Professor Rolf Bernander fishing for hyperthermophilic archaea in a hot spring in Yellowstone national park, Wyoming -- not far from the pool where Sulfolobus acidocaldarius was first isolated.
மோசமான சூழ்நிலையிலும் வளரும் Unique Organism ஒன்றின் வாழ்க்கை சுழல் பெறப்பட்டுள்ளது. இது கொதி நிலையில் உள்ள திரவங்களிலும் வளரும் என அறியப்பட்டுள்ளது.
இது பூமியில் எவ்வாறு உயிரணம் உருவானது என்பதை பற்றி அறியவும், மற்ற கோள்களில் உயிரணங்களை உருவாக்கவும் மற்றும் மனித இனம் பற்றி அறிவும் பயன்படும் என ஆராயச்சியாளர்கள் நம்புகின்றனர்.
SCIENCE DAILY
Sunday, March 4, 2007
மோசமான சூழ்நிலையிலும் வளரும் Unique Organism
Posted by சிவபாலன் at 9:49 PM 1 comments
கோவையில் ரூ.7350 கோடி முதலீடு
கோவை மாவட்டத்தில் ஜவுளி, இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 82 திட்டங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 350 கோடி முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன, என்று மாநில தொழில்துறையின் வழிகாட்டும் பிரிவு இயக்குநர் வேல்முருகன் கூறினார்.
தமிழ் முரசு
Posted by சிவபாலன் at 9:13 PM 0 comments
கோவையில் 25 லட்சம் மரக்கன்று நட மும்முரம்
கோவை ஈஷா யோக மையம் சார் பில் பசுமைக் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மாசுபட்டு வரும் சுற்றுச்சூழலை மரம் வளர்ப்பதன் மூலம் மேம்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும். தமிழகம் முழுவதும் 10 சதவீத நிலப்பரப்பில் 12 கோடி மரம் நட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு 2.5 கோடி மரங்கள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக வடவள்ளி, சாய்பாபாகாலனி, சிங்காநல்லூர் பகுதியில் நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ் முரசு
Posted by சிவபாலன் at 9:10 PM 0 comments
ஐயா வைகுண்டசாமியின் 175-வது அவதார திருநாள்
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையட்டி சுவாமிதோப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது.
ராயபுரம் ஐயா வைகுண்டசாமியின் 175-வது ஆண்டு அவதார திருநாள் ராயபுரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையட்டி ராயபுரத்தில் இருந்து மணலி புதுநகர் வரை ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ் முரசு
Posted by சிவபாலன் at 9:01 PM 3 comments
போதைப் பொருட்களுடன் களியாட்டம்:200 மாணவர்கள் கைது
பூனாவிலிருந்து 30 கி.மீ தொலைவில்(Dhankache village), போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு ஆட்டம்போட்டுக்கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
Over 250 youths at rave party detained, contraband seized
Police Arrest 200 Students At Rave Party In India
200 students arrested at rave
Drugs recovered, 200 students arrested in Pune
Posted by சிறில் அலெக்ஸ் at 7:00 PM 0 comments
பிகாரில் தோற்றவர், ரயில்வேயில் ஜெயித்ததெப்படி?
லாலு ப்ரசாத் யாதவ், பிகார் முதலமைச்சராகத் தோல்விகண்டு, பின் இரயில்வே மந்திரியான பின்பு ஜெயித்தது எப்படி என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்தி ஒன்று விவரிக்கிறது.
Why Lalu failed in Bihar and succeeds as railway minister
தொடர்புடைய செய்திகள்
Lalu Blasts Nitish on Railway Issues
All Bihar projects promised would go on stream soon: Lalu
Colourful Lalu gets jiggy on Holi
Posted by சிறில் அலெக்ஸ் at 6:52 PM 1 comments
பள்ளியில் நெரிசலில் சிக்கி ஒருவர் சாவு
திருநெல்வேலி மாவட்டத்தில் சுரண்டையில் 65 வயது பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்தார், மேலும் 12பேர் காயமடைந்தனர். ஒரு பள்ளிக்கூடத்தில் குடிநீர் இணைப்பு வேண்டுவோர் விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளிக் கதவைத் திறந்ததும் கூட்டம் உள்ளே ஓடியது. இந்த நெரிசலில் சிக்கி S. கனியம்மாள் இறந்தார்.
One killed in stampede in Madurai
Woman killed in stampede
One killed, 12 hurt in school stampede
A huge crowd gathered at the entrance of the school gate to submit their applications.
Once the gate was opened the crowd rushed inside, leading to the stampede, in which one S Kaniammal was killed and 12 others suffered serious injuries, police said.
Posted by சிறில் அலெக்ஸ் at 6:28 PM 0 comments
தங்கம் விலை திடீர் சரிவு
கடந்த சில நாட்களாக உயர்வைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையில் நேற்றும், இன்றும் சரிவு காணப்பட்டது. இன்று ஒரேநாளில் தங்கம் சவரன் ஒன்றுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.6,712-க்கு விற்கப்பட்டது. இது மளமளவென்று உயர்ந்து, ஜனவரி மாத தொடக்கத்தில் 6,816 ரூபாயை தொட்டது. கடந்த பிப்ரவரி 27-ந்தேதி சவரன் ஒன்றுக்கு ரூ. 7,280 ஆக உயர்ந்தது. அசுரவேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.
நேற்று 7,072 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் இன்று 6,888 ரூபாயாக குறைந்தது. ஒரேநாளில் சவரன் 184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 861-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் சவரன் ஒன்றுக்கு 392 ரூபாய் குறைந்துள்ளது.
தொடுப்பு:
MSN INDIA - தங்கம் விலை திடீர் சரிவு
Posted by மணியன் at 11:26 AM 0 comments
குடியரசுத் தலைவர், பிரதமர் - ஹோலி வாழ்த்துக்கள் !
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் வண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாடும் வட இந்தியத் திருவிழாவான 'ஹோலி'சமயத்தில் மக்களுக்கு இந்த உற்சாகம் நாட்டை முன்னடத்திச் செல்ல மனவுறுதி கிடைக்க வாழ்த்தியுள்ளனர்.
மேலும்..
Posted by மணியன் at 9:06 AM 2 comments
அருண் நயார் எலிசபெத் ஹர்லி திருமணம்
பிரிட்டிஷ் மாடலும் நடிகையுமான எலிசபெத் ஹர்லியும் இந்திய தொழிலதிபரான அருண் நயாரும் இங்கிலாந்தின் க்லௌசெஸ்டஷைரில் உள்ள சுடெலி கோட்டையில் திருமண உறுதி எடுத்துக் கொண்டனர். இவர்களது இந்தியவகைத் திருமணம் ஜோத்பூரின் உமைத் பவனில் கோலாகலமாகக் கொண்டாடப் பட உள்ளது.
D A I J I W O R L D
Posted by மணியன் at 8:52 AM 0 comments
The Lost Tomb of Christ இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை.
"The Lost Tomb of Christ" என்ற தொகுப்பு படத்தை Discovery Channel வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்புகிறது. அதை இந்தியாவில் ஒளிப்பரப்ப கிருத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்த இந்தியாவில் அது ஒளிபரப்பாகாது என தெரிகிறது.
அப்படத்தில் Jesus was buried in Jerusalem and fathered a child named Judah with Magdalene.
CNN-IBN (IBNLIVE.COM)
Posted by சிவபாலன் at 4:38 AM 4 comments
பாலியல் விழிப்புணர்வு கல்வி
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை மற்றும் கலிபோர்னியா பல்கலை சார்பில் கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக தர்மபுரி, சேலம், கோவை மற்றும் ஈரோட்டில் உள்ள கல்லூரிகளில் பாலியல் கல்வி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில், நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை மண்டல மேலாளர் ஆர்த்ரோ அசோக் தலைமையில் பாலியல் கல்வி குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
கலிபோர்னியா பல்கலை மாணவி மெகருத்ரா மாணவ, மாணவியர் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
தமிழ் முரசு
Posted by சிவபாலன் at 3:50 AM 0 comments
b r e a k i n g n e w s...