.

Saturday, May 12, 2007

ச:கிரிக்கெட்:இந்தியா ஒருநாள் தொடரை வென்றது

இந்தியா 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று ஆட்டதொடரை கைப்பற்றியுள்ளது. 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேசம் கொடுக்கப்பட்ட 49 ஓவர்களில் 238/9 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அந்த அணியின் அதிக ஓட்டங்களை எடுத்த பந்தாட்ட வீரர் பாஷர் 43 ஓட்டங்களே எடுத்தார். இந்திய அணியின் புதுமுகமாக இந்த ஆட்டத்தில் சேர்ந்த சாவ்லா தனது சுழல்பந்து வீச்சால் மூன்று விக்கெட்களை 37 ஓட்டங்கள் கொடுத்து வீழ்த்தியதும் துவக்க ஆட்டக்காரர் கம்பீரின் சதமும் இந்திய வெற்றிக்கு பின்கலமாக அமைந்தன.

ச:விசாகப்பட்டிணம்: தவறான ஓடுபாதையில் தரையிறங்கியது விமானம்

பாரமௌன்ட் ஏர்வேஸின் விமானம் ஒன்று விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் இன்னும் பணிக்குவராத ஓடுதளத்தில் 70 பயணிகளுடன் தரையிறங்கியதில் விமான ஓட்டியால் கட்டுப்படுத்தமுடியாமல் ஓடுபாதையை தாண்டி புதர்களில் முட்டி நின்றது. அனைத்துப் பயணிகளும் நலமென்று ATC பட்டாபி கூறினார். இதனால் இந்தியன், ஏர்சஹாரா மற்றும் ஏர் டெக்கான் விமானசேவைகளும் பாதிக்கப் பட்டன.

The Hindu News Update Service

ச: உ.பி முதல்வராக மாயவதி தேர்ந்தெடுக்கப் பட்டார்

இன்று நடந்த தேர்ந்தெடுக்கப் பட்ட பிஎஸ்பி கட்சி எம் எல் ஏக்கள் கூட்டத்தில் மாயாவதி அக்கட்சியின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது பெயரை இந்திரஜித் சரோஜ் முன்மொழிய கட்சி மாநிலத்தலைவர் லால்ஜி வர்மா வழிமொழிந்தார்.

அவர் மாநில ஆளுநரை இன்று சந்தித்து நாளை பதவி ஏற்பார் என நம்பப்படுகிறது.


The Hindu News Update Service

சற்றுமுன்: சென்னையில் 300 மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது


மதுரையில் அரசியல் ரவுடிகளால்.. படுகொலை செய்யப்பட்ட தினகரன் பத்திரிக்கை ஊழியர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யக்கூறி.. தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தியது. மைலாப்பூர், கச்சேரி சாலை முழுவதும் காவல் துறையினரின் தலலகளே அதிகம் காணப்பட்டன. அந்த வழி போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சென்னை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வாசலில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள். கோஷம் போட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை கைது செய்து நான்கிற்கும் மேற்பட்ட வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
மந்தைவெளியில் இருக்கும் ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ச: கராச்சி வன்முறையில் 14 பேர் மரணம்

பணிநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சௌத்திரியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ராப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் 14 பேர் வரை மரணித்திருக்கலாம் என பிடிஐ செய்தியொன்று கூறுகிறது. தலைமை நீதிபதி மக்கள் பேரணியை அடைந்தபோது இருதரப்பினரும் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டதில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது பாகிஸ்தானின் அரசியல் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகிறது. ்

Deccan Herald - 14 killed in clashes in Karachi

ச: மம்முட்டிக்கு எம்.பி. பதவி

நடிகர் மம்முட்டி இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது. ஆனால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.வி. சேனல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் மம்முட்டி அதன் சேர்மனாகவும் இருந்து வருகிறார்.

அதே சமயம் மம்முட்டியின் சகோதரர் முஸ்லிம் லீக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். இவர் தேர்தல்களில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேல்சபை எம்.பி. பதவி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு மம்முட்டி பேசிய போது குஜராத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருந்திருந்தால் அங்கு இனக்கலவரம் நடந்திருக்காது என பேசினார்.

மம்முட்டியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் மம்முட்டியின் உருவ பொம்மையை எரித்தனர்.

இப்பிரச்சினை இத்துடன் முடியாமல் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருக்களில் ஊர்வலமாக வந்து அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய ஜனதா தொண்டர்கள் நடிகர் மம்முட்டிக்கு எதிராக செயல்பட்டு வரும் சூழ்நிலை யில் வருகிற ஜுலை மாதம் நடைபெற உள்ள மேல்சபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மம்முட்டியை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலைமலர்

ச: டென்னிஸ்:ரோம் மாஸ்டர்ஸ்: பயஸ்-தாம் ஜோடி அரையிறுதியில்

ரோம்மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவதாக தரவரிசையில் உள்ள இந்திய-செக்கோஸ்லோவாகியா ஜோடியான பெயஸ் தாம் ஜோடி 6-4,6-3 என்ற கணக்கில் உரோமானிய அண்ட்ரே பாவல், ஜெர்மானிய அலெக்ஸாண்டர் வாஸ்கே ஜோடியை வென்று பொட்டியின் அரை இறுதிக்கு சென்றனர். இந்த சுற்றுவரை இந்த ஜோடி விளையாடாமலே போட்டியாளர்களின் விட்டுக் கொடுத்தலினால் வென்று வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விவரங்களுக்கு..The Hindu News Update Service

ச: கிரிக்கெட்: பங்களாதேசத்திற்கு வெற்றி இலக்கு 285

மழையினால் அரைமணிநேரம் தாமதமாக துவங்கிய இன்றைய ஆட்டத்தில் டாஸ் கெலித்து முதலில் ஆடத்துவங்கிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 49 ஓவர்களில் 284/8 ஓட்டங்கள் எடுத்தனர். 113 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டத்திற்கு நல்ல அடிக்கலிட்டார். அணித்தலைவர் ராகுல் திராவிட் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இழந்தார். பங்களாதேசத்தின் ரஃபீக் மூன்று விக்கெட்களை 59 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தினார். ரசல் இரண்டு விக்கெட்களையும் ரசாக் இரண்டு விக்கெட்களையும் மொர்டாசா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ச: ஒரிசாவில் போஸ்கோ நிறுவனபிணைக்கைதிகளை விடுவித்தனர்

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தின் அலுமினியம் தொழிற்சாலை அமைக்க நில கையகப்படுத்த சென்ற நிறுவன ஊழியர்களை நேற்று பிணையாக பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் இன்று அந்நிறுவனத்தின் தலைவரின் வாக்கை அடுத்து விடுவித்தனர். முன்னதாக மூவரில் பெண் ஊழியரை நேற்றே விடுதலை செய்து விட்டனர். போஸ்கோ தலைவர் கிம் 'இனி நாங்கள் அந்தக் கிராமத்திற்கு வரமாட்டோம'் என உறுதிமொழி கொடுத்ததாக போராட்ட சமிதியின் தலைவர் அபய் சாஹு கூறினார்.POSCO officials released by agitators

ச: திமுகவில் மோதல் வலுக்கிறது:

பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் திமுக வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் கருணாநிதியின் பேரனான மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் பங்கேற்கவில்லை.

மாலையில் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்திருந்த தயாநிதி மாறன் சென்னை தீவுத் திடலில் நடந்த பொன் விழா பொதுக்கூட்டத்துக்கும் வரவில்லை.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியைத் திமுகவினர் சிலர் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி குறித்து அடுத்த வாரம் முதல்வர் கருணாநிதி முடிவு செய்வார் என்று திமுக தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.

சென்னை தீவுத் திடலில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை சன் டிவிக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ராஜ் டிவிக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

போப்பாண்டவர் தற்போதைய கலாச்சாரத்தின் மீது கடும் விமர்சனம்

போப்பாண்டவர் பெனெடிக்ட் ப்ரேஸில் நாட்டில் உள்ள சாவோ பாலோ என்ற நகரத்திற்கு வந்துள்ளார். அந்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவரை 'புனிதராக' அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியில், தற்போதுள்ள கலாச்சாரத்தினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருமணத்தையும் அதன் புனித்ததையும் கிண்டல் செய்யும் அனைத்து விஷயங்களையும் எதிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/18611180/

வரலாறு காணாத உயர்வு: கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.47

நாமக்கல், மே 12: கோழிப் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.47 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு கிலோ ரூ.46 என்பதே உட்சபட்ச விலையாக இருந்தது. இந் நிலையில், பல்லடத்தில் வெள்ளிக்கிழமை (மே 11) கூடிய பிராய்லர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலையை கிலோ ரூ.47 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

மீன்வரத்து குறைந்துள்ளதால் கேரளத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. இனப் பெருக்கத்துக்காக கடலில் மீன்பிடிக்க தடை விதித்திருப்பதாலும் கறிக்கோழி விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இது பண்ணையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முட்டை விலை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையும் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1.90 காசுகளாக உள்ளது. இது கோழிப் பண்ணைத் தொழிலுக்கே மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

விமான நிலையத்தில் விதிகளை மீறிய அழகிரி

சென்னை, மே 12: மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் வழியாகச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. சென்னை தீவுத்திடலில் முதல்வர் பொன் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து சென்னைக்கு பாரமவுன்ட் விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்தார். அப்போது, பாரமவுன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்று மு.க.அழகிரியை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர், அவர் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் எண் 1-ல் வெளியேறினார்.

பிரதமர் வருகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி, மு.க.அழகிரி அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது, இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இத்துடன் மு.க. அழகிரி, வி.ஐ.பி. கேட் வழியாக அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, "மு.க.அழகிரியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரமவுன்ட் நிறுவனத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) அனுமதி பெற்று, வி.ஐ.பி. கேட் வழியாக அவரை அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.

Dinamani

மலேசியாவிடம் இந்தியா தோல்வி (2-1)

அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவிடம் தோல்வியுற்று, இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

ஆட்டத்தின் 9-வது நிமிஷத்தில் மலேசிய அணி முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிஷத்தில் சிவேந்திர சிங் அடித்த கோலால் இந்தியா 1-1 என சமநிலை பெற்றது. ஆனால், அதுவே இந்தியாவுக்கு கடைசிக் கோலாக அமைந்தது. பிற்பாதியில் மலேசிய அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

தோல்வியுற்ற இந்திய அணி, 3-ம் இடத்துக்காக கொரியாவுடன் விளையாடுகிறது. கடந்த முறை போட்டியில் இந்தியா 3-ம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கொரியா தோல்வி: முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கொரியாவை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. தொடர்ச்சியாக 4-வது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ச:ஓரினச் சேர்க்கை திரைப்படம் தயாரித்த மாணவர்கள் - கேரளாவில் சர்ச்சை

கேரளா சங்கனசெரியில் கத்தோலிக்க திருச்சபை நடத்திவரும் புனித வளனார் ஊடகத்துறை கல்லூரியில் ஓரினச்சேர்க்கைபற்றிய திரைப்படம் எடுத்த மாணவர்கள் ஐந்துபேர் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

'சீக்ரட் மைண்ட்ஸ்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்கான படைப்பு என அதை இயக்கிய மாணவர் ஜோ பேபி தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிர்வாகம் இந்தப் படம் எல்லைமீறியதாக உள்ளதாகவும், மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களை தவறாகப் பயன்படுத்தி இதில் நிர்வாணமாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் படத்தில் பாதி நிர்வாணமே உள்ளதாகவும், பாடத்திட்டத்துக்குட்பட்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Students expelled for making film on homosexuality

தொடர்புள்ள இன்னொரு செய்தி

ச: அப்துல் கலாமுக்கு அமோக ஆதரவு

புதுடெல்லி, மே 11-

அப்துல் கலாமே மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்திய சர்வேயில் 72 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்கலாம் வரும் ஜூலை 17-ம் தேதியுடன் முடிகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. 750 எம்.பி.க்களும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேரும் ஓட்டு போட்டு நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நாட்டின் முக்கிய கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தினமும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த வாரத்தில் ஒரு சர்வே நடத்தியது. கலாமே மீண்டும் ஜனாதிபதியாவதை விரும்புகிறீர்களா? களத்தில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படும் மற்ற பிரபலங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதுதான் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதில் கலாமுக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அவரை நெருங்கக்கூட முடியவில்லை. மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தலா 7 சதவீத ஆதரவுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, பொருளாதார மேதை அமர்தியா சென்னுக்கு ஆதரவாக தலா 5 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. துணை ஜனாதிபதி ஷெகாவத்துக்கு 4 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அரசியல்வாதி அல்லாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பவர்கள் 74 சதவீதம் பேர்.
இன்டர்நெட் வழியாக டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் கலாம் 53%, நாராயணமூர்த்தி 24%, ஷெகாவத் 14%, அமர்தியா சென், ஜோதிபாசு, சட்டர்ஜி தலா 3% ஓட்டு பெற்றுள்ளனர்.

இன்டர்நெட் பயன்படுத்தும் படித்த, மேல்தட்டு மக்களைவிட நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ஆதரவு கலாமுக்கு அதிகம் இருப்பதும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...