.

Tuesday, May 22, 2007

ச: ஜெ மீது நடவடிக்கை - தமிழக அரசு

அனுமதி பெறாமல் கொடநாடு எஸ்டேட்டில் கட்டிடம் கட்டியதற்காக ஜெயலலிதாமீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோத்தகிரி பஞ்சாயத் யூனியன் தலைவர் ராஜுவின் புகாரின்பேரில் நீலகிரி கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று கலெக்டரின் ஆணைப்படி ஆய்வுசெய்ய சென்றவர்களை, வீட்டில் ஜெயலலிதா இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டது.

T. Nadu Govt. to take legal action against Jayalalithaa The Hindu

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ. 4700 கோடி மென்பொருள் ஏற்றுமதி

இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடிகளாக உயரும் என மத்திய வர்த்தகத் துறையின்கீழ் செயல்படும் 'எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி கவுன்சில்' என்ற அமைப்பின் செயல் இயக்குநர் டி.கே. சரீன் தெரிவித்தார்.

2007-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4700 கோடி மதிப்பிலான மென்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ. 3430 கோடியாக இருந்தது என்றார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருள்களில் 65 சதவீதம் அமெரிக்காவுக்கும், 25 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி



இந்தியாவுடனான வர்த்தகம் வளர்முகம்: சவூதி

சவூதி அரேபியா, 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்துள்ளது. 2005-ம் ஆண்டில் இந்தியாவுடனான ஏற்றுமதி ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என சவூதி வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அப்துல்லா அல் அம்முதி தெரிவித்தார். இதை லண்டனைச் சேர்ந்த அராபிக் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிராண்ட் பிரீ: முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் பங்கேற்பு

ஆசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில் முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் திலிப் ரோஜர் (22) பங்கேற்கிறார். ஆறு சுற்றுகள் கொண்ட ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை திலிப் ரோஜர் பெறுகிறார்.

ஹோண்டா சிபிஆர் 600 சிசி மோட்டார் சைக்கிளில் இவர் பந்தயத்தில் பங்கேற்கிறார். இப்போட்டியின் முதல் சுற்று இந்தோனேசியாவில் ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பருவத்தில் உயர்நிலைப் போட்டிகளில் திலிப் பங்கேற்பது இதுவே முதல் தடவை.

இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கும் இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி

ச:'Jet Lag' தவிர்க்க வயகரா

தனது டைம் ஜோனை (Time Zone) விட்டு மற்றவற்றிற்கு செல்லும்போது ஒருவரின் உறக்கம், பசி எடுக்கும் நேரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதை ஜெட் லாக்(Jet Lag) என அழைக்கிறார்கள். இவ்வாறு ஜெட் லாக் வருவதிலிருந்து மீழ ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இந்த சமயத்தில் ஒருவருக்கு சிந்திக்கும் திறனும் (பொதுவாக) செயல்படும் ஆற்றலும் குறைந்து காணப்படும்.

வயகரா மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன்மூலம் ஜெட் லாகிலிருந்து எளிதில் மீழலாம் என ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

Viagra shown to aid jet-lagged travelers Reuters

மாநிலங்களவைக்கு டி. ராஜா: இந்திய கம்யூனிஸ்ட் ஒப்புதல்

மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேசிய செயலர் டி. ராஜாவை நிறுத்துவதற்கு அக்கட்சி முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின்போது ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவைத் தேர்தலின்போது ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படுகிறது.

ஏ. தங்கவேல் / தினமணி

'மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து': ஒதுங்குகிறது காங்கிரஸ்

'காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பாமர மக்களிடையே செல்வாக்கை இழந்து வருகிறது; அதன் பொருளாதாரக் கொள்கையில் உடனடியாகத் திருத்தம் தேவை என மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளது, அவரது தனிப்பட்ட கருத்து' என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

'அய்யரின் கருத்துக்கு மற்றவர்கள் சொல்லும் விளக்கத்தை ஏற்க முடியாது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொள்கைகளை அய்யர் விமர்சனம் செய்திருந்தால் அதை நாங்கள் ஏற்க முடியாது' என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

சாமானியர்களுக்காக பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு சாமானிய மக்களின் ஆதரவு கிடைக்காமலே போகலாம் என மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

'நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய கடமை இருப்பதுடன், அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும்' எனவும் மணிசங்கர் அய்யர் கூறியிருந்தார். தன்னுடைய கருத்துகளை பிரதமர் மிகுந்த அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டதாகவும், பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் செய்வதற்கான சமயம் வந்து விட்டது என்பதை அவர் மிகச்சரியாக புரிந்துகொண்டுள்ளதாகவும் அய்யர் கூறியுள்ளார்.

தினமணி

ச: உயிரினங்கள் அழிப்பு - ஐநா வேண்டுகோள்

மனித செயல்களால், உலகில், ஒரு மணிநேரத்தில் மூன்று தாவர அல்லது விலங்கினங்கள் அழிக்கப்படுகின்றன எனும் திடுக்கிடும் தகவலை ஐநா வெளியிட்டுள்ளது.

உயிரியல் பன்மைத்தன்மையை (Biodiversity) முன்பைவிட அதிவேகமாக இழந்துவருகிறோம் என்று குறிப்பிடும் அறிக்கையில் இதைக் குறைக்க உலகநாடுகள் தேவையானதை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மே 22 உயிரியல் பன்மைத்தன்மைக்கான நாளாக நினைவுகூறப்படுகிறது.

U.N. urges world to slow extinctions: 3 each hour Reuters
"We are indeed experiencing the greatest wave of extinctions since the disappearance of the dinosaurs," said Ahmed Djoghlaf, head of the U.N. Convention on Biological Diversity. Dinosaurs vanished 65 million years ago, perhaps after a meteorite struck.

Scientists and environmentalists issued reports about threats to creatures and plants including right whales, Iberian lynxes, wild potatoes and peanuts on May 22, the International Day for Biological Diversity.

ராமநாதபுரம், கன்னியாகுமரி: குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டங்கள்

ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று மாநிலத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் சுமார் 42 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி

ச: எஸ்.பி. பிரேம்குமார் டிஸ்மிஸ்

முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனையும் கை விலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்ற வழக்கில் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.பி. பிரேம்குமார் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்பவரையும், அவரது மகனையும் நடு ரோட்டில் அடித்து உதைத்து கையில் விலங்கிட்டு தெருத் தெருவாக இழுத்துச் சென்று சித்தரவதை செய்ததாக பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிரேம் குமாருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து பிரேம்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது அவர் முன்ஜாமீனில் உள்ளார்.

எஸ்.பி. பிரேம்குமார் டிஸ்மிஸ் தாட்ஸ்தமிழ்

நன்றி: வாசகன்

ச:கோராக்பூரில் குண்டுவெடிப்பு

உத்திரப்பிரதேசம் கோராக்பூரில் மூன்று நாட்டுவெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விபரங்கள் ஏதும் தெரியவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Six hurt as bomb blasts rock Gorakhpur The Hindu

புலிகள் கடத்தினார்களா? - முடிவுகள்


முந்தைய சர்வே: 'சிவாஜி' தமிழ் பெயரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை.

திண்டுக்கல் : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள இவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சேதானை நடத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கலில் இவரது பினாமி பெயரில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார்.

சென்னை நகர காவல்துறையில் புதிதாக 2வது கூடுதல் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார். சென்னை நகர ஆணையராக லத்திகா சரண் உள்ளார். இவரது பணிகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக கூடுதல் ஆணையராக ஜாங்கிட் உள்ளார். இந் நிலையில் தற்போது 2வது கூடுதல் ஆணையர் பதவியை திமுக அரசு உருவாக்கியுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை நகரில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தியபோது சுனில்குமாரை ஸ்டாலின் தள்ளி விட்டதாக சர்ச்சை கிளப்பப்பட்டது. ஸ்டாலின் மீது புகார் தருமாறு சுனில்குமாரை ஜெயலலிதா அரசு நெருக்கியது. ஆனால், ஸ்டாலின் என்னை தள்ளிவிடவில்லை என்று கூறிய சுனில்குமார், இது தொடர்பாக புகார் தரவும் மறுத்துவிட்டார். இதனால் இவரை அதிமுக அரசு ஓரங்கட்டி வைத்தது. அந்த சுனில்குமார்தான் தற்போது 2வது கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போக்குவரத்துப் பிரிவை கவனிப்பார். ஜாங்கிட் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவை கவனிப்பார். இதேபோல மத்திய சென்னை இணை ஆணையர் பதவிக்கு புதிதாக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு.

பஞ்சாப் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு மேற்கொள்ளப்படுவதையொட்டி, அம்மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. தேரா சச்சா அமைப்பின் தலைவர் பாபா குர்மித் சிங்கை கைது செய்யக் கோரி பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

ச:மாதாவுக்கு வைர கிரீடம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் பொருத்தப்பட்டது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு பாரம்பரிய வைர கற்களால் கலை நயமிக்க வைர கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரீடம் தயாரிக்கும் பணி 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இடைவிடாது ஏழு நபர்கள் கொண்ட குழுவால் இந்த மாதம் முடிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரக் கற்கள் அனைத்தும் விலை மதிப்பற்றவை. கிரீடம் பொருத்தப்பட்ட பின், தேவாலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாகவும் பேராலய அதிபர் சேவியர் அடிகள் தெரிவித்தார்.

தினமலர்

ச:'பதவி விலகத் தயார்' டி. ஆர். பாலு

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று 'ராமர் சேது மனிதனால் உருவாக்கப்பட்டது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டால் பதவி விலகத் தயார்.' என அறிக்கை விடுத்துள்ளார்.

"Some fundamental organisations have claimed that NASA had taken the picture of Ramar Sethu and said that it was a man-made structure.

"If it was scientifically proved and NASA said it was man-made, then I will quit", Baalu told reporters here.

Baalu offers to quit if Ramar Sethu proved to be man-made The Hindu

-o❢o-

b r e a k i n g   n e w s...