.

Tuesday, June 5, 2007

ச:ஸ்கூட்டர் லிபிக்கு சிறை

முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அலுவலர் ஸ்கூட்டர் லிபிக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் லிபி அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனியின் உதவியாளராய் இருந்தவர். சிஐஏ ரகசிய உளவாளி ஒருவரின் விபரங்களை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. $250000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Libby sentenced to 30 months in prison CNN.com

முதல்வர் நிவாரண நிதிக்கு 5.92 இலட்சம் - கருணாநிதி.

தனது பிறந்தநாள் பரிசாக வந்த ரூ 5.92 இலட்சத்தை முதல்வர் கருணாநிதி 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு வழங்கியுள்ளார்.

அவற்றுள் 4.87 இலட்சம் பணமாகவும், 1.05 இலட்சம் காசோலையாகவும் வந்ததாகும்.

முன்னதாக, தனது பிறந்தநாளுக்கு மாலைகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக பணமாகத் தரும்படி கருணாநிதி கோரிக்கை வைத்திருந்தார்.

The Hindu

காமன்வெல்த் பொதுச்செயலாளர்: இந்திய வேட்பாளர் யார்?

வரும் நவம்பர் மாதம் கம்பாலாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பொதுச்செயலாளர் தேர்தலில் இந்தியாவின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை உயரதிகாரி திரு.கமலேஷ்சர்மா நிறுத்தப்படவுள்ளார். இப்போது அவர் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர்ஆணையராக (High Commissioner) பொறுப்பு வகிக்கிறார்.

பழுத்த இராஜதந்திரியான திரு.ஷர்மா, அய்.நா-வில் இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளவர்.

வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இச்செய்தியை வெளியிட்டார்.

ச:அமிதாப்பை அடுத்து அமிர் கான்

தொழில்முறை விவசாயி எனச் சொல்லி விவசாய நிலம் வாங்கிய சர்ச்சையில் அமிதாப்புக்கு அடுத்ததாக அமிர்கான் சிக்கியுள்ளார். இவர் பூனாவில் தான் தொழில்முறை விவசாயி எனக் கூறி விவசாய நிலம் வாங்கியதாக வந்த தகவலின்பேரில் விசாரணை மேற்கொள்ள பூனேயின் மாவட்ட ஆட்சியாளரை மகராஷ்ராவின் வருமானவரித் துறை அமைச்சர் ரானே கேட்டுள்ளார். அமிதாப் பச்சனும் பூனாவில் விவசாய நிலம் வாங்கியுள்ளார் என்றும் குற்றம் நிருபணமானால் அவர் தண்டிக்கப்படுவார் என்றும் ரானே தெரிவித்துள்ளார்.

இதனிடையே உ.பியில் அமிதாப் நிலம் வாங்கியது செல்லாது என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் ்யில் அலகபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Aamir Khan's land purchase in Pune under scanner Times of India
Amitabh moves to Allahabad HC in Barabanki farm land allotment caseNewKerala.com, India

ச:பாப் உல்மர் - 'கொலை இல்லை'

பாப் உல்மர் இறப்பை கொலையாக கருதப் போவதில்லைஇ என ஜமைக்கா போலீஸ் அறிவித்துள்ளது. இதனிடையே பாப் உல்மரின் முதல் பிரேதப் பரிசோதனை செய்து கொலை என அறிவித்த இந்திய வம்சாவழி மருத்துவர் சேசையாவிற்கு பதவி விலகும்படி நெருக்கடி வந்துள்ளது.

Woolmer pathologist under pressure to quit NDTV.com
Woolmer: Still no closure Dispatch Online, South Africa

ச: மீண்டும் பனிப்போர்?

அமெரிக்காவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏவுகணை எதிர்ப்பு/பாதுகாப்பு திட்டத்தால் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிரெச் குடியரசில் ஒரு ராடார் அமைப்பை நிறுவ உள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புட்டின் அமெரிக்கா இத் திட்டத்தை தொடர்ந்தால் 'பனிப்போர் காலத்துக்கு செல்ல நேரிடும்' என்றும் 'ரஷ்யா ஐரோப்பாவை நோக்கி தான் ஏவுகணைகளை திருப்பும்' என்றும் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளித்த புஷ் 'பனிப்போர் ஓய்ந்துவிட்டது' என்றும் இத்திட்டத்திற்கு பயப்ப்படாமல் ரஷ்யா ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரெச்்ரெச் தவிர போலந்தில் ஏவுகணை தடுப்பு மையங்களையும் அமெரிக்கா உருவாக்க உள்ளது.

ஜெர்மெனியில் நடக்கவிருக்கும் ஜி8 கூட்டத்தொடர்களில் இதைக் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன.

Bush to Putin: 'Cold War Is Over'ABC News
Bush says: 'Russia is not the enemy' Times Online
Bush defends missile defense shield San Jose Mercury News

ச:உ.பியில் 4000 கைதிகள் விடுதலை

உ.பி முதலமைச்சர் மாயாவதி முதன்முதலில் 12 வருடங்களுக்கு முன்பாக முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூறும் வகையில் 4000 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜூன் 3, 2007க்குள் 66 வயதை அடையும் ஆண் கைதிகளும் 62 வயதை எட்டும் பெண் கைதிகளும், தீவர நோய்வாய்பட்டிருக்கும்(Terminal Diseases) கைதிகளும் விடுவிக்கப்படுகின்றனர். கொலைக் குற்றவாளிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

Mayawati orders release of 4000 prisoners
Hindustan Times, India

ச: ஆஸ்திரேலியாவில் இரயில்- ட்ரக் மோதல்: 11 மரணம்

ஒரு சாலை-இரயில் சந்திப்பில் பயணிகள் இரயிலொன்றும் ட்ரக்கொன்றும் மோதிக்கொண்டதில் பதினோருபேர்வரை மரணித்திருக்கலாம் என்றும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் பி டிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. இதுதவிர 13 பேரைக் காணவில்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.

மேல் விவரங்களுக்கு ...The Hindu News Update Service

ச:இந்திய அரிசியையும் நிலக்கடலையையும் உருசியா தரத்திற்காக தடைசெய்தது

பொருட்களின் தரம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி உருசியா இந்தியாவிலிருந்து அரிசி, நிலைக்கடலை,எள் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்திய அரசும் உருசியாவின் இந்தத் தடையை விமர்சித்துள்ளது.


The Hindu News Update Service

ச: வான்வெளியில் வேடிக்கை: எட்டு கிரகங்களின் அணிவகுப்பு

இந்த மாதம் விண்ணை அண்ணாந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கொண்டாட்டம். அடுத்த பத்து நாட்களுக்கு ஐந்து கிரகங்களை வெறும் கண்ணாலேயே காணமுடியும், மற்றும் மூன்று கிரகங்களை தொலைநோக்கிமூலம் காணவியலும். ஜூன் 2இலிருந்து வெள்ளிகிரகத்தை சூரிய மறைந்த உடனே மேற்கு வானில் காணலாம். சாதரணமாக வெள்ளி கதிரவனுக்கு மிக அருகில் இருப்பதால் அதைக் காண்பது கடினம். ஆனால் இந்தமுறை சூரியனைவிட்டு மிகவும் விலகி உள்ளதால் நன்கு காணமுடியும். அதே நாட்களில் 7.30லிருந்து 8.30 வரை புதனும் சனியும் சற்று தள்ளி வடமேற்கில் தெரியும். 8.30க்குப் பிறகு வியாழனும் புளுடோவும் தெரியும். வியாழனை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும், ஆனால் புளூடோவைக் காண தொலைநோக்கி வேண்டும்.

Celestial wonder for the next 10 days- Hindustan Times

சென்னையில் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கேரள அரசு.

சென்னை கிரீம்ஸ் சாலையில் கேரள அரசு, நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகே கேரள அரசுக்குச் சொந்தமாக 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறை இந்த ஹோட்டலைக் கட்டுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதற்காக கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்னைக்கு வந்தார். கேரளா இல்லம் என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல்லை அச்சுதானந்தன் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனும் கலந்து கொண்டார். மலையாளிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு இதற்கிடையே, இங்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கு தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவிலிருந்து சென்னைக்கு வரும் மலையாளிகள் தங்கிச் செல்ல வசதியாகவும், ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான தகவல்களைத் தரும் மையமமாகும் ஒரு வளாகத்தை இங்கு ஏற்படுத்த வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரி வந்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டு ஸ்டார் ஹோட்டலைக் கட்ட முடிவெடுத்தது. இதனால் கடுப்பான மலையாளிகள் கூட்டமைப்பு, சென்னையில் அச்சுதானந்தன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

சோம்நாத் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல்.

சோம்நாத் சாட்டர்ஜி

லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திருப்பினர். இன்று காலை திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ஆர்ஆர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சிம்லாவில் நடந்த சார்க் மாநட்டில் கலந்து கொண்டு டெல்லி திரும்பினர் சாட்டர்ஜி. இட மாற்றத்தலும், தட்ப வெப்ப மாற்றத்தாலும் தான் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட்.

டிக்கெட் வாங்க ஆளில்லை!!!

சென்னையில் நடைபெறவுள்ள ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை படு மந்தமாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நம் அணி வாங்கிய அடியை வீரர்கள் ஒருவேளை மறந்திருக்கலாம். ஆனால் ரசிகர்கள் ஜென்ம ஜென்மத்துக்கும் மறக்கப் போவதில்லை. இது எல்லா வகையிலும் பிரதிபலித்து வருகிறது. ஆப்பிரிக்க லெவன் அணிக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாளை இந்தியாவில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு 20-20 போட்டி நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ஆனால், டிக்கெட் வாங்கத் தான் ஆள் இல்லை. கூவிக் கூவி டிக்கெட் விற்கும் படுமோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த ரியாக்ஷனை முன்கூட்டியே அறிந்ததாலோ என்னவோ இம்முறை டிக்கெட் விலையை பல மடங்கு குறைத்துத் தான் வைத்துள்ளனர். ஆனாலும் டிக்கெட்களை விற்க முடியவில்லை. முன்பெல்லாம் டிக்கெட் கவுண்டர்களை இரவே ரசிகர்கள் முற்றுகையிட்டு அங்கேயே நின்றபடி தூங்குவார்கள். கவுண்டர் திறந்த ஒரு மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் விஜயராகவன் கூறுகையில், பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியை பார்த்த பின் ரசிகர்களின் ஆர்வம் அதிகாரிக்கும். ஆசிய அணியில் சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடததும் (சச்சின் விளையாடிட்டாலும்...!!!) டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இத் தொடருக்காக கட்டணத்தை குறைத்துள்ளோம். காலரிக்கு ரூ. 300 தான் நிர்ணயித்துள்ளோம். அதே போல பல்வேறு டிக்கெட்டுகளும் குறைக்ப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.5,000 தான் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

எம்.பி. பதவி மறுப்பு: கிருஷ்ணசாமி திடீர் ராஜினாமா மிரட்டல்.

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.6 எம்.பி.க்களில் 2 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 1 இடத்தில் காங்கிரசும், மற்றொரு இடத்துக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.ஞானதேசிகனை நேற்று கட்சி மேலிடம் அறிவித்தது. ஏற்கனவே தற்போது எம்.பி. ஆக உள்ள அவருக்கு அதேபதவியில் நீட்டிப்பு கொடுத்து வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தமிழக காங்கிரஸ் தலை வர் கிருஷ்ணசாமிக்கு அதிர்ச் சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.மேல்-சபை எம்.பி. பதவியை எப்படியும் பெற்று விடவேண்டும் என்பதில் கிருஷ்ணசாமி மிகவும் தீவிரமாக இருந்தார். தமிழககாங்கிரஸ் தலைவர் என்ற அடிப்படையில் மட்டு மின்றி வன்னிய சமுதா யத்தை சேர்ந்தவருக்கு பிரதி நிதித்துவம் பெறும் வகையில் எம்.பி. பதவிக்கு அவர் குறிவைத்தார். டெல்லியில் மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசிய போதும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

மேலும் விபரங்களுக்கு.... மாலைமலர்

ச: கோவாவில் காங். கூட்டணி வெற்றி

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 19ஐ வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. எதிர்கட்சியான பிஜேபி 14 இடங்கள் பெற்றுள்ளது. கோவா உள்ளூர் கட்சிகள் ஏழு இடங்களைப் பெற்றுள்ளன.

NDTV.com: Congress alliance gets majority in Goa

இடைதேர்தலில் காங் வெற்றி.

கர்நாடக மாநிலம் உல்லால் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் யு.டி.காதர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் சந்திரசேகர் உசிலை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆளும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட அபூபக்கர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பாஜக-தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தல் பிரஸ்டிஜ் இஷ்யூவாக எடுத்துக் கொண்டு முதல்வர் குமாரசாமியும் அவரது தந்தை கெளடாவும் இத் தொகுதியில் இரவு பகலாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் இந்தத் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அக் கட்சியை முஸ்லீம்கள் புறக்கணித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

ச: சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ஜோர்டான் வேலை

சுந்தரம் பைனானஸ் நிறுவனத்தின் தவல்நுட்ப பிரிவிற்கு ஜோர்டானில் பிசினஸ் சாஃப்ட் என்ற நிறுவனத்துடன் நிவதி(ERP ) மென்பொருள் தீர்வுகளை வழங்க பணிஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த இணைப்பு ஜோர்டானில் வங்கி மற்றும் தயாரிப்புத் துறைகளில் இருக்கும் வாய்ப்புக்களை கைப்பற்றுவதில் முனைப்பாக இருக்கும்.

மேலும்..IT arm of Sundaram Finance targets Jordan market

Pfizer நிறுவனத்தின் மீது நைஜீரிய அரசு வழக்கு

pfizer நிறுவனத்தின் அனுமதி பெறாத மருந்து பரிசோதனைகள், சுமார் இருநூறு நைஜீரிய குழந்தைகளின் உயிர், உடல்நல, மனநல பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளன. இது குறித்து ஏழு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு நைஜிரிய அரசாங்கம் பிஃபைசர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

போன மாதம் இதே காரணங்களுக்காக, நைஜிரியாவின் மிகப் பெரிய மாநிலமான கானோ(Kano)அரசாங்கமும், pfizer நிறுவனத்தின் மீது இரண்டே முக்கால் பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜிரியாவில் காலரா, அம்மை, போன்ற தொற்றுநோய்கள் பரவியபோது, pfizer நிறுவனமும் உலக சுகாதார நிறுவனமும் சேர்ந்து தன்னார்வத்துடன் இந்த நாட்டுக்கு வந்திருந்து மருந்துகள் விநியோகித்து உதவினர். இந்தச் சமயத்தில் pfizer அனுமதியின்றி பயன்படுத்திய ட்ரோவன் ப்ளோக்ஸின் என்ற மருந்தே சுமார் இருநூறு குழந்தைகளுக்கு meningitis என்ற நோய் தொற்றக் காரணமாகிவிட்டது என்பதே நைஜிரிய அரசாங்கத்தின் வாதம்.

இந்த வழக்கு இந்த மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. pfizer நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.


Nigeria sues Pfizer over 'killer drugs'

கோவா : வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

கோவாவில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.மொத்தம் 40 தொகுதிகளில் சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.இந்தத் தொகுதிகளில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பனாஜி மற்றும் மர்கோவாவில் அடங்கிய 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், தேர்தல் முடிவுகள் அநேகமாக 11 மணிக்குத் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையில் புதுசு - 'ஜெய்ஹிந்த்' டி.வி

ஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஆகஸ்ட் 17ல் மலையாளத்தில் காங்கிரஸ் ஆதரவு செய்தித் தொ.கா ஒன்றை காங்கிரஸ் தலைவி சோனியா தொடங்கி வைக்கவுள்ளார்.
இது 24மணி நேரமும் செயற்பட்டு வரும் என்று தெரிகிறது.

'சற்றுமுன்'னுக்காக வாசகன்

இராஜஸ்தானில் கலவரம் முடிவுக்கு வந்தது!

குர்ஜார் இன மக்களின் 'பழங்குடி' நிலையை பரிவுடன் ஆராய்வதாக அரசு வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஒருவார காலமாக, 26 உயிர்களைப் பலிவாங்கிய கலவரம் முடிவுக்கு வந்தது.

குர்ஜார் மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது..

வழக்கம்போல், நடந்த சம்பவங்களுக்கும், உயிர்ப்பலிகளுக்கும் வருந்துவதாக கூட்டறிக்கை விடப்பட்டுள்ளது.

TOI

ஜெ. நீதிமன்ற அவமதிப்பு :: கருணாநிதி கருத்து!

அதிமுக தலைமைக் கழகம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களையும், விளக்கத்தையும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்புக் குழுவிடம் தரலாம்.

அந்தக் குழுதான் இறுதி முடிவினை எடுக்கும். இதில் அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ, ஜெயலலிதாவின் அறிக்கை வரும் வரை தெரியாது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. இந்த நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், கட்டாயம் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடையாது.

எனவே ஜெயலலிதாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி

மாநிலங்களவை தேர்தல்: காங்.வேட்பாளர் யார்?

ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 15ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், இளவரசன் ஆகியோரும், திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜாவும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டியினரும் சீட்டை வாங்க கடுமையாக முயன்று வந்தனர்.

இந்த நிலையில் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவரும், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளவருமான பி.எஸ்.ஞானதேசிகனுக்கு சீட் கிடைத்துள்ளது. அவரது பெயரை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மூப்பனார் காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் ஞானதேசிகன். கடந்த முறை வாசன் தலைவராக இருந்தபோது ஞானதேசிகனுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் சீட் பெற்று விட்டார் ஞானதேசிகன்.

அ.தி.மு.க. கட்டிடத்தை இடிக்க நோட்டீசு: அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை - கருணாநிதி விளக்கம்

முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வருமாறு:-

கேள்வி:-முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இந்நாள் முதல் அமைச்சரான உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறாரா?

பதில்:- ஓ! பத்திரிகை அறிக்கை மூலமாக அந்தப் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒரு சில பத்திரிகைகள் நாகரீகம் கருதி அந்தப் பகுதியை வெளியிட விரும்பவில்லை. இருந்தாலும் அவர் குறிப்பிட்ட சில பகுதிகளை இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக நான் கூறுகின்றேன்

"கருணாநிதி நயவஞ்சக மனிதர்'', "இதிகாசங்களில் வரும் கொடூர பாத்திரங்களாகிய துரியோதனன், துச்சாதனன், சகுனி, கம்சன் முதல் இருபதாம் நூற்றாண்டு காலத்து கொடூர ஆட்சியாளர்களாகிய ஜார் மன்னர், ஹிட்லர், முசோலினி, இடி அமீன் ஆகியோர் வரை உள்ள அனைவரின் கொடூரத் தன்மையை ஒருங்கே கொண்ட ஒரு மனிதர் கருணாநிதி'' - இதுதான் ஜெயலலிதா எனக்குத் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்து.

அவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ்ச் சமுதாயம் உணர்ந்து கொள்ள இந்த ஒரு அறிக்கை போதுமல்லவா? "வாழ்க வசவாளர்கள்'' என்று அண்ணா சொன்னதுதான் இந்த அறிக்கையைப் படித்தவுடன் என் ஞாபகத்திற்கு வருகிறது.

கே:- சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ், எம்.ஜி.ஆர். கட்டிய கட்டிடத்தை இடிப்பதற்காக தரப்பட்டுள்ளது என்பது உண்மைதானா?

ப:- அந்தக் கட்டிடம் எம்.ஜி.ஆர். கட்டியதுதானா என்பது பற்றி இன்றைய ஒரு காலை நாளேடே அந்தக் கட்டிடத்தைப் பற்றிய விவரத்தை எழுதியுள்ளதே! "1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த போது கட்டப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது.

அதே இடத்தில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டன. இது தவிர பத்திரிகையாளர்களுக்கு ஜெயலலிதா பேட்டி கொடுப்பதற்கான அறை போன்றவை, நவீன வசதிகளுடன் சமீபத்தில் கட்டப்பட்டது'' என்று அந்தக் கட்டிடம் பற்றி எழுதியிருப்பதிலிருந்தே, எம்.ஜி.ஆர். வாங்கிய கட்டிடத்தை முதன் முதலாக இடித்து, மாற்றிக் கட்டியது அம்மையார்தான் என்பதும், தற்போது மக்களையும், கட்சித் தொண்டர்களையும் ஏமாற்றுவதற்காகத்தான் எம்.ஜி.ஆர். கட்டிய மாளிகையை இடிக்க நோட்டீஸ் என்று பம்மாத்து செய்கிறார் ஜெயலலிதா என் பதும் தெளிவாகத் தெரியும்.

கே:- ஜெயலலிதா கூறுகின்ற கட்டிடம், உண்மையிலேயே விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்பட்டுள்ளதா?

ப:- சென்னையிலே யார் வீடு கட்டுவதாக இருந்தாலும் அனுமதியின்றி கட்டக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதுவும் ஒரு கட்சியின் தலைவருக்கு, முதல்- அமைச்சராகவே இருந்தவருக்கு அது தெரியாதா? அந்தக் கட்டிடம் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டது என்றால், அதை எடுத்து செய்தியாளர்கள் முன்னிலையில் இதோ இருக்கிறது அனுமதிக் கடிதம், அனுமதி பெற்றுத்தான் கட்டியிருக்கிறோம் என்று விளக்கியிருக்கலாம் அல்லவா?

அவர்களே அனுமதி பெறாமலும், பெருமளவிற்கு விதிகளை மீறி கட்டியதாலும்தான், 2000 ஆம் ஆண்டில், வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் தேவையான விவரங்களை கொடுக்காமல், விண்ணப்பத்தை மாத்திரம் தாக்கல் செய்தார்கள். அப்போதே அந்த விண்ணப்பம் போதுமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்பதால் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தாரே, அப்போதே அந்த அனுமதி பெறாத கட்டிடடத்திற்கான அனுமதியை முறைப்படி பெற்றிருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் சும்மாயிருந்து விட்டு, உச்சநீதி மன்றம் இதற்காகவே கண்காணிப்புக் குழு ஒன்றை நீதி மன்ற சார்பில் அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகு, அந்த கண்காணிப்புக் குழுவின் அறிவுரைகள் படி ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை வைத்துக் கொண்டு, முண்டா தட்டுவது எந்த வகையில் நியாயம்ப அவர் முண்டா தட்ட வேண்டியது, நீதி மன்றத்தை எதிர்த்துத் தானே தவிர, இதற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத தமிழக அரசை எதிர்த்து அல்ல.

கே:- சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பிய நோட்டீஸ் முடிந்த முடிவானதா?

ப:- நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களிடம் ஆவணங்களும், தகுந்த விளக்கமும் இருந்தால், கண்காணிப்புக் குழுவிடம் அவற்றை விளக்கமாகத் தரலாம். நீதி மன்றம் நியமித்த அந்தக் கண்காணிப்புக் குழுதான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். இதிலே அரசுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. தற்போது ஜெயலலிதா கொடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற நடவடிக்கையை அவமதிக்கும் செயலாகும்.

கே:- அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வரப்பெற்ற நோட்டீஸ் சம்மந்தப்பட்ட கோப்பில் முதல் அமைச்சரோ, அந்தத் துறையின் அமைச்சரோ கையெழுத்திட்டுள்ளார்களா? ஏனென்றால் நீங்களே அந்த நோட்டீசை அனுப்பியது போல ஜெயலலிதா அறிக்கையில் சாடியிருக்கிறாரே?

ப:- அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் எனக்கோ, துறையின் அமைச்சருக்கோ அவரது அறிக்கை வெளியிலே வரும் வரை தெரியாது. நீதி மன்றத் தீர்ப் பின் அடிப்படையில், கண் காணிப்பு குழுவின் முடி வின்படி அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. அரசுக்கு உயர்நீதி மன்றக் கண்காணிப்பு குழு சார்பில் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இதில் கிடையாது.

கே:- பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடுவது பற்றி ஜெயலலிதா ஏன் இந்த அளவிற்கு வயிறு எரிகிறார்?

ப:- ஏதோ ஒரு தனிப்பட்ட நபர், காசு வாங்கிக் கொண்டு, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது "தங்கக்தாரகை'' என்ற விருது வழங்குவதாகக் கூறிக்கொண்டு, அதனை ஏதோ ஐ.நா. அமைப்பே தேர்ந்தெடுத்ததாகச் சொல்லிக் கொண்டு, கட்சி ஏட்டில் அந்த விழாவிற்காக ஐம்பது பக்கங்களுக்கு மேல் விளம்பரம் கொடுத்தார்கள். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து பெருவிழா எடுத்தார்கள். அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த அம்மையாருக்கு இப்போது வயிறு எரியாமல் எப்படி இருக்கும்?

கே:- கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி?

ப:- நேற்று கொஞ்சம் "அதிகமாகி'' விட்டது போலும்! ஆம்; கோபம்!.

கொடநாடு எஸ்டேட் ஜெ. உடையது: இந்தப் பாய்ச்சலுக்கு என்ன காரணம். கொடநாட்டில் ரூ.50 கோடி செலவில் மாளிகையை ஜெயலலிதா கட்டி இருக்கிறார். கேட்டால் அது என்னுடயைது அல்ல என்கிறார். அதைத் தொட்டால் தொடாதே என்கிறார். மலைப்பகுதியான கொடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டி இருக்கிறார் என்று அப்பகுதியின் ஒன்றிய பெருந்தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

பங்களாவுக்குள் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளையும் அனுமதிக்கவில்லை. மலைப்பகுதியில் பங்களா கட்டியதை கண்டிக்க வேண்டுமா? இல்லையா?

திமுகவை பூண்டோடு ஒழிப்பேன் என்ற ஜெயலலிதாவின் கோபத்தில் இருந்து, கொடநாட்டில் இருப்பது அவரது வீடுதான் என எனக்குத் தெரிகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திமுக நோட்டீஸ் அனுப்பவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.எம்.டி.ஏ. விடுத்த நோட்டீஸ். இது, நீதிமன்றத்துக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள பிரச்னை என்றார் கருணாநிதி.

மாலைமலர்
தினமணி
சற்றுமுன்

-o❢o-

b r e a k i n g   n e w s...