.

Thursday, May 10, 2007

ச:கடவுள்களின் ஆபாசப் படம் வரைந்த மாணவர் கைது

வதோதராவில் எம் எஸ் பல்கலைக்கழகத்தில் நுட்பக் கலை பயின்றுவரும் மாணவர் சந்திரமோகன் இந்து மற்றும் கிறீத்துவக் கடவுள்களின் படங்களை ஆபாசமாக வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜகவினர் பல்கலைக்கழக வளாக்கத்தில் புகுந்து காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த படங்களை சேதப்படுத்தினர். மேலும் போலீசில் வழக்கு பதிவு செய்தனர்.

சர்ச்சைக்குரிய படங்கள் பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்களின் பார்வைக்கே வைக்கப்பட்டிருந்தன என்றும் பல்கலையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Student held for painting gods in 'obscene postures'Times of India, India
Art college exhibition attacked by VHPNDTV.com, India
Hindu brigade damage paintings in VadodaraNDTV.com, India
Artist arrested for 'obscene' paintingsTimes Now.tv, India

''This was an internal assessment of the students. The teachers evaluate their works and are not open to the general public. We will inquire how the outsiders came in,'' said Shivji Panikar, Dean, Faculty of Fine Arts.

''They are playing with the sentiments of the Hindu community by showing such obscene paintings of our Gods and Goddesses,'' said Neeraj Jain, Leader, BJP.

1 comment:

Boston Bala said...

ஆபாச ஓவிய சர்ச்சை: பல்கலை. மாணவருக்கு ஜாமீன்

வடோதரா, மே 15: குஜராத் மாநிலத்தின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பிரிவு முதுகலை வகுப்பு மாணவர் சந்திரமோகன் ரூ.5,000 ரொக்க ஜாமீன் செலுத்தி திங்கள் கிழமை விடுதலை பெற்றார்.

இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கடந்த வாரம் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் சில, ஹிந்துக் கடவுளர்களை ஆபாசமான நிலையில் சித்திரித்திருந்தன. இதை கேள்விப்பட்ட பாரதீய ஜனதா, விசுவ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் கண்காட்சி அரங்குக்கு வந்து அந்த ஓவியங்களை அடித்து நொறுக்கி, கலைக்கூடத்தைச் சேதப்படுத்தினர்.

கிறிஸ்தவர்களும் இதே போல தங்களுடைய மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் ஓவியங்கள் இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த ஓவியக் கண்காட்சியை மூடுமாறு அரசு கூறியது. அதை கல்லூரி முதல்வர் சிவாஜி பணிக்கர் ஏற்க மறுத்ததால் அவரைப் பணி இடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. கல்லூரியின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகக் கூறி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டித்தனர். சர்ச்சைக்குரிய ஓவியங்களை வரைந்த சந்திரமோகன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...