.

Saturday, June 23, 2007

மக்களின் நாயகராக நினைவுகூரப்பட விருப்பம்- கலாம்.


இன்னும் ஒரு மாதத்துக்குள் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து வெளியேற உள்ள அப்துல்கலாம் தாம் மக்கள் நாயகராக நினைவு கூரப்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தியாவின் தலைமைப்பதவியை அலங்கரித்தவர்களுள் அதிகமான மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, பிரசித்தம் பெற்ற இந்த 76 வயது விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் மாளிகையை 'மக்களின் மாளிகை'யாக மாற்றியதே இந்த ஐந்து வருடத்தில் தமது பணியாக இருந்தது என்றார்.

இம்மாளிகையின் பிம்பம் தமது காலத்தில் மாற்றப்பட்டதையடுத்து அரை மில்லியனிலிருந்து ஒரு மில்லியன் வரையிலான மக்கள் வருடந்தோறும் இம்மாளிகைக்கு வருகைப் புரிந்ததாகவும் அவர் சொன்னார். இம்மாளிகையில் 127 வகை ரோஜா மலர்களைப் பராமரிப்பதில் அக்கறை செலுத்தி வந்த அப்துல்கலாம், கடந்த மார்ச் மாதம் வரை, மொகல் தோட்டத்தில் பார்வையாளர்களைச் சந்தித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

குடியரசுத்தலைவர் மாளிகையின் கண்ணியத்தை உத்தேசித்து இதை அரசியல் மாளிகையா(க்)க தாம் ஒருபோதும் கருதியதில்லை என்றார் அப்துல்கலாம்.

கிரிக்கெட்: இந்தியா வெல்ல 194 ரன்கள் தேவை.

இந்தியா அயர்லாந்துடன் பெல்ஃபாஸ்டில் நடந்துவரும் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 193 ரன்களுக்கு அயர்ந்துவிட, இந்தியா 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலுள்ளது.
ஓ பிரியன் 52 ரன்கள்ளும், ஜான்ஸ்டன் 34 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பில் சாவ்லாவுக்கு 3 விக்கெட்கள் - 29, ஸ்ரீசாந்த் 3-50, ஆர்.பி.சிங் 2-26 ம் எடுத்தனர்.

ச: முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் டெஸ்ட் பந்தய வீரர் திலீப் சர்தேசாய் பம்பாய் மருத்துவமனையில் நெஞ்சு சம்பந்தமான நோய்க்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். முன்னதாக ICU வில் இருந்த அவர் மருத்துவ சிகிட்சைக்குப் பின்னர் தேறி மருத்துவர்களின் பார்வையில் இருந்து வருகிறார். 66 வயதான சர்தேசாய் 1961க்கும் 1973 க்கும் இடையே 30 டெஸ்ட் பந்தயங்களில் விளையாடி2000க்கும் மேலான இரன்களை குவித்தவர்.
The Hindu News Update Service

ச:சபரிமலை தந்திரியின் பேரன் கைது

குருவாயூர் விவகாரத்தின் தொடர்ச்சியாக இன்று திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் முன்னர் தேவஸ்வம் போர்ட் மந்திரியின் கூர்றை எதிர்த்து அவருக்கு நல்வழி காட்ட பூசை செய்ய முயன்ற சபரிமலை தலமை பூசாரி (தந்திரி)யின் பேரன் ராகுல் ஈஸ்வரை காவலர் கைது செய்தனர்.

மேலும்... The Hindu News Update Service

ச: மாநிலத்தில் மின்வெட்டு இல்லை: தமிழக முதல்வர்

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது என்ற அ இ அதிமுகவின் தலைவர் செல்வி ஜெயலலிதாவின் கூற்றை மறுத்து தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று மதுரையில் பேசுகையில் மாநிலத்தில் மின் உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அதனை பஞ்சாப் மற்றும் மகாராட்டிரத்திற்கு விற்பதாகவும் தெரிவித்தார். சில பகுதிகளில் ஏற்படும் மின்தடங்கல்களுக்கு மின்மாற்றிகள் போதுமானவை இல்லாததே காரணம் என்றார். கடந்த ஆட்சியில் 14,000 மின்மாற்றிகள் பற்றாக்குறை இருந்தபோது அதிமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கத் தவறியதே இதற்கு காரணம் என்றார். பேட்டியின் போது மாநில மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடனிருந்தார்.
The Hindu News Update Service

ச:தமிழகமுதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை

ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக மதுரை வந்துள்ள முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும்போது தான் இடைதேர்தலை தள்ளி வைப்பதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார். நடுவண் அரசினால் தேர்தல் ஆணையம் பயமுறுத்தப்படும் என்பது முழுமையும் கற்பனையே என்று மேலும் அவர் கூறினார்.
மேலும்..The Hindu News Update Service

லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது!

திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மானூர் அருகே இரண்டும்சொல்லான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு வேலை விஷயமாக மானூர் உதவி மின் பொறியாளர் நரேந்திரனை அணுகியபோது, அவரிடம் நரேந்திரன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் லஞ்சம் கொடுத்தபோது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் எஸ்பி மலுக் முதலி தலைமையில் சென்ற போலீசார் மறைந்திருந்து நரேந்திரனை பிடித்து கைது செய்தனர்.

ச:ஆந்திராவில் கனமழை: 30 பேர் மரணம்

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதோடன்றி குறைந்தது முப்பது பேர் வரை இறந்தனர். பல் இடங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கர்நூலில் மட்டும் 15 பேர்வரை இறந்திருக்கின்றனர். தெலுங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் கனத்த மழை தொடரும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.

மேலும்...The Hindu News Update Service

ச:பிரதீபா பாடீல் வேட்புமனு தாக்கல் செய்தார்

ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான பிரதீபா பாடீல் தனது வேட்புமனுக்களை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்தலைவர் சோனியாகாந்தி உடன் வர குடியரசுதலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி மக்களவை செயலர் பி டி ட்டி ஆசாரியிடம் சமர்ப்பித்தார். லாலுபிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், டி ஆர் பாலு, சீதாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் உடனிருந்தனர். தவிர நடுவண் அரசு அமைச்சர்கள் பிரணப் முகர்ஜி, சிவ்ராஜ் பாடீல், அர்ஜுன் சிங், ஏகே ஆன்டனி, சுஷில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான் ஆகியோரும் மகாராட்டிர முதல்வர் விலாஸ ராவ் தேஷ்முக், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரும் பங்குபெற்றனர். பாடீலின் கணவர் தேவ்சிங் செகாவத் அவருடன் வந்திருந்தார். முன்னதாக தனது குடும்பத்தினருடன் இராஜ்காட் சென்று காந்தி சமாதியில் தேசபிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
The Hindu News Update Service

ச: அந்தமானில் நிலநடுக்கம்:சுனாமி பயமில்லை

இந்திய வானிலை அலுவலக அறிக்கையின்படி அந்தமானின் போர்ட் ப்ளையரிலிருந்து 116 கி,.மீ தூரத்தில் ஹட் பே யில் நேற்று இரவு ( இன்று காலை)1.20 க்கு 5.9 ரிச்டர்அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் துறை 6.1 என்று கணக்கிட்டுள்ளது. ராய்டர்ஸ் செய்தியின்படி அந்தமான்வாசிகள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடியதாக தெரிகிறது. 2004 சுனாமியின் நினைவுகள் அவர்களை பயமுறுத்தியிருக்க வேண்டும். பொருட்சேதமோ ஆட்சேதமோ இதுவரை தெரியவில்லை.
Quake hits India's Andaman islands, revives fears - Yahoo! India News

அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .

சுனிதா பத்திரமாக தரை இறங்கினார்.
அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனம்கடந்த 8-ந்தேதி அட்லாண்டிஸ் விண்கலத்தை அனுப்பியது. விண்வெளி ஆய்வுக்கூடத்தில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீராங்கனை சுனிதாவை அழைத்து வரவும் அங்கு தளவாடங்களை பொருத்தவும் இந்த விண்கலம் அனுப்பபட்டது. சுனிதா மற்றும் 6 விண் வெளிநிபுணர்களுடன் அட்லாண்டிஸ் ராக்கெட் கடந்த 19-ந்தேதி மீண்டும் பூமிக்கு புறப்பட்டது.ஏற்கனவே அட்லாண்டிஸ் விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட போது அதன் வெப்ப தடுப்பு தகடு சேதம் அடைந்தது.ஆய்வுக் கூடத்தில் கம்ப்ïட் டர்களும் பழுதடைந்தன. இதனால் சுனிதா பூமிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்தது. இந்த கோளாறுகள் சரி செய் யப்பட்டு அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு புறப்பட் டதும் புளோரிடா மாநிலம் கேப்கனவரால் கென்னடி தளத்தில் தரை இறங்க திட்ட மிடப்பட்டு இருந்தது.ஆனால் புளோரிடா மாநிலத்தில் மோசமான வானிலை காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. இதனால் விண்கலம் தரை இறங்குவது மேலும் தாமதமானது.
இதைதொடர்ந்து கலி போர்னியா மாநிலத்தில் மொஜாவ் பாலைவனப்பகு தியில் உள்ள கென்னடி விமானபடை தளத்தில் விண் கலத்தை தரைஇறக்க முடிவு செய்யப்பட்டது.
விண்கலம் வானவெளி மண்டலத்தில் இருந்து புவி மண்டலத்துக்குள் நுழையும் போது விண்கலத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பரபரப்பு 3நிமிடங்களுக்கு ஏற்பட்டது. விண்கலம் பூமியில் தரை இறங்குவது மேலும் தாமதப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதில் உள்ள எரிபொருள் ஞாயிற்றுக்கிழமை வரைதான் போதுமானாகதான் இருந் தது.ஆனால் மிகுந்த பர பரப்புக்கு இடையே நேற்று நள்ளிரவு 1.19 மணிக்கு அட்லாண்டிஸ் விண்கலம் கலிபோர்னியாவில் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்தில் பத்திரமாக தரை இறங்கியது.அப்போது `நாசா' நிறு வனத்தில் கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.விண்வெளியில் 195 நாட் களுக்கு மேல் தங்கி இருந்த பெண் என்று சாதனை படைத்த சுனிதா பூமிக்கு எந்த ஆபத்தும் இன்றி திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அட்லாண்டிஸ் விண்கலத் தில் இருந்து இறங்கிய சுனிதாவுக்கும் மற்ற 6 வீரர்களும் பல்வேறு மருத் துவசோதனைகள் நடத் தப்பட்டன. விண்வெளியில் 6 மாதங் களுக்கு மேல் தங்கி இருந்த சுனிதாவுக்கு இந்த பூமி இப் போது ஒரு புதிய உலகம் போல் தோன்றுகிறது. அவர் சகஜ நிலமைக்கு திரும்ப இன்னும் 45 நாட்கள் ஆகும்.
சுனிதாவுக்குப்பதில் இப்போது மிதக்கும் விண் வெளி ஆய்வுக்கூடத்தில் ஆன்டர்சன் என்ற வீரர்தங்கி இருக்கிறார்.அட்லாண்டிஸ் விண்கலம் தரை இறங்கும் இடம் எட்வர்ட் கென்னடி விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டதால் நாசா நிறுவனத்துக்கு கூடுதலாக 17 லட்சம் டாலர் செலவு பிடித்துள்ளது.

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி.

அசாம் தலைநகர் கௌகாத்தியில் இன்று காலை உல்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அங்குள்ள பரபரப்பான வியாபார பகுதியான மக்கோவாவில் ஒரு மசூதி முன்பு இன்று காலை 7.30 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த மசூதியை ஒட்டி காய்கறி மார்க்கெட் இருப்பதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மார்வாரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பயங்கர காற்று : 4படகுகள் கடலில் மூழ்கின.

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிககளில் இருந்து கடலுக்கு சென்ற 4 படகுகள் பயங்கர காற்றினால் கடலில் மூழ்கின. ஆனால் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்ட னர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் சுமார் 250 பைபர் மற் றும் நாட்டுப்படகுகளில் நேற்றுமுன்தினம் இரவு கட லுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் கடலில் பயங்கர காற்று வீசியது. இதில் அதிராம்பட்டின், மல்லிபட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற தலா 2 படகுகள் கடலில் கவிழ்ந்தன. அதில் இருந்த 8 மீனவர்கள் அருகில் இருந்த படகுகளில் ஏறி உயிர் பிழைத்தனர். ஆனால் 4 படகுகளும் கடலில் மூழ்கி விட்டன. காற்று கடுமையாக வீசியதால் மீனவர்களால் படகுகளை செலுத்த முடியவில்லை. இதனால் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற படகுகள் அனைத்தும் கோடியக்கரை, முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்கின. நேற்று காலை வெகு நேரமாகியும் மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து மீனவர்களும் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து பதற் றம் தணிந்தது. மீன்வளத்துறை ஆய் வாளர் ராஜேஸ்வரன் கூறு கையில், காற்று வேகமாக வீசியதால் 4 படகுகள் மட்டும் கடலில் மூழ்கி விட்டன. மற்ற படகுகள் கரை ஒதுங்கி விட்டன. மீனவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இன்னும் 2 நாட்களுக்கு காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனகூறினார்

-o❢o-

b r e a k i n g   n e w s...