.

Tuesday, June 5, 2007

சென்னையில் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கேரள அரசு.

சென்னை கிரீம்ஸ் சாலையில் கேரள அரசு, நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகே கேரள அரசுக்குச் சொந்தமாக 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறை இந்த ஹோட்டலைக் கட்டுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதற்காக கேரள முதல்வர் அச்சுதானந்தன் சென்னைக்கு வந்தார். கேரளா இல்லம் என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கான அடிக்கல்லை அச்சுதானந்தன் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனும் கலந்து கொண்டார். மலையாளிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு இதற்கிடையே, இங்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கு தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவிலிருந்து சென்னைக்கு வரும் மலையாளிகள் தங்கிச் செல்ல வசதியாகவும், ஆயுர்வேத சிகிச்சை தொடர்பான தகவல்களைத் தரும் மையமமாகும் ஒரு வளாகத்தை இங்கு ஏற்படுத்த வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரி வந்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டு ஸ்டார் ஹோட்டலைக் கட்ட முடிவெடுத்தது. இதனால் கடுப்பான மலையாளிகள் கூட்டமைப்பு, சென்னையில் அச்சுதானந்தன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...