.

Friday, June 22, 2007

விரைவில் 30 மத்திய பல்கலைக்கழகங்கள்.

உலகளாவிய தரத்தில் நாட்டில் 30 மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவ உள்ளதாக பிரதம அமைச்சர் மன்மோஹன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை பல்கலைக்கழக விழாவொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். "மனித வள மேம்பாட்டுத்துறையும், பல்கலைக்கழக ஆணையமும் மத்திய திட்ட ஆணையமும் இணைந்து இரண்டு மூன்று மாதங்களில் இதனைச் செயற்படுத்தும் என்றார் அவர்.

நாட்டின் 340 மாவட்டங்களில் உயர்கல்வி வாய்ப்புகள் மிகவும் குறைந்து காணப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

மேலும்.....

மூன்று வயது குழந்தை மீது கிரிமினல் குற்றம்.

பீஹாரின் கத்திஹார் மாவட்டத்தில் இரு இனத்தவரிடையே மத ஊர்வலம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூன்றே வயதான ராஜ் குமார் ஜா என்கிற குழந்தை மீது கலகம் விளைவித்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் அக்குழந்தை தவழும் நிலையில் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிஹரி காவல் அதிகாரி "பெயர் குழப்பத்தால் இது நிகழ்ந்திருக்கும்" என்று சொல்லியுள்ளார்.
மேலதிகாரிகள் விரிவான அறிக்கையை கோரியுள்ளனர்.

முன்னர் ஒருமுறை ஆறே வயதுடைய சிறுவன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பீகாரில் நடந்துள்ளது.

மேலும் படிக்க....

குடியரசுத்தலைவர்:அப்துல்கலாம் திட்டவட்டமாக மறுப்பு

இரண்டாம் முறையாக குடியரசுத்தலைவராக வருவது பற்றிய யூகங்களை இன்று அப்துல்கலாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் சர்ச்சைகளில் குடியரசுத்தலைவர் மாளிகை ஈடுபடுவதை விரும்பவில்லை என்பது காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

படிக்க..

இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் தீம் பூங்காவில் மாணவி ஒருவர் ராட்சத ராட்டினத்திலிருந்து கீழே விழுந்தது தொடர்பான வழக்கில் அந்த பொழுதுபோக்குப் பூங்காவின் உரிமையாளர் ராஜன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அருகே முட்டுக்காட்டில் எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவுக்கு சமீபத்தில் வந்த அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் ராட்சத ராட்டினத்தில் ஏறி சுற்றினர்.

அப்போது இருக்கை பெல்ட் சரியாக இல்லாத காரணத்தால் ஒரு மாணவி 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகள் முறிந்து போய் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சமீபத்தில் லட்சுமி என்ற தோட்டத் தொழிலாளி, ராட்டினத்தின் இறக்கை மோதி பரிதாபமாக இறந்தார். இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவவோ, அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ பூங்கா ஊழியர்கள் முன்வரவில்லை.

மாணவி கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக இரு ஊழியர்களும், பூங்கா மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்காவுக்கு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

தற்போது பூங்கா உரிமையாளர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.எம். பூங்காவில் பாதுகாப்பு அம்சங்கள் படு மோசமாக இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்

ச: கேரளாவில் பலத்த மழை

இரண்டாவது நாளாக இன்று கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோரப்பிரதேசங்களும் மலைப்பிரதேசங்களும் இந்த மழையால் கடும் சேதம் அடைந்துள்ளன. கடலரிப்பைத் தொடர்ந்து பலர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மலைச்சரிவு ஏற்பட்டது. ்...மேலும்...

ச:மதுரை இடைதேர்தல்: உண்ணாவிரத செய்தியை அமைச்சர் பாலு மறுப்பு

மதுரை இடைதேர்தலை தள்ளிவைத்தால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பார் என்ற செய்தியை (சற்றுமுன்னில்) திமுக மறுத்துள்ளது. மத்திய கப்பல்துறை அமைச்சரும் நாளுமன்ற திமுக தலைவருமான டி ஆர் பாலு நிருபர்களிடம் இது முற்றிலும் ஆதாரமற்றது, உண்மைக்கு புரம்பானது என்று கூறினார். என் தலைவர் அவ்வாறு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனக் கூறினார்.
The Hindu News Update Service

ச:பிரதிபா பாடிலின் சகோதரர் கொலைகாரரா ?

குடியரசுதலைவர் தேர்தலின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி இதழாளர் கூட்டம் ஒன்றில் ரஜனி பாடில் என்ற பெண் தனது கணவரை பிரதீபா பாடிலின் சகோதரர் கொன்றதாக குற்றம் சாட்டினார். மும்பையை சேர்ந்த ரஜனி யுபிஏ வேட்பாளர் தன் கொலைகார சகோதரருக்கு அடைக்கலம் கொடுத்துவந்ததால் தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமும் மனு அளித்திருப்பதாகக் கூறினார்.

ஆளும்கட்சி இதனை தே.ஜ.கூ இனால் 'ஜோடிக்கப்பட்ட' வழக்கு என்று கூறினர். கண்ணியம் குறைந்துவரும் அரசியல், குடியரசுத் தலைவர் தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
DNA - India - Backed by NDA, woman claims Pratibha's brother killed husband - Daily News & Analysis

மதுரை தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் : கருணாநிதி

துரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்தி வைத்தால் தமிழக முதல்வர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார், என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார்.

வன்முறை, விதிமீறல், பணப்பட்டுவாடா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல அதிகாரி நரேஷ் குப்தா, அவரசமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மதுரை நிலவரம் குறித்து அவர் விவரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் டெல்லியில் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

வரும் 26ம் தேதி மதுரை மேற்குத் தொகுதியில் சுமூகமான முறையில் வெளிப்படையான தேர்தல் நடத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது. அப்படி ஒத்திவைத்தால் முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

நன்றி: Yahoo! Tamil

இதன் முன் வந்த செய்தி:
தலைமைத் தேர்தல் ஆணையருடன் இன்று மதுரை நிலவரம் குறித்து குப்தா ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து, மதுரை தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)

ச:பேராசிரியருக்கு துணை குடியரசுத் தலைவர் பதவி ?

தமிழ்நாட்டின் குடிமகனொருவர் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க முடியாது போனாலும் துணை கு.தலைவர் பதவிக்கு முதன்முறையாக ஒரு தமிழன் பதவி ஏற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தமிழருக்கு ஆதரவு தர மறுத்த தமிழககட்சிகள் என்ற கூற்றை எதிர்க்கும் விதமாக முதல்வர் கருணாநிதி மாநில நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக தேர்ந்தெடுக்க ஐக்கிய முன்னேற்ற கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. திக தலைவர் வீரமணிக்கும் பேராசிரியருக்கும் இடையே பின்னவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேல் விவரங்களுக்கு..DMK may bid for Anbazhagan as vice president - Yahoo! India News

ச:தேசியக்கொடியை தவறாக பதிப்பித்ததற்கு கேரள அரசு வருத்தம் தெரிவித்தது

பள்ளி சிறுவர்களுக்கு சுற்றுச்சூழல் விப்புணர்ச்சியை வளர்க்கும் விதமாக கேரள அரசு வினியோகித்த நாட்குறிப்பு புத்தகங்களில் மூவர்ண கொடியாக இல்லாமல் தேசியக் கொடி ஐந்து வர்ணங்களில் வெளியானதற்கு கல்வி அமைச்சர் பேபி வருத்தம் தெரிவித்தார். இது ஆளும் இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி மேலும்..The Hindu News Update Service

ச:குடியரசுதலைவர் தேர்தல்: ஜெயலலிதா தில்லி பயணம்

அ இ அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா குடியரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் முறை பணியாற்ற திரு அப்துல் கலாம் அவர்களை வற்புறுத்த முகாமிட்டுள்ள மற்ற மூன்றாம் அணி தலைவர்களுடன் சேர்ந்துகொள்ள இன்று காலை பத்துமணியளவில் தில்லி பயணமாகிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்துவார்.

The Hindu News Update Service

-o❢o-

b r e a k i n g   n e w s...