.

Friday, July 13, 2007

இந்தியாவில் கருக்கலைப்பைக் கடுமையாக்கும் பிரேரணை

இந்தியாவில் எந்தவொரு கருவுற்ற பெண்ணும், அவர் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்பும் பட்சத்தில், அரசாங்கத்திடம் பதிவு செய்து கருக்கலைப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசாங்க அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் விவகாரம், மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற இந்தியாவில், கருவில் இருப்பது பெண் என்று அறியும் பட்சத்தில் அதனை கருக்கலைப்புச் செய்வதை இது மேலும் சிரமமாக்கும் என்று, இந்தியாவின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறுகிறார்.

பிறப்பதற்கு முன்னதாகவே சிசுவின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்கான சோதனை மற்றும் பால் தெரிவிற்காக கருக்கலைப்புச் செய்வது ஆகியன இந்தியாவில் சட்டவிரோதமானவையாகும்.

ஆனால் கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்துகொண்டு அதனைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது.

- BBC Tamil

BBC NEWS | South Asia | 'Indian register' for pregnancies: "An Indian minister has proposed that all pregnant women register with the government and seek its permission if they wish to undergo an abortion."

India to register pregnancies to fight feticide | Lifestyle | Reuters: "'We cannot give elementary health services in a satisfactory way to most of our citizens, and to talk about registering pregnancies is ridiculous'"

பாகிஸ்தானிய அமைதிப்படையினர் காங்கோவில் தங்கம் கடத்தியமை குறித்த ஆதாரம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில், சில பாகிஸ்தானிய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், ஒரு நபர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்குப் பதிலாக காங்கோலிய கிளர்ச்சிக்காரர்களுக்கு, ஆயுத விநியோகம் செய்வதுடன் தொடர்புடைய துப்பாக்கிகளின் கடத்தல்களிலும், குறித்த பாகிஸ்தான் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக, கடந்த மே மாதத்தில் நடந்த பிபிசியின் புலன்விசாரணை ஒன்றிலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆதாரம் எதுவும் தமது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

இந்த அறிக்கை தொடர்பில் பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாப்புப் பணிகளின் தலைவரான, ஜீன் மரியே கொகென்னோ தெரிவித்துள்ளார்.

- BBC Tamil

BBC NEWS | South Asia | Peacekeeper 'smuggled Congo gold': "A United Nations inquiry has confirmed that a Pakistani peacekeeper in the Democratic Republic of Congo was involved in smuggling gold."
Associated Press of Pakistan - Pakistani peacekeepers not involved in weapons trade in DRC: Munir Akram

ஹரியானா: கலப்பு திருமணத்துக்கு மரணதண்டனை.

ஹரியானா மாநிலம் நுகோ கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் வசித்த ரிம்பி என்ற உயர் சாதிப் பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலை வளர்த்து வந்தனர். இருவரது காதலை அறிந்ததும் கிராமத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு ஓட்டம் பிடித்தது.அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில நாட்கள் கழித்து பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக சொந்த ஊர் திரும்பினார்கள்.காதல் ஜோடி வந்ததை அறிந்ததும் கிராமமக்கள் பொங்கியெழுந்தனர். கிராமப் பஞ்சாயத்து அவசரமாக கூட்டப்பட்டது.

சில மணி நேர காரசார வாக்குவாதத்திற்கு பின் நாட்டாமை தீர்ப்பு கூறினர். அவர் கூறும்போது, "ஊரின் கட்டுப்பாட்டை மீறி கலப்பு மணம் செய்து கொண்ட இரு வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்'' என்றார். இதை கேட்டதும் புதுமணத்தம்பதி அதிர்ச்சியில் உறைந்து
போனார்கள்.அன்று நள்ளிரவே இருவரும் டெல்லிக்கு தப்பிச்சென்று அங்குள்ள ஆஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இருவரின் உயிருக்கும் நுகோ கிராம மக்களால் எந்நேரமும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கலப்பு மண ஜோடிக்கு மரண தண்டனை விதித்த நாட்டாமை மற்றும் கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மாலைமலர்

கி.பி.2025ல் இந்திய மக்கள்தொகை 150 கோடி

வரும் 2025ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 150 கோடியை எட்டும் என்று ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

கோல்கத்தாவில், நேற்று முன் தினம், 'பேரழிவு பாதிப்பை சந்திக்க, சமூக அடிப்படையில் தயாராக இருத்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், அமெரிக்க தூதரக அதிகாரி ஹென்றி ஜார்டைன் பங்கேற்றார்.

ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகை, வரும் 2025ம் ஆண்டில் 150 கோடியாகவும், வரும் 2060ம் ஆண்டில் 170 கோடியாகவும் இருக்கும். அதனால், மக்கள் வசிப்பதற்கு இடநெருக்கடி அதிகமாக இருக்கும். கோல்கட்டாவில் ஏற்கனவே, மக்கள் தொகை அடர்த்தி, ஒரு ச.கி.மீ.,க்கு 24 ஆயிரத்து 760 ஆக இருக்கிறது. அதனால், இந்திய நகரங்களில் எந்த பேரழிவு நிகழ்ந்தாலும், அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் நான்கு உள்ளன. கடந்த 1991ல், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட 23 நகரங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை, பத்தாண்டுகளுக்கு பிறகு, இப்போது 35ஆக அதிகரித்துள்ளது.

என்று ஹென்றி ஜார்டைன் அக்கருத்தரங்கில் கருத்து தெரிவித்தார்.

கர்நாடகா: இலவசமாக கொசுவலை.

கர்நாடக மாநிலத்தில் மலேரிய நோய் பரவிவருவதை எதிர்கொள்ளும் விதமாக மக்களுக்கு மருந்துகள் கலக்கப்பட்ட கொசுவலைகளை கிராமங்கள் தோறும் இலவசமாக அரசே வழங்கவிருக்கிறது.

இத்தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் அஷோக் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தினமலர்

குஜராத்தில் நிலநடுக்கம்

இன்று குஜராத்தின் கட்ச் பகுதியில் 1149 மணி யளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிலையம் தெரிவித்தது. கட்சில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தெரியவில்லை.

The Hindu News Update Service

கோவா விமானநிலையத்தில் தீ விபத்து

இன்று காலை கோவா விமானநிலையத்தில் உள்ள கோ ஏர் விமான நிறுவன அலுவலகத்தில் எழுந்த தீ விபத்தில் அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காலை 8.30க்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டறிந்து கோவா மாநில தீ மற்றும் அவசரகால துறை, இந்திய கடற்படை மற்றும் மர்மகோவா துறைமுக நிர்வாகத்தினரின் தீயணைப்பு வண்டிகள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. தீயினால் உயிர்சேதம் எதுவும் அறியப்பட வில்லை.

The Hindu News Update Service

தமிழ்நாடு: நெடுஞ்சாலை விபத்தில் நால்வர் பலி, இருவர் காயம்

நாமக்கல் அருகே இரு லாரிகள் ஒன்றுக்கொன்று நேராக மோதிக் கொண்டதில் தீ பிடித்து நாங்கு பேர் உடல் கருகி செத்தனர்; இருவர் பலத்த காயம் அடைந்தனர். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை அருகேயுள்ள பாலத்தில்
மைசூர் சாம்ராஜ்நகரிலிருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்றும் மணல் லாரி ஒன்றும் மோதிக் கொண்டதில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகளுக்கு இரண்டு மணி நேரம் பிடித்தது.
The Hindu News Update Service

பீகாரில் கல்லறையில் பள்ளிக்கூடம் - இறந்தவர்கள் நிம்மதி இழப்பு

பாட்னா, ஜூலை 13-

பீகார் மாநிலம் கோஹரி என்ற கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. 200-க்கும் அதிகமானவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கட்டிடத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்படாததால், இங்குள்ள கல்லறை வளாகத்தில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கள் கனவில் ஆவிகளும் பிசாசுகளும் வந்து பயமுறுத்துவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். ஸ்கூலுக்கு லேட்டாக வந்தால், ரத்த வாந்தி எடுப்பாய் என்று சில ஆவிகள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். பீதியடைந்த மாணவர்கள் பலருக்கு காய்ச்சல் வந்திருப்பது பெற்றோரை கவலை அடையச் செய்திருக்கிறது.

வேறு பள்ளியில் சேர்வதானால், 4 கி.மீ. செல்ல வேண்டும். அது சிரமம். எனவே, கல்லறை வளாகத்தில் இருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், கல்லறை மீது உட்கார்ந்துதான் எங்கள் பிள்ளைகள் மதிய உணவு சாப்பிட்டு வந்தனர். இப்போது மேலும் பலர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் பயப்படுகின்றனர். இரவில் திடீரென்று விழித்து அழுகின்றனர். எங்களுக்கே பயமாக இருக்கிறது என்றனர்.

மாணவர்கள் போடும் சத்தத்தால், கல்லறையில் இருப்பவர்கள் இறந்த பிறகும் நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர். பள்ளியை மாற்றுவதே எல்லாருக்கும் நல்லது என்று மதத் தலைவர்கள் கூறியுள்ளனர். விரைவில் இடம் மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்

நன்றி: மாலை முரசு

இனி ஜெட் ஏர்வேஸ் யு.எஸ் செல்ல தடையில்லை

ஜெட் ஏர்வேஸிற்கோ அதன் தலைவர் நரேஷ் கோயலுக்கோ எந்தவித தீவிரவாத மற்றும் ரௌடிகளுடனும் தொடர்பு் இல்லை என்று அரசு யு எஸ்சிற்கு தெரிவிக்கும் கடிதத்தை இன்று அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கியது. இது விதயமாக அமெரிக்க அரசு எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்றும் இந்திய புலானாய்வுதுறையின் எந்த அங்கமும் இவர்கள் மீது எந்த வழக்கையும் பதியவில்லை எனவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

Clean chit to Goyal; Jet to fly to the US

அசோமில் வெள்ளம்:120 கிராமங்கள் நீரில் மூழ்கின

அசோமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் நதிகளின் கரையோரங்களில் இருந்த 40,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். கௌஹாட்டியிலிருந்து 500 கி.மீ தூரத்திலுள்ள தேமாஜி மாவட்டத்தில் 120 கிராமங்கள் குமோடியா நதியின் கரையுடைப்பினால் மூழ்கியுள்ளன என அரசு செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இது பற்றி..Assam floods displace 40,000, over 120 villages washed away-India-The Times of India

இந்திய உணவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கொலை: மகன் அடையாளம்

வியாழனன்று ULFA தீவிரவாதிகளுக்கும் அசோம் காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொலையுண்ட, பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ்இணவுக் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) நிர்வாக இயக்குனர் பி.சி இராமின் உடலை அவரது மகன் பிரவீன் கௌதம் இன்று அடையாளம் கண்டார். தனது மாமாவுடன் தங்கள் வசிப்பிடமான காசியாபாத்திலிருந்து கௌஹாட்டி வந்தவர் இம்முறை எந்த ஐயமுமின்றி தனது தந்தையின் உடலே எனக் கூறினார். இதன் முன்னர் ஜூன்30 அன்று இதேபோல மற்றொரு உடலை அடையாளம் கண்டபின் உர்ருக்குச் சென்று ஈமக்கடன்களை ஆற்றியபின் ராம் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு தான் ULFA பிடியில் நலமாக இருப்பதாகக் கூறி பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி..Khabrein.info

ஹனீஃப் காவல்நீட்டிப்பு: ஆஸி. அரசு கைவிட்டது

பிரிட்டனில் நடந்த கார் குண்டுகளுக்காக குற்றம் எதுவும் சாட்டப்படாமலே 11 நாட்கள் காவலர் பாதுகாப்பில் இருந்த இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் காவலை மேலும் நீட்டிக்க நீதிமன்றத்தில் கொடுத்த மனுவை ஆஸி. காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. இனி சட்டப்படியான 24 மணிநேர விசாரணையில் மீதமுள்ள 12 மணிநேர விசரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுவார். இந்த 12 மணிநேர விசாரணை ஒருசேர தொடர்ந்து இருக்குமா அல்லது இடைவெளிகள் விட்டு இருக்குமா என காவல்துறை தெளிவாக்கவில்லை.

Extension bid on doctor dropped | UK | Reuters

திருச்சியில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்.

திருச்சி அருகே நேற்று போலீசார் நடத்திய சோதனையில், மூட்டை, மூட்டையாக வெடிகுண்டு புதையல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சியை அடுத்த நெடுமலை என்னுமிடத்தில் உரிமம் இன்றி ஏராளமான வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீசார், சோமரசம்பேட்டை போலீசுடன் இணைந்து நெடுமலை பகுதியில் தீவிர சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள குடிசை வீட்டில் மூட்டை, மூட்டையாக வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மூட்டைகளை அவிழ்த்து பார்த்ததில் 984 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 570 சாதாரண டெட்டனேட்டர், 318 ஜெலட்டின் குச்சிகள், 120 கிலோ வெடி உப்பு மற்றும் 400 மீட்டர் ஒயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் கல் உடைக்க பதுக்கி வைத்திருந்த புங்கனூரைச் சேர்ந்த ஜேசுராஜை(45), சோமரசம்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
.

பிலிப்பைன்சில் நில நடுக்கம்.

பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் வணிகவளாகங்கள் லேசாக குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அவசரம், அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. பிலிப்பைன்சில் கடந்த 1990ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோதுமை இறக்குமதியில் ரூ.1200 கோடி ஊழல்: பாஜக குற்றச்சாட்டு

ஐம்பது லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதில் ரூ.1200 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. இதற்குப் பொறுப்பேற்று வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் பதவி விலகவேண்டும் எனவும் பாஜக கோரியுள்ளது.

ஒரு டன் கோதுமைக்கு 262 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.10,500) கோரியிருந்த டெண்டரை விலை அதிகம் என்று கூறி மே 2007-ல் தள்ளுபடி செய்தது மத்திய அரசு. அதே 1 டன் கோதுமைக்கு 320 டாலர்கள் (சுமார் ரூ.12,800) முதல் 360 டாலர்கள் (சுமார் ரூ.14,500) கோரியுள்ள 3 நிறுவனங்களின் புதிய டெண்டர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வியப்பிலும் வியப்புக்குரியது. அதாவது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது டன்னுக்கு 100 டாலர்கள் அதிக விலை தரமுன்வந்துள்ளது.

இந்த 3 நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்கில்' என்ற நிறுவனமும் அடங்கும். இந்த நிறுவனம் இந்திய விவசாயிகளிடம் ரூ.900-க்கு கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை ரூ.1300 விலைக்கு அரசுக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனம் கொள்ளை லாபம் அடைய வாய்ப்புண்டு என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

இந்திய விவசாயிகளுக்கு ரூ.850-க்கு மேல் விலை தர விருப்பமில்லாத மத்திய அரசு, கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1300 விலை தருவதைப் பற்றி கவலைப்படவில்லை.

இந்தியாவில் கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள கார்கில் நிறுவனத்திடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக, புதிய டெண்டர் அனுமதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

டன்னுக்கு 230 டாலர்கள் விலையில் கடந்த ஆண்டுதான் 50 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது மத்திய அரசு எனவும் பாஜக கூறியுள்ளது.

தினமணி

The Hindu : National : Wheat import scandalous: BJP
BJP smells a scam in wheat import contracts :: Economic Times
Govt to import 5.11 lakh tonne wheat at higher cost

விசாகப்பட்டினத்தில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சின்னட்டபள்ளி கிராமத்தில் உள்ள தூர்தர்சனுக்கு சொந்தமான கோபுரத்தை நேற்று இரவு நக்சல் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Zee News - Centre ascertaining facts on Naxal attack: Minister
IBNLive.com > Naxals blow up Doordarshan office in Andhra Pradesh: "They also blew up an ex MLA's house in the city and damaged the Roads and Building department building in Chintappali. PTI reports Maoists were reportedly protesting against the proposed bauxite mining project."

-o❢o-

b r e a k i n g   n e w s...