ஆந்திரத் தலைநகர் ஹைத்ராபாத்தில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பழைய ஹைத்ராபாத்தில் நெரிசல் மிகுந்த சார்மினார் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சார்மினாரில் இருந்து பத்து மீட்டர் தொலைவில் உள்ள மெக்கா மசூதி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எனினும், குண்டு வெடித்த இடம் பற்றிய உறுதியாகத் தெரியவில்லை.விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நகரில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது டெல்லியில் உள்ள முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து உடனடியாகக் கேட்டறிந்தார்.மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நிலைமையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.விபத்து பற்றிய முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Friday, May 18, 2007
ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடிப்பு .
Labels:
சட்டம் - நீதி,
தீவிரவாதம்
Posted by
Adirai Media
at
3:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
டிவி 9 என்ற தொலைக்காட்சிக்கு எப்படி இது முன்கூட்டியே தெரியும் ? இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம் எனவே இதுக்கு CBI விசாரனைக்கு உத்தரவிடுவதே சரி.
Post a Comment