வரும் 2025ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 150 கோடியை எட்டும் என்று ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
கோல்கத்தாவில், நேற்று முன் தினம், 'பேரழிவு பாதிப்பை சந்திக்க, சமூக அடிப்படையில் தயாராக இருத்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், அமெரிக்க தூதரக அதிகாரி ஹென்றி ஜார்டைன் பங்கேற்றார்.
ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, இந்திய மக்கள் தொகை, வரும் 2025ம் ஆண்டில் 150 கோடியாகவும், வரும் 2060ம் ஆண்டில் 170 கோடியாகவும் இருக்கும். அதனால், மக்கள் வசிப்பதற்கு இடநெருக்கடி அதிகமாக இருக்கும். கோல்கட்டாவில் ஏற்கனவே, மக்கள் தொகை அடர்த்தி, ஒரு ச.கி.மீ.,க்கு 24 ஆயிரத்து 760 ஆக இருக்கிறது. அதனால், இந்திய நகரங்களில் எந்த பேரழிவு நிகழ்ந்தாலும், அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் நான்கு உள்ளன. கடந்த 1991ல், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட 23 நகரங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை, பத்தாண்டுகளுக்கு பிறகு, இப்போது 35ஆக அதிகரித்துள்ளது.
என்று ஹென்றி ஜார்டைன் அக்கருத்தரங்கில் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment