.

Sunday, March 4, 2007

தங்கம் விலை திடீர் சரிவு

கடந்த சில நாட்களாக உயர்வைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலையில் நேற்றும், இன்றும் சரிவு காணப்பட்டது. இன்று ஒரேநாளில் தங்கம் சவரன் ஒன்றுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.6,712-க்கு விற்கப்பட்டது. இது மளமளவென்று உயர்ந்து, ஜனவரி மாத தொடக்கத்தில் 6,816 ரூபாயை தொட்டது. கடந்த பிப்ரவரி 27-ந்தேதி சவரன் ஒன்றுக்கு ரூ. 7,280 ஆக உயர்ந்தது. அசுரவேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.

நேற்று 7,072 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் இன்று 6,888 ரூபாயாக குறைந்தது. ஒரேநாளில் சவரன் 184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 861-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் சவரன் ஒன்றுக்கு 392 ரூபாய் குறைந்துள்ளது.

தொடுப்பு:
MSN INDIA - தங்கம் விலை திடீர் சரிவு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...