ஐம்பது லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதில் ரூ.1200 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. இதற்குப் பொறுப்பேற்று வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் பதவி விலகவேண்டும் எனவும் பாஜக கோரியுள்ளது.
ஒரு டன் கோதுமைக்கு 262 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.10,500) கோரியிருந்த டெண்டரை விலை அதிகம் என்று கூறி மே 2007-ல் தள்ளுபடி செய்தது மத்திய அரசு. அதே 1 டன் கோதுமைக்கு 320 டாலர்கள் (சுமார் ரூ.12,800) முதல் 360 டாலர்கள் (சுமார் ரூ.14,500) கோரியுள்ள 3 நிறுவனங்களின் புதிய டெண்டர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வியப்பிலும் வியப்புக்குரியது. அதாவது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது டன்னுக்கு 100 டாலர்கள் அதிக விலை தரமுன்வந்துள்ளது.
இந்த 3 நிறுவனங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கார்கில்' என்ற நிறுவனமும் அடங்கும். இந்த நிறுவனம் இந்திய விவசாயிகளிடம் ரூ.900-க்கு கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை ரூ.1300 விலைக்கு அரசுக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனம் கொள்ளை லாபம் அடைய வாய்ப்புண்டு என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
இந்திய விவசாயிகளுக்கு ரூ.850-க்கு மேல் விலை தர விருப்பமில்லாத மத்திய அரசு, கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1300 விலை தருவதைப் பற்றி கவலைப்படவில்லை.
இந்தியாவில் கோதுமை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள கார்கில் நிறுவனத்திடமிருந்து கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக, புதிய டெண்டர் அனுமதியில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
டன்னுக்கு 230 டாலர்கள் விலையில் கடந்த ஆண்டுதான் 50 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது மத்திய அரசு எனவும் பாஜக கூறியுள்ளது.
தினமணி
The Hindu : National : Wheat import scandalous: BJP
BJP smells a scam in wheat import contracts :: Economic Times
Govt to import 5.11 lakh tonne wheat at higher cost
Friday, July 13, 2007
கோதுமை இறக்குமதியில் ரூ.1200 கோடி ஊழல்: பாஜக குற்றச்சாட்டு
Posted by Boston Bala at 9:09 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment