.

Friday, May 18, 2007

ச: உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு- பிரதமர் மன்மோகம்சிங் ஆதரவு

ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, டில்லியில் நேற்று துவங்கியது.

பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜாதி வித்தியாசமின்றி ஏழை குழந்தைகளின் பிரச்னைகள் தீர்வுக்கு யோசனைகள், திட்டங்கள் இருந்தால், அதை நிறைவேற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த கருத்தரங்கின் மூலம், எல்லா பிரிவினரும் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான, சிறப்பான ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் , சிறுபான்மையினர், பெண்களின் மேம்பாட்டில் எங்கள் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பின்தங்கியுள்ள பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அத்வானி பேசியதாவது: உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும், பிற்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம்களையும் சமுதாயத்தில் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் அவசியம். வரலாற்றுப் பின்னணியின் காரணமாக இந்திய சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இன்று உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள் படும் ஏழ்மையையும் சேர்ந்து ஆராயாவிட்டால், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது என்பது முழுமை பெறாது.

- தினமலர்



இது சம்பந்தமாக "தி இந்து நாளிதழில் வந்த செய்தி "

1 comment:

Anonymous said...

திடீரென்று காங்கிரஸுக்கு ஏன் உயர் சாதி பாசம்? எல்லாம் மாயாவதி கண்டுபிடித்த 'winning formula'தான். இவ்வளவு நாள் upa அரசு இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை எதிர்த்து வந்திருக்கிறது. இப்போதைய மாற்றத்திற்கு காரணம் மாயாவதிதான். பின் தங்கிய வகுப்பினரின் அட்டகாசத்தை ஒடுக்க தலித் சமூகத்தினரும், முன்னேறிய சமூகத்தினர் என அழைக்கப்படுவோரும் ஒன்று கூடும் காலம் வந்துகொண்டேயிருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...