treatment for Dravid - Daily News & Analysis

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர் துபாயிலிருந்து நாடு திரும்புகிறார்

இந்தியாவைச் சேர்ந்த கன்னியப்பன் மோகன்தாஸ் (37), கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி டூரிஸ்ட் விசா மூலம் துபாய் சென்றார்.
ஒரு வாரத்திற்கு பின் இந்தியா திரும்ப துபாய் விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸாரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து இவர் கைது செய்து பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் சோதித்தபோது இவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு இந்தியா திரும்ப விமான பயண சீட்டும், தகுதி சான்றிதழும் உடனடியாக பெற்று தரப்பட்டுள்ளது.

சாமான்யரின் வெற்றி: பாஸ்போர்ட் அதிகாரிக்கு அபராதம்!

நாக்பூரைச் சேர்ந்தவர் தஸ்னீம். இவர் கடந்த ஆண்டு அங்குள்ள மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தனக்குபாஸ்போர்ட் வழங்க கோரி அதிகாரி வி.பி. காம்பிளியிடம் விண்ணப்பம் ஒன்றை கொடுத்தார். அதற்கு அவர் விண்ணப்பத்துடன் சில ஆவணங்களையும் தர வேண்டும். இல்லையென்றால்பாஸ்போர்ட் வழங்க இயலாது என்று கைவிரித்தார்.

இதையடுத்து தஸ்னீம் என்னென்ன ஆவணங்களை தர வேண்டும் என்று காம்பிளி யிடம் கேட்டார். ஆனால் அவர் சரியானபதில் எதுவும் சொல்லவில்லை.

தஸ்னீம்பலமுறைபாஸ்போர்ட் அலுவலகம் வந்துபாஸ்போர்ட் பெறுவதற் கான வழிமுறைகள்பற்றி கேட்டார். அதற்கும் அவர் உரியபதில் அளிக்காமல் இழுத்தடித்தார்.இப்படியே அவர் 100நாட் களாக தாமதம் செய்ததால் தஸ்னீம் வேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனக்குபாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் செய்த அதிகாரி காம்பிளி மீது மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம் காம்பிளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
அதாவது தாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ. 250 வீதம் 100 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காம்பிளி அபராதம் கட்டத் தவறினால் அவரது சம்பளத்தில் இருந்து அபராதபணம் கழிக்கப்படும் என்று ஆணையம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்புபாஸ்போர்ட் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஸ்னீம்பலமுறைபாஸ்போர்ட் அலுவலகம் வந்துபாஸ்போர்ட் பெறுவதற் கான வழிமுறைகள்பற்றி கேட்டார். அதற்கும் அவர் உரியபதில் அளிக்காமல் இழுத்தடித்தார்.

இப்படியே அவர் 100நாட் களாக தாமதம் செய்த தால் தஸ்னீம் வேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனக்குபாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் செய்த அதிகாரி காம்பிளி மீது மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம் காம்பிளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.

அதாவது தாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ. 250 வீதம் 100 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காம்பிளி அபராதம் கட்டத் தவறினால் அவரது சம்பளத்தில் இருந்து அபராதபணம் கழிக்கப்படும் என்று ஆணையம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்புபாஸ்போர்ட் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மாலைமலர் செய்தி

ச: சீன உதவிப் பிரதமர் மரணம்

சீன உதவி பிரதமரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நாயகர்களில் ஒருவருமான ஹுவாங் ஹு உடல்நிலை மோசமடைந்து இன்று காலமானார். அவருக்கு வயது 69. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

The Hindu News Update Service

ச:இன்று கோவாவில் சட்டமன்ற தேர்தல்

கோவாவின் 40 பேர் சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை பலத்த பாதுகாப்போடும் பலத்த மழையோடும் துவங்கியது. பதினொன்றாம் சட்டமன்றத்திற்கு போடியிடும் 202 வேட்பாளர்களிலிருந்து 40 பேரை கோவாவின் பத்து இலக்கம் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடியும்; ஜூன் 5ம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெறும்.

Goa votes amid rains, tight security : goa, polls, bjp, cong, polling, day : IBNLive.com : CNN-IBN

ச: இராஜஸ்தானில் முழுஅளவில் இனக்கலவரங்கள்: வன்முறையில் 8 பேர் மரணம்

இதுவரை அரசு/காவலர்களுக்கும் குஜ்ஜர்களுக்கும் இருந்த போராட்டம் நேற்று முதல் மீனா இன மக்களுக்கும் குஜ்ஜர் இனமக்களுக்கும் இடையேயான இனப்போராக வெடித்துள்ளது. ஜெய்பூர்-ஆக்ரா சாலைமறியலில் ஈடுபட்டிருக்கும் குஜ்ஜர் இன மக்களை விரட்டியடிக்க மீனா இனமக்கள் இரும்பு தடிகள், கத்திகள் கொண்டு தாக்க அச்சாலை போர்க்களமாக மாறியுள்ளது. லால்சாட் நகரருகே இந்தச் சண்டையால் எட்டு பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. ST ஒதுக்கீடு பெற போராடும் குஜ்ஜர்கள் தங்கள் பங்கை அபகரிப்பார்கள் என்று அம்மாநிலத்தின் மிகப் பெரும்பான்மை ST யாக உள்ள மீனா இன மக்கள் பயப்படுகின்றனர். குஜ்ஜர்களுக்கு ST ஒதுக்கீடு வாங்கித் தருவதாக சொல்லி சென்ற தேர்தலை வென்ற பிஜேபி தனதி இந்து வாக்குவங்கியில் இருக்கும் சாதி சண்டைகளை சரிவர புரிந்துகொள்ளாமல் இந்த பிரச்சினையை பூதாகாரமாக வளரவிட்டு செய்வதறியாமல் திகைக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக ராஜஸ்தானின் நெடுஞ்சாலைகளும் இரயில் மார்கங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

தொடர்புள்ள செய்தி: Full-blown caste war in Rajasthan, 8 killed- Hindustan Times

ராஜ் டிவி உரிமையாளர் திமுகவில் இணைந்தார்.

எனது பிறந்த நாள் பரிசாக ராஜ் டிவியும், அதன் உரிமையாளர் ராஜேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளனர்.
என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சி களத்தில் காட்சிகள் மாறியுள்ளன. திமுக சேனலாக இருந்து வந்து சன் டிவி திமுகவிலிருந்து தூர தள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ராஜ் டிவி அமர்ந்துள்ளது. கூடவே கலைஞர் டிவியும் விரைவில் வரப் போகிறது. இந்த நிலையில், ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்குப் பிறந்த நாள் பரிசாக ராஜேந்திரன் சகோதரர்களும், ராஜ் டிவியும் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்றுதான் ராஜேந்திரன் திமுகவில் இணைகிறார் என்று யாரும் கருத வேண்டாம். அவர் எப்போதும் திமுக ஆதரவாளர்தான். சங்க இலக்கியத்தில் காதலர்கள் யாருக்கும் தெரியாமல் சந்தித்துப் பேசுவார்கள். அதற்கு களவியல் என்று பெயர். எனக்கும், ராஜ் டிவிக்கும் இன்று அந்த முறை முடிந்து, திருமண வைபோகம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் எப்போது திமுகவில் இணைந்தீர்களோ, அப்போதே எனது உடன் பிறவா சகோதரர்களாகி விட்டீர்கள் என்றார் கருணாநிதி. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஏ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...