.

Friday, July 13, 2007

இந்தியாவில் கருக்கலைப்பைக் கடுமையாக்கும் பிரேரணை

இந்தியாவில் எந்தவொரு கருவுற்ற பெண்ணும், அவர் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்பும் பட்சத்தில், அரசாங்கத்திடம் பதிவு செய்து கருக்கலைப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசாங்க அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கே முன்னுரிமை வழங்கப்படும் விவகாரம், மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்ற இந்தியாவில், கருவில் இருப்பது பெண் என்று அறியும் பட்சத்தில் அதனை கருக்கலைப்புச் செய்வதை இது மேலும் சிரமமாக்கும் என்று, இந்தியாவின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறுகிறார்.

பிறப்பதற்கு முன்னதாகவே சிசுவின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்கான சோதனை மற்றும் பால் தெரிவிற்காக கருக்கலைப்புச் செய்வது ஆகியன இந்தியாவில் சட்டவிரோதமானவையாகும்.

ஆனால் கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்துகொண்டு அதனைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது.

- BBC Tamil

BBC NEWS | South Asia | 'Indian register' for pregnancies: "An Indian minister has proposed that all pregnant women register with the government and seek its permission if they wish to undergo an abortion."

India to register pregnancies to fight feticide | Lifestyle | Reuters: "'We cannot give elementary health services in a satisfactory way to most of our citizens, and to talk about registering pregnancies is ridiculous'"

1 comment:

Boston Bala said...

'கருத்சிதைவுப் பதிவை கட்டாயமாக்குவதில் நடைமுறைச் சிக்கல்': அன்புமணி

கருவுற்றல், கருச்சிதைவை கட்டயமாகப் பதிவு செய்யும் நடைமுறையில் பிரச்னை உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் கருவுற்றலைப் பதிவு செய்வதற்கான நடைமுறை ஏற்கெனவே துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கருவுற்றலை கட்டாயமாகப் பதிவு செய்ய சட்டம் கொண்டுவரலாம் என்று மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கான மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரியின் யோசனைக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்தார்.

கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிய வந்து அதை சிதைக்கு முற்படுவோர் குறித்த தகவலை, இலவச தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கலாம் என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலவச அழைப்புக்கான எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...