.

Thursday, May 10, 2007

தில்லியின் பால்தாக்கரே ?

பீஹாரிலிருந்தும் உத்தரப்பிரதேசத்திலிருந்தும் புலம் பெயர்ந்தவர்களாலேயே பிரச்சினைகள் உருவாவதாக தில்லி முதல்வர் ஷீலா தீக்சித் கூறியிருப்பது காங்கிரஸின் முதும் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நேற்று தில்லியின் மக்கட்பெருக்கத்திற்கான காரணமாக இவ்வாறு அவர் பேசியது நாடாளுமன்றத்திலும்் எதிரொலித்தது.

இது பற்றி.....Sheila Dikshit hauled up by Congress- Hindustan Times

1 comment:

Boston Bala said...

பிகார், உத்தரப்பிரதேச மக்கள் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் தில்லி முதல்வர்


புதுதில்லி, மே 11: நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் தாய் வீடாக தில்லி விளங்குகிறது, யாருடைய மனமாவது புண்படுமாறு பேசியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஷீலா தீட்சித்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதால், தலைநகர் தில்லியில் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றார்.

அவரது இப் பேச்சு வியாழக்கிழமை மக்களவையில் அமளியை ஏற்படுத்தியது.

ஷீலா தீட்சித்தின் கருத்துக்கு பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...