.

Friday, May 18, 2007

சிதம்பரம் நடராஜர்ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 79 பேர் கைது

சிதம்பரம், மே 18: சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரத் திருமுறைப்பாடல்களை பாட ஊர்வலமாகச் சென்ற சிவனடியார் உ.ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பெண்கள் உள்ளிட்ட 79 பேரை நகரப் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரத்திருமுறைப் பாடல்களை பாட தடை விதித்து மயிலாடுதுறை இணைஆணையர் 12-12-04-ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந் நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் தடையை மீறி பாடச்சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆலய பொது தீட்சிதர்கள் சிற்றம்பலமேடையில் பாடக்கூடாது என சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் நிரந்தரத்தடை பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக - சற்றுமுன்...: நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

இதனையடுத்து சிவனடியார் ஆறுமுகசாமி வியாழக்கிழமை காலை சிற்றம்பலமேடையில் பாட, மேலவீதி பெரியார்சிலை அருகேயிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார்.

Dinamani.com

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சோனியா இரங்கல்.

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான குடும்பங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த குண்டு வெடித்து இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியானர்கள். இந்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களுக்கு இரங்கலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இதற்கிடையே பலியான ஒவ்வொருக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், என மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.ஹைதராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ச:டிக்சனரியில் தவறு - கர்நாடகா எதிர்ப்பு

ஆக்ஸ்ஃபோர்ட் அருஞ்சொற்பொருள் அகராதியில் பெங்களூரின் வரலாற்றை குறிப்பிடுகையில் அது அதிகமாக பெங்காலி மொழி பேசும் மக்களைக்கொண்டது எனத் தவறாகக் கூறிப்பிடப்பட்டதால் கர்நாடக அரசு ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தவறை திருத்த கடிதம் எழுதியுள்ளது.

இந்த அகராதி கர்நாடகா பற்றி மேலும் சில தவறான செய்திகளைக் கொண்டுள்ளது எனத் தெரிகிறது.

Karnataka irked over dictionary containing 'misleading' details The Hindu

Update
Oxford University Press suspends sale of its dictionary Zee News

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. இருபத்திஐந்தாயிரம் அபராதமும் விதித்து மும்பை சிறப்பு தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 93 ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 23 பேரை தவிர, குற்றவாளிகள் 100 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என மும்பை தடா நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே ஏற்கெனவே தனது தெரிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகள் 100 பேரில் 5 பேருக்கான தண்டனையை இன்று சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே அறிவித்தார். யாஷ்வாந்த்ராவ் போயின்கர், அப்பாஸ் தாவுத் ஷைகேந்தர், ஷாஜாகான் ஷைகேந்தர், ரஷித் உமர் ஆல்வரே மற்றும் ஷெரிப் கான் ஆதிகாரி ஆகிய ஐந்து மீனவர்களே இந்தத் தண்டனையை பெறுபவர்கள் ஆவர். இவ்வழக்கில் குற்றாவாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், முதலில் 5 பேருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும், பின்னர் 8 முதல் 10 நாட்களுக்குள் தண்டனை அறிவிப்புகள் நிறைவடையும் என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகிம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கிலிருந்து நன்னடத்தைக் காரணமாக தங்களை விடுவிக்குமாறு சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களான யூசுப் நுல்லாவா, ருசி முல்லா மற்றும் கேர்ஸி அடேஜினியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவை பரிசீலிக்கும் மும்பை தடா நீதிமன்றம், சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குமா அல்லது அவர்களை நன்னடத்தை காரணமாக விடுவிக்குமா என்பதும் விரைவில் தெரியவரும்

ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடிப்பு .

ஆந்திரத் தலைநகர் ஹைத்ராபாத்தில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பழைய ஹைத்ராபாத்தில் நெரிசல் மிகுந்த சார்மினார் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சார்மினாரில் இருந்து பத்து மீட்டர் தொலைவில் உள்ள மெக்கா மசூதி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எனினும், குண்டு வெடித்த இடம் பற்றிய உறுதியாகத் தெரியவில்லை.விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நகரில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது டெல்லியில் உள்ள முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து உடனடியாகக் கேட்டறிந்தார்.மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நிலைமையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.விபத்து பற்றிய முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராதிகா செல்வி!

திமுக மக்களவை உறுப்பினரும், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி. ராதிகா செல்வி இன்று மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ராதிகா செல்விக்கு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவரது இலாகா விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அவர் உள்துறை இணையமைச்சராகக் கூடும் என்று தெரிகிறது.பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராதிகா செல்வியின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தேர்தலில் 121 பேர் பலி

பிலிப்பைன்ஸில் திங்களன்று நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவிகித வாக்கு பதிவாகியது. கடந்த முறை நிகழ்ந்த வன்முறை போலவே இந்த தடவையும் குண்டுவெடிப்பு போன்றவற்றில் 121 பேர் இறந்தார்கள். ஆங்காங்கே முறைகேடு நடந்ததற்கான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

1. Elections in South-East Asia | Voting for more of the same | Economist.com
2. Deaths and Fraud Reports Mar Philippine Vote - New York Times

தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ரயில்

கொரியா மீண்டும் இணையலாம் என்னும் எண்ணத்தை விதைக்குமாறு, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு இரயில் விடப்பட்டுள்ளது. எண்பது மில்லியன் டாலர் செலவில் 56 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக உறவிற்கு பாலம் வகுக்கும் வகையில் டிரெயின், எல்லைகளைக் கடந்தது.

BBC NEWS | Asia-Pacific | South Korea's reconciliation gamble

ச:சக மாணவியை அச்சுறுத்திய பெண்ணிற்கு அவள் தாயே தண்டனை!

மியாஷா வில்லியம்ஸ் என்கிற பனிரெண்டு வயது சிறுமி தன்னுடன் படிக்கும் சக மாணவியை அச்சுறுத்தியதால் அவளுடையெ தாயே தண்டித்தாள்.எப்படி?

ஒரு வாரத்திற்கு மியாஷாவின் கழுத்தில், ' நான் என்னுடன் படிக்கும் பெண்ணை துன்புறுத்தினேன் இதனால் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன். நீங்கள் யாரும் என்னை போல் இருக்காதீர்கள்" என்கிற அவளால் கைபட எழுதிய ஒரு அட்டையை மாட்டி பள்ளிக்கு செல்ல வைத்தாள்!

மேலும் படிக்க

http://www.latimes.com/news/local/la-me-bully18may18,1,1010624.story?track=rss

ச: உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு- பிரதமர் மன்மோகம்சிங் ஆதரவு

ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, டில்லியில் நேற்று துவங்கியது.

பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜாதி வித்தியாசமின்றி ஏழை குழந்தைகளின் பிரச்னைகள் தீர்வுக்கு யோசனைகள், திட்டங்கள் இருந்தால், அதை நிறைவேற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த கருத்தரங்கின் மூலம், எல்லா பிரிவினரும் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான, சிறப்பான ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் , சிறுபான்மையினர், பெண்களின் மேம்பாட்டில் எங்கள் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பின்தங்கியுள்ள பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அத்வானி பேசியதாவது: உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும், பிற்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம்களையும் சமுதாயத்தில் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் அவசியம். வரலாற்றுப் பின்னணியின் காரணமாக இந்திய சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இன்று உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள் படும் ஏழ்மையையும் சேர்ந்து ஆராயாவிட்டால், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது என்பது முழுமை பெறாது.

- தினமலர்இது சம்பந்தமாக "தி இந்து நாளிதழில் வந்த செய்தி "

மாயாவதி காலில் விழாத பிராமண அமைச்சர்கள்

கான்பூர், மே 17-
உ.பி. அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிராமண வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் முதல்வர் மாயாவதி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதை தவிர்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

உ.பி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. முதல்வராக அக்கட்சியின் தலைவி மாயாவதி பதவியேற்றார். அதன்பின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதில் பலர் முதல்வர் மாயாவதியின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். ஆனால் தாகூர் ஜைவீர் சிங், ரங்கநாத் மிஸ்ரா, ஆனந்த் மிஸ்ரா, நகுல் துபே, தாடன் மிஸ்ரா உட்பட சிலர் மட்டும் காலில் விழாமல் லேசாக தலைவணங்கியபடி மாயாவதியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். இவர்கள் எல்லாம் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலித் முதல்வர் மாயாவதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு இளையவர்கள் ஆசீர்வாதம் வாங்குவது என்பது இந்திய பாரம்பரிய பழக்கம். பிராமண அமைச்சர்கள் எல்லாருமே முதல்வர் மாயாவதியை விட வயது குறைந்தவர்களாக இருந்தும் அவர்கள் காலில் விழாமல் சென்றுள்ளனர். ஈகோ பிரச்னையைவிட ஜாதி உணர்வு இவர்களுக்கு இன்னும் அதிகம் இருப்பதால் தலித் முதல்வரின் காலில் விழ மறுத்துள்ளனர் என பனராஸ் இந்து பல்கலைக்கழக சமூகவியல் வல்லுனர் பான்டே தெரிவித்துள்ளார்.

- மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...