திமுக மக்களவை உறுப்பினரும், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி. ராதிகா செல்வி இன்று மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ராதிகா செல்விக்கு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவரது இலாகா விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அவர் உள்துறை இணையமைச்சராகக் கூடும் என்று தெரிகிறது.பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராதிகா செல்வியின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகியுள்ளார்.
Friday, May 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
சாதீய அடிப்படையில் செய்யப்பட்ட இந்த நியமனத்தை தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும். இவருடைய தகுதி என்ன? ஒரு ரவுடியின் மனைவி என்பதைத் தவிர? இப்படிப் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கலைஞர் செய்வது பச்சை சந்தர்ப்பவாதம்.
Post a Comment