சிதம்பரம், மே 18: சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரத் திருமுறைப்பாடல்களை பாட ஊர்வலமாகச் சென்ற சிவனடியார் உ.ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பெண்கள் உள்ளிட்ட 79 பேரை நகரப் போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரத்திருமுறைப் பாடல்களை பாட தடை விதித்து மயிலாடுதுறை இணைஆணையர் 12-12-04-ல் உத்தரவு பிறப்பித்தார்.
இந் நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் தடையை மீறி பாடச்சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆலய பொது தீட்சிதர்கள் சிற்றம்பலமேடையில் பாடக்கூடாது என சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் நிரந்தரத்தடை பெற்றனர்.
அதன் தொடர்ச்சியாக - சற்றுமுன்...: நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு
இதனையடுத்து சிவனடியார் ஆறுமுகசாமி வியாழக்கிழமை காலை சிற்றம்பலமேடையில் பாட, மேலவீதி பெரியார்சிலை அருகேயிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார்.
Dinamani.com
Friday, May 18, 2007
சிதம்பரம் நடராஜர்ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 79 பேர் கைது
Posted by Boston Bala at 11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
தமிழில் தேவாரம்? வேறு எந்த மொழிகளில் எழுதினார் சம்பந்தர்? :-)
Post a Comment