.

Saturday, June 23, 2007

பயங்கர காற்று : 4படகுகள் கடலில் மூழ்கின.

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிககளில் இருந்து கடலுக்கு சென்ற 4 படகுகள் பயங்கர காற்றினால் கடலில் மூழ்கின. ஆனால் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்ட னர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் சுமார் 250 பைபர் மற் றும் நாட்டுப்படகுகளில் நேற்றுமுன்தினம் இரவு கட லுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் கடலில் பயங்கர காற்று வீசியது. இதில் அதிராம்பட்டின், மல்லிபட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற தலா 2 படகுகள் கடலில் கவிழ்ந்தன. அதில் இருந்த 8 மீனவர்கள் அருகில் இருந்த படகுகளில் ஏறி உயிர் பிழைத்தனர். ஆனால் 4 படகுகளும் கடலில் மூழ்கி விட்டன. காற்று கடுமையாக வீசியதால் மீனவர்களால் படகுகளை செலுத்த முடியவில்லை. இதனால் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் இருந்து சென்ற படகுகள் அனைத்தும் கோடியக்கரை, முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்கின. நேற்று காலை வெகு நேரமாகியும் மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அனைத்து மீனவர்களும் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து பதற் றம் தணிந்தது. மீன்வளத்துறை ஆய் வாளர் ராஜேஸ்வரன் கூறு கையில், காற்று வேகமாக வீசியதால் 4 படகுகள் மட்டும் கடலில் மூழ்கி விட்டன. மற்ற படகுகள் கரை ஒதுங்கி விட்டன. மீனவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இன்னும் 2 நாட்களுக்கு காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனகூறினார்

2 comments:

Anonymous said...

Better than dying under the hands of the LTTE.

Anonymous said...

எங்கள் பகுதி செயிதியை கூட தங்கள் சற்றுமுன்னில் காணும் பொழுது உண்மையில் சற்று முன்னுக்கு பின்னால் தான் மற்றவை எல்லாம் . வாழ்த்துக்கள்.

A.ஜஹபர்(UAE)
மல்லிப்பட்டினம்

-o❢o-

b r e a k i n g   n e w s...