எனது பிறந்த நாள் பரிசாக ராஜ் டிவியும், அதன் உரிமையாளர் ராஜேந்திரனும் திமுகவில் இணைந்துள்ளனர்.
என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சி களத்தில் காட்சிகள் மாறியுள்ளன. திமுக சேனலாக இருந்து வந்து சன் டிவி திமுகவிலிருந்து தூர தள்ளி வைக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ராஜ் டிவி அமர்ந்துள்ளது. கூடவே கலைஞர் டிவியும் விரைவில் வரப் போகிறது. இந்த நிலையில், ராஜ் டிவி அதிபர் ராஜேந்திரன் தனது சகோதரர்களுடன் நேற்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக தனியாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்குப் பிறந்த நாள் பரிசாக ராஜேந்திரன் சகோதரர்களும், ராஜ் டிவியும் கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்றுதான் ராஜேந்திரன் திமுகவில் இணைகிறார் என்று யாரும் கருத வேண்டாம். அவர் எப்போதும் திமுக ஆதரவாளர்தான். சங்க இலக்கியத்தில் காதலர்கள் யாருக்கும் தெரியாமல் சந்தித்துப் பேசுவார்கள். அதற்கு களவியல் என்று பெயர். எனக்கும், ராஜ் டிவிக்கும் இன்று அந்த முறை முடிந்து, திருமண வைபோகம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் எப்போது திமுகவில் இணைந்தீர்களோ, அப்போதே எனது உடன் பிறவா சகோதரர்களாகி விட்டீர்கள் என்றார் கருணாநிதி. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஏ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Saturday, June 2, 2007
ராஜ் டிவி உரிமையாளர் திமுகவில் இணைந்தார்.
Labels:
அரசியல்,
தொலைக்காட்சி
Posted by Adirai Media at 11:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
வரும்போதே தூற்றிக் கொள்வதுதான் பிழைப்புக்கு நல்ல வழி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலத்தின் கட்டாயமும்கூட.. இதில் தவறில்லை என்றே சொல்லலாம்.
ஹி ஹி ஹி.... :-)
arasiyalin asingangal,maanangketta polappu,kolhai atra koamaalihalin koottani. etharkkellaam peyar arasiyal!???
Post a Comment