ஹில்டன் ஓட்டல் குடும்ப வாரிச்சும், உலகளாவிய பிரபலமுமான பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய வழக்கில் விதிக்கப்பட்ட தடையைஇ மீறி லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டது.
Saturday, May 5, 2007
ச:பாரிஸ் ஹில்டனுக்கு 45 நாள் ஜெயில்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
9:18 PM
3
comments
ச:ரூ.50கோடி வரி ஏய்ப்பு அம்பலம்
தூத்துக்குடி குமரி உள்ள தனியார் கல்லூரிகளிலும் மேலாளரின் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ரூ.50 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
குலசேகரம் பகுதியில் மூகாம்பிகை கல்விநிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியைஅ சேர்ந்த வேலாயுதம் நாய்யர் என்பவர் இதை நடத்துகிறார். இந்த நிறுவனமும் மற்றுமொரு நிறுவனமும் வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
Around Rs. 50 cr. worth tax evasion detected
Posted by
சிறில் அலெக்ஸ்
at
6:12 PM
0
comments
ச:பயிற்சியின்போது ட்ராவிட் முகத்தில் காயம்
பயிற்சியின்போது ஆர்.பி. சிங்கின் பந்து ராகுல் ட்ராவிட் முகத்தில் பட்டு காயம் ஆனது. காயம் பெரிதானதில்லையென்றாலும் அவர் மூக்கிலிருந்து ரத்தம் வந்ததால் ஓய்வு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
6:04 PM
0
comments
ச:யாஹூ புகைப்பட சேவை மூடப்படுகிறது
ப்ளிக்கரை(Flikr) பிரபலப்படுத்தவேண்டி யாஹூ தன் புகைப்பட சேவையை (yahoo! Photos) மூடிவிட்டு பயனாளர்களை Flikrக்கு மாறச் சொல்கிறது.
வரும் ஜூன் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yahoo to shut down Yahoo Photos service, push Flickr
Posted by
சிறில் அலெக்ஸ்
at
5:20 PM
1 comments
ச:மன்மோகன்சிங் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவது சரியல்ல : கேரள எம்பி
சிபிஎம் சார்ந்த சுயேட்சை எம்பி செபாஸ்டியன் பால் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது அரசியலமைப்பிற்கு ஒழுங்கீனமானது என்று கூறினார். காங்கிரஸ் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும், அதன் மூலம் தனது அரசிற்கு அவர் மக்களிடமிருந்து தார்மீக ஆதரவு பெற்றிருப்பார் எனக் கூறினார்.
PM's election to Rajya Sabha serious impropriety: MP
Posted by
மணியன்
at
5:00 PM
0
comments
ச; தோஹாவில் ஐசிஐசிஐ வங்கி கிளை திறப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரியவங்கியும் நாட்டின் மிகப் பெரிய தனியார்துறை கடன்வழங்கு நிறுவனமுமான ஐசிஐசிஐ வங்கி கத்தாரின் தோஹாவில் தன் கிளையை திறந்தது. இதுவே அங்கிருக்கும் முதல் இந்திய வங்கியாகும்; வெளிநாட்டில் அதன் 18ஆவது கிளையாகும்.
The Hindu News
Posted by
மணியன்
at
4:48 PM
0
comments
கொல்கொத்தாவில் இரயிலோட்டம் நிறுத்தம்
மஜிஸ்ட்ரேட் ஒருவரை வாகனாரையில் ஏற்றாததைக் குறித்த எழுந்த சர்ச்சையில் சம்பந்தப் பட்ட வாகனஓட்டி(Motorman)யையும் வாகனகாவலரை(Guard)யும்கைது செய்ய ஆணையிட மற்ற இரயில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து மாநகர இரயில் போக்குவரத்து சியால்தா டிவிஷனின் மூன்று பக்கங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. இரயில்வே மேலதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி The Hindu News Update Service
Posted by
மணியன்
at
4:38 PM
0
comments
கர்நாடக தொழிற்சாலை விபத்து: 33 பேர் காயம்
நேற்று கர்நாடக மாநிலம் கோகக் நகரில் தொழிற்சாலையொன்றில் வெந்நீர்கலன் ஒன்று வெடித்து 33 பேர் காயமடைந்துள்ளனர்; அதில் 10 பேர் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாக கர்நாடக காவல் தெரிவித்துள்ளது.
Blast in Karnataka factory leaves 33 injured- Hindustan Times
Posted by
மணியன்
at
4:24 PM
0
comments
ச: நாசிக்கில் வெடிமருந்து கிடங்கில் குண்டு வெடித்து 15 பேர் பலி
மராட்டிய மாநிலம் நாசிக்கில் வெடிமருந்து கிடங்கில் குண்டு வெடித்து 15 பேர் பலி: 3 மாடி கட்டிடம் இடிந்தது
நாசிக், மே. 5-
மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் ஹர்சுல்கிராமம் உள்ளது. இங்கு வெடிமருந்து (ஜெலட்டின்) கிடங்கு உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்துகள் வெடித்து சிதறின.
இதில் தொழிற்சாலையில் வேலை பார்த்த 15 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர். 2 பேர் உடல்களை மீட்டனர். இந்த குண்டு வெடிப்பில் அருகே இருந்த 3 அடுக்குமாடியும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
=மாலைமலர்
Posted by
✪சிந்தாநதி
at
4:19 PM
0
comments
கென்யா ஏர்வேஸ் விமானம் 115 பேருடன் விழுந்தது
காமரூனிலிருந்து புறப்ப்பட்ட கென்யா ஏர்வேஸின் விமானம் வான்கட்டுப்பாட்டுக் கேந்திர தொடர்பை இழந்ததாக முன்னர் அறிவிக்கப் பட்டு சற்றுமுன் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு வான்வழி அதிகாரியொருவர் கூறினார். விமானத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஆனால் அதுபற்றி மேலும் கூற இயலாது என்றும் அவர் கூறினார்.
DNA - World - Kenya Airways plane crashes: official - Daily News & Analysis
Posted by
மணியன்
at
4:09 PM
0
comments
கொல்கொத்தா பயிற்சிக் களத்தில் திராவிட்டிற்கு முகத்தில் அடி
கொல்கொத்தாவில் நடந்துவரும் முன்னேற்பாடு முகாமில் பயிற்சியின் போது வேகப் பந்தாளர் ஆர்பி சிங்கின் பந்துவீச்சில் திராவிட்டின் முகத்தில் பந்துபட்டு காயமடைந்தார். தலைக் கவசம் அணிந்திருந்தும் அவரால் தப்பமுடியவில்லை
மேல் விவரங்களுக்கு..DNA - Sport - Dravid injured during practice session at Eden - Daily News & Analysis
Posted by
மணியன்
at
2:39 PM
0
comments
ச: குஜராத் போலி என்கௌன்டர் வழக்கு: காவல் அதிகாரிகள் மீது மயக்கமருந்து சோதனை நடத்த மனு
குஜராத் போலிஎன்கௌன்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள மூன்று காவல் அதிகாரிகளுக்கும் மே 8 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தை துலக்கிவரும் குஜராத் சிஐடி பிரிவினர் இந்த அதிகாரிகள் மீது மயக்க(ஹிப்னாடிக்)மருந்து செலுத்தி உண்மையை வரவழைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் ..DNA - India - Guj fake encounter: Officers' remand extended; nacro tests sought
Posted by
மணியன்
at
2:32 PM
0
comments
'சற்றுமுன் 1000' மாபெரும் போட்டி
'சற்றுமுன்...' தளம் துவங்கி நூறு நாட்களுக்குள்ளாகவே ஆயிரம் பதிவுகளை எட்டப் போகிறது. வலைப்பதிவுகளில் இது பெரும் சாதனையாகவே இருக்கும்.
ஆயிரமாவது பதிவை நினைவுகூறும் விதமாகவும் இணையப் பயனர்களிடையே செய்தி விமர்சனம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் மாபெரும் போட்டி ஒன்றை ஒருங்கிணைக்கவுள்ளோம்.

மொத்த பரிசுத் தொகை ரூ. 20,000த்துக்கு மேல். 50க்கும் மேற்பட்ட பரிசுகள்.
இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி. செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட அரசியல், சமூகம், அறிவியல், வணிகம், விளையாட்டு எனும் வகைப்பாடுகளின் கீழ் கட்டுரைகள் வரையலாம்.
போட்டி குறித்த முழு விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.
போட்டி குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
6:50 AM
3
comments
ச:பாப் உல்மர் உடல் தகனம்
மர்மமான முறையில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மரின் உடல் தென் ஆப்ரிக்காவில் மே4 அன்று தகனம் செய்யப்பட்டது.
Bob Woolmer cremated in South Africa
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:49 AM
1 comments
ச:இந்திய வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு
புதிய அதிகக் கட்டுப்பாடுகளளக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய ஒப்பந்தம் வீரர்களின் திறனுக்கேற்ப சம்பளம் வழங்கும் வழிமுறையைக் கையாள்கிறது, மேலும் விளம்பரங்களில் தோன்ற உச்ச வரம்பையும் விதித்துள்ளது.
Players refuse to sign new BCCI contracts
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:42 AM
2
comments
ச:மலேசியாவில் தமிழ் இளைஞர் இறப்பு - மூவர் கைது
மலேசியாவில் டி. ராஜன் என்பவரின் தொழிற்சாலையில் பணிபுரிய தமிழகத்தைச் சார்ந்த கணேஷ்குமார் ராமமூர்த்தி என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் சென்றார். பின்னர் அவர் ராஜனின் வீட்டில் பணியமர்த்தப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் கணேஷ்குமார் காட்டுப் பகுதியில் பசியோடு உடல் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அப்போது அவர் தந்த பேட்டியில் தன்னை ராஜன் குடும்பத்தினர் கொடுமைப் படுத்தியதாகவும் சாப்பபடு இல்லாமல் தினம் 16 மணிநேரம் வேலை வாங்கியதாகவும் கயிற்றில் கட்டி காரில் கொண்டு வந்து காட்டில் விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் கணேஷ்குமார் இறந்து போனார்.
இது தொடர்பாக ராஜன், அவர் மனைவி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தினமணி
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:32 AM
0
comments
ச:அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்தது
ஏப்ரல் 27 முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி இருப்பு அமெரிக்க டாலர் 254 மில்லியன் அதிகரித்து 204.135 பில்லியன் ஆகியது.
Forex reserves up US$ 254 mn.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
1:59 AM
0
comments
7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லை். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்கள்.
உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள்.
கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.
சம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், "சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும். ஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல", என்றார்.
DNA - Sport - Cash-rich BCCI has not paid cricketers for last 7 months - Daily News & Analysis
Posted by
Boston Bala
at
12:29 AM
0
comments
ச:தமிழ்நாடு தொழிற்கல்விக்கான கவுன்சிலிங் ஜூலை 9 ஆரம்பிக்கும்
தமிழ்நாட்டில் தொழிற்கல்விக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 9ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 15ல் முடிவடையும். வகுப்புக்கள் ஆககஸ்ட் 20 முதல் துவங்கும்.
மாணவர் தகுதி 12வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மோத்த மதிப்பெண்கள் சமமாயொருந்தால் கணக்கு பாட மதிப்பெண் ஒப்பிடப்படும், அதுவும் சமமாயிருந்தால் இயற்பியல் மதிப்பெண்கள் ஒப்பிடப்படும் பின்னர் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் ஒப்பிடப்படும்.
இவற்றில் எல்லாம் சமமாக இருந்தால் மாணவரின் பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்பட்டு முன்னதாகப் பிறந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் சமமாக இருக்கையில் கணினி மூலம் குலுக்கல் முறறயில் (By Random number) மாணவர் தகுதி முடிவு செய்யப்படும்.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
12:16 AM
0
comments
b r e a k i n g n e w s...