.

Monday, June 11, 2007

ஊழல் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை!

உதவித் தொகை வழங்குவதில் மோசடி செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் ரூ. 50 கோடி ஊழல் நடந்தது, 2002ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பங்கு வகித்த, சமூக நலத்துறை வார்டன் மோதி நாயக், சமூக நலத்துறை கணக்குப் பதிவாளர் சங்கர் ராவ் உட்பட நான்கு பேருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 17 பேரில், மற்றவர்க்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இது ஆந்திராவில்!

தினமலர்

இணைய அந்தரங்கத்தை அசட்டை செய்வதில் கூகிள் #1

இருபது புகழ்பெற்ற வலை நிறுவனங்கள், அந்தரங்கங்களைப் எவ்வாறு மும்முரமாக பாதுகாக்கின்றன என்று கடந்த ஆறு மாதமாக ஆராய்ந்ததில் கூகுள் கடைசியாகத் தேறியிருக்கிறது.

1. கூகிள் - மாபெரும் குறைபாடுகளும், அலட்சியமும், பயனர்களுடன் பகை பாராட்டும் தன்மையும் நிறைந்தது
2. யாஹூ - குறிப்பிடத்தக்க ஆபத்துகள் கொண்டது
2. அமெரிக்கா ஆன்லைன் (ஏ.ஓ.எல்.) - குறிப்பிடத்தக்க ஆபத்துகள் கொண்டது
4. ஃபேஸ்புக் - பயனர் தகவல்களை மோசமாகக் கையாள்கிறது
4. ஹை5 - பயனர் தகவல்களை மோசமாகக் கையாள்கிறது

6. மைக்ரோசாஃப்ட் - பயனர் ஒப்பந்தத்தில் பெரும் ஓட்டைகள் நிறைந்திருக்கிறது

7. பிபிசி.காம் - அந்தரங்கங்களை மதித்தாலும் மேம்படுத்த நிறைய இடமுண்டு
7. ஈ-பே - அந்தரங்கங்களை மதித்தாலும் மேம்படுத்த நிறைய இடமுண்டு
7. லாஸ்ட்.எஃப்எம் - அந்தரங்கங்களை மதித்தாலும் மேம்படுத்த நிறைய இடமுண்டு

BBC NEWS | Technology | Google ranked 'worst' on privacy

வலுவடைகிறது தென்மேற்கு பருவக் காற்று!

தென்மேற்கு பருவக்காற்று வலுவடைவதையொட்டி வெயிலின் கொடுமை வட மாநிலங்களில் தணியும் வாய்ப்பிருப்பதாக செய்தி நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெயிற் கொடுமையால் அவதியுறும் வட; மத்திய மாநிலங்களின் மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தி.

இப்பருவக்காற்று வெள்ளியன்று மும்பையை தாக்கக்கூடுமென்றும், இடியுடன் கூடிய சூறாவளிக்காற்று வீசும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியப்பகுதிகளில் இதனால் கதிரவனின் அனல்மூச்சு குறையலாம் என்று வானிலை ஆராய்ச்சிகளை இச்செய்தி மேற்கோள் காட்டுகிறது.

இப்பகுதியில், அரபிக்கடலில் ஏற்கனவே உருவான பெருஞ்சூறாவளி கோனு ஓமானை தாக்கி சேதம் விளைவித்தது நினைவிருக்கலாம்.

வெயில்: பலியானோர் எண்ணிக்கை 102.

வெயிலின் கடுமையால் வட; மத்திய இந்திய மாநிலங்களில் இறந்துள்ளோர் எண்ணிக்கை இதுவரை 102 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 28 உயிர்ப்பலிகள் இம்மாநிலங்களில் சம்பவித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் 62 பேரும், பஞ்சாபில் 16 பேரும், ம.பி -12, இராஜஸ்தான் - 9, டெல்லி -2, ஹரியானாவில் ஒருவரும் என்று இச்செய்தி கூறுகிறது

பெரியார் திரைப்படம்: மாணவருக்கு 50% விலைச்சலுகை!

பள்ளி மாணவர்கள் பெரியார் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்கு 50% சதம் விலைச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலர் குற்றாலலிங்கம் இன்று அறிவித்துள்ளார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, கைம்பெண் மறுமணம் ஆகிய நற்கருத்துக்களை இப்படம் பரப்புவதால் இச்சலுகை என்று அவர் தெரிவித்துள்ளார். "தன்னம்பிக்கை, சுயசிந்தனை ஆகியவற்றை மாணவர் மத்தியில் இப்படம் விதைக்கும்" என்றார் அவர்.

இப்படத்திற்கு தமிழக அரசு 95 இலட்சம் நிதியுதவி செய்திருந்தது நினைவு கூரத்தக்கது.

அமெரிக்கா: ஆறுபேர் சுட்டுக்கொலை!

இருவர் கைக்குழந்தை(இரட்டையர்)கள்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் தென்பகுதியில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதை, அண்டை அயலர்கள் பட்டாசு வெடிகள் என்றே கருதி வாளாவிருந்தனர். ஆனால் அது ஆறு பேர்களை பலி கொண்ட துப்பாக்கியின் உறுமல். அவர்களில் மார்பில் அடிபட்ட 2 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள். மற்றவர்கள் மரித்துவிட்டனர். அதில் 2, 3 மாதங்களே ஆன - இரட்டையர்களான- கைக்குழந்தைகளும் அடக்கம்.

புலனாய்வு நடந்து வருகிறதாம்.

TOI

CNN

உ.பி: 17 பொறியாளர்கள் இடைநிறுத்தம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சர் நசீமுத்தின் சித்தீகி மேற்கொண்ட சோதனையில் தரம் குறைந்த சாதனங்களைப் பயன்படுத்தியதாக 17 பொறியாளர்கள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் செயற்பொறியாளர்கள், எட்டு பேர் துணை பொறியாளர்கள், மற்றவர்கள் இளநிலை பொறியாளர்கள். இவர்கள் அனைவரும் லக்னொ நகர வளர்ச்சிக்குழுமத்தால் (LDA) பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.

மே 13ல் முதல்வராகப் பணியேற்ற சில மணித்துளிகளிலேயே, லக்னோ நகர வளர்ச்சிக்குழுமத்துக்கு முன்னறிவிப்பின்றி சோதனை மேற்கொண்ட உ.பி முதல்வர் மாயாவதி, LDA துணைத்தலைவரையும், தலைமைப்பொறியாளரையும் இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

பி.டி.ஐ

சைனா: வெள்ளம், நிலச்சரிவில் 66 பேர் பலி.

தென்சைனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 66 பேர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. மேலும் பலரை காணவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

சைனாவின் அதிகாரபூர்வ செய்தி ஸ்தாபனத்தார் கூற்றின்படி, 48000க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 94000க்கும் மேல் பாதிப்படைந்துள்ளன, 294,000 ஹெக்டேர் பாசனநிலம் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

பொருளாதார இழப்பு (2.9பில்லியன் யுஆன்,) சுமார் 371 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 591,000 மக்கள் வீடிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சி.என்.என்

தேவாரம், திருவாசகத்துக்கு இடைக்கால தடை!

மயிலாடுதுறை தர்மாவரம் ஆதினத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர், அதில்,

தமிழ் பண்பாட்டு மையத்தின் சத்திவேல்முருகன் உள்பட சிலர் திருமணம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் யாகம் வளர்த்து தேவாரம், திருவாசகம் பாடுகிறார்கள். ஆகம விதிகள் படி கோவில்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும்.

தற்போது பலரும் தேவாரம், திருவாசகத்தை ஆகம விதிகளை கடைபிடிக்காமல் இஷ்டப்படி பாடுகிறார்கள். எனவே இதற்கு கோர்ட்டு தடை விதிக்க வேண்டும். மேலும் தேவாரம் திருவாசகத்தை இஷ்டப்படி பாடியதற்காக ரூ.10 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் திருமணம், கும்பாபிஷேக விழாக்களில் தேவாரம் திருவாசகம் பாட இடைக்கால தடை விதித்தார். மாலைமலர்.

ச:கிரிகின்ஃபோ தளத்தை ESPN வாங்கியது

விளையாட்டுத் துறை ஊடகங்களில் கிரிக்கெட் விளையாட்டினை இணையத்தில் கொணர்வதில் முன்னோடியான கிரிகின்ஃபோ தளத்தை விளையாட்டு தொலைகாட்சிகளில் முன்னணியில் இருக்கும் ESPN நிறுவனம் கையகப் படுத்தியுள்ளது. 1993இல் துவங்கிய இந்தத் தளம் 99இல் சிஃபியால் வாங்கப் பட்டது. பின்னர் 2003இல் விஸ்டன் குழுமம் வாங்கியது. தற்போது நான்காம் முறையாக கை மாறியுள்ளது.

The Hindu News Update Service

ஏழை பொறியியல் மாணவர்களுக்கு முதல்வர் நிதியுதவி.

பொறியியல் கல்லூரிகளில் பயிலுகின்ற ஏழை எளிய மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடர முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதி உதவி வழங்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.

ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் இருந்து தொழில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவ- மாணவியர்க்கு, அவர் களுடைய படிப்பைத் தொடர வும், அவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்தவும், முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி யாக வழங்கிட அனுமதி அளித்துள்ளார்.

2006-2007 ஆம் ஆண்டில் ஒற்றைச் சாளர முறை மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயின்று கொண்டிருக்கும் 142 மாணவ-மாணவியர்க்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப் படுகிறது. உதவித் தொகையினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாணவ-மாணவியர்க்கு வழங்குவார்கள்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுவதாக.....மாலைமலர்

ஜூலை11ல் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கோவையில் இன்று அளித்த பேட்டி:

போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக பல இடங்களில் ஏராளமான ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. சென்னையில் 77.5 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. கோவையில் 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. மற்ற மாவட்டங்களில் சராசரியாக 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

திருத்தப்பணிகள் முடிந்ததும் ஜுலை 11-ந்தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். இங்கு 99.9 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. அங்கு போட்டோ வுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே ஓட்டு போட முன்னுரிமை வழங்கப்படும். அதே நேரத்தில் போட்டோ இன்றி முகவரி மட்டும் இருப் பவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதைபோல ரேசன் கார்டுகள், டிரைவிங் லைசென்சு போன்றவற்றை காட்டி ஓட்டு பதிவு செய்யலாம்.

பங்களாதேஷ்: நிலச்சரிவில் 62 பேர் பலி

பங்களாதேஷின் சிட்டகாங்கில் நிகழ்ந்த நிலச்சரிவில் இதுவரை 62 பேர் வரை பலியாகிவிட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. பலமான பருவமழையால் இந்நிலச்சரிவு சம்பவித்துள்ளது.

மீட்புபணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ச: கேரளாவில் சிக்குன்குன்யா: இராணுவம் விரைகிறது

கேரளத்தில் தீவிரமாகிவரும் விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த இராணுவத்தின் மருதுவப்பிரிவுகளும் உடனடியாக மாநில சுகாதாரத்துறையின் உதவிக்கு விரைந்துள்ளன. மருந்துகளும் பாதுகாப்பு கருவிகளும் மும்பை கிடங்கிலிருந்து விமானம் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.சென்னையிலிருந்தும் செகந்தரபாத்திலிருந்தும் இராணுவ மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
Zee News - Fever outbreak in Kerala, Defence medical teams step in

ஆண்களிடையே அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்!

பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களையே அதிகம் தாக்குகிறது எனினும் ஆண்களிடையேயும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய காரணங்கள், பருமன், குடிப்பழக்கம், மரபணு ஒழுங்கின்மை, கதிரியக்கம் என்பன இந்நோய் பரவும் காரணங்களுள் சில!

வருடம் ஒன்றுக்கு 75,000க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோய்கள் இந்தியாவில் இனங்காணப்படுகின்றன. இவற்றில் ஆண்நோயாளிகள் விகிதம் மிகக்குறைவே எனினும் சமீப காலங்களில் சொல்லத்தக்க அளவுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றன

மேலும் படிக்க...

ச: கிரிக்கெட் பயிற்சியாளராக ஃபோர்ட் மறுப்பு !

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பலத்த போட்டியின் இடையே நியமிக்கப்பட்ட கிரகாம் போர்ட் இன்று தம்மால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ளவியலாது என்று மறுதளித்தார். அவர் கென்ட் கௌன்டியின் கிரிக்கெட் கிளப் நிறுவனராக தொடருவார் என அந்தக் கிளப்பின் வலைத்தளம் கூறுகிறது.

அடுத்த பயிற்சியாளரைத் தேடுவதற்காக புதுதில்லியில் பிசிசிஐ நாளை கூடுகிறது.

NDTV.com: Ford rejects offer to coach India

`தசாவதாரம்' படத்தையும் கலைஞர் டி.வி. வாங்கியது

கலைஞர் டி.வி.' என்ற பெயரில் புதிய சேனல் ஆகஸ்டு 15-ந்தேதி உதயமாகிறது. இந்த சேனலில் ஒளி பரப்ப புதுப்படங்கள் வங்கப்படு கின்றன. ரஜினியின் மெகா பட்ஜெட் படமான சிவாஜி'யை கலைஞர் டி.வி. வாங்கியது. இப்படம் ரிலீசுக்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பப்படும்.சிவாஜியை தொடர்ந்து கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தையும் வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. `சிவாஜி'யை விட 1000 ரூபாய் அதிகமாக தசாவதாரம் விலை போய் இருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது. 747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது. சிவாஜியை தொடர்ந்து தசாவதாரத்தையும் வாங்கியதன் மூலம் இரு மெகா ஸ்டார்களின் படங்கள் கலைஞர் டி.வி. கைவசமாக்கியுள்ளது. போக்கிரி, தர்மபுரி, முனி, கேடி படங்களையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது. கமலின் பழைய படமான ராஜபார்வை இதுவரை டி.வி. சேனலுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. அதையும் கலைஞர் டி.வி. வாங்கி இருக்கிறது.

இந்தியா: ISD தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு!

வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணப்போட்டியில் பி.எஸ்.என்.எல் இன்று மேலும் அதிரடியாக தன் கட்டணத்தை குறைத்து கொண்டுள்ளது. புதிய கட்டணமாக, அமெரிக்கா, கனடாவுக்கான ஒரு நிமிட கட்டண விகிதங்கள் ரூ 1.75 ஆகவும், வளைகுடா நாடுகளுக்கு ரூ 6.75 ஆகவும் இருக்கும். இது தனியார் சேவைகளை விட சற்றே குறைவாகும்.

தனியார் நிறுவனங்கள் குறிப்பாக, ஏர்டெல் இவற்றை ரூ.1.99, ரூ 6.99 என்று நிர்ணயித்திருந்தது குறிக்கத்தக்கது.

மேலும் படிக்க....

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தீர்ப்பு.

மீண்டும்ஒத்திவைப்பு.
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் வருகிற 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமசாமி அறிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் கடந்த 1993ம் ஆண்டு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில், 11 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா உள்பட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் பாட்ஷா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். பழனிபாபா படுகொலை செய்யப்பட்டு விட்டார். முஷடாக் அகமது தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். மற்றவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கை தனி நீதிமன்ற நீதிபதி ராமசாமி விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து ஏப்ரல் 18ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.பின்னர் மே 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 11ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தயாராகவில்லை என்று கூறிய நீதிபதி ராமசாமி ஜூன் 21ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்தார். இந்த வழக்கில் மொத்தம் 431 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதிசாட்சிகள் விசாரணை தொடங்கியது. 1994ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது

ச: தென்னிந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை: ஆந்திரா முதல்வர் அடிக்கல் இட்டார்

ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி நேற்று தனது கடப்பா மாவட்டத்தில் ஜம்மலமடகு என்ற இடத்தில் தென்னிந்தியாவிலேயே தனியார் துறையில் மிகப்பெரிய இரும்பு உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார். 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் ரூ12500 கோடி செலவில் அமையவிருக்கும் இந்த ஆலை ஆண்டிற்கு 4.3மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யும்.

Foundation stone laid for mega steel plant in Andhra

ச: முன்னாள் பஞ்சாப் முதல்வர் பத்திரிகை ஆலோசகர் கைது

முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஊடக தொடர்பாளாராக பணியாற்றிய பாரத் சிங் சாஹல் ஞாயிறன்று கொலை செய்ய முயன்றதிற்கும் பிற குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டார்.

மேல் விவரங்களுக்கு..Amarinder Singh's former media advisor arrested

ச:இராஜஸ்தான் இனக்கலவரங்கள் அரசியலுக்காக தூண்டப்பட்டவை: பைலட்

அரசியல் ஆதாயங்களுக்காக பல்வேறு சாதியினரை ஒருவருகொருவர் சண்டை மூளவைப்பது மிக தீங்கான செயல் என்று தௌசா எம்பி சச்சின் பைலட் கூறியுள்ளார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை பயன்படுத்தி அரசியலாக்குவதும் சாதீய ஆதிக்க மனநிலையும் இப்போது அதிகரித்து வருகிறது. அரசியல் சார்பின்றி இந்த இடஒதுக்கீடுகளை பிரித்தளிப்பது பற்றி விரிவான ஆய்வு செய்யப்படவேண்டும் என அவர் கோரினார். தவிர கடந்த போராட்டங்களை மிகக் கடுமையாக விமரிசித்த உச்சநீதிமன்றத்தை குறிப்பிட்டு அவர் நடந்த சாலையடைப்பு, கடையடைப்பு ஆகியன மக்களின் அடிப்படை எதிர்ப்பு வழிகளே எனக் கூறினார்.

DNA - India - 'Gujjar-Meena conflict was politically motivated' - Daily News & Analysis

ச: தேவதாசி முறை தொடர்கிறது

இந்த பிபிசி நடத்திய புலனாய்வின்படி இந்தியாவில் பெண்கள் மதரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப் படுவது தொடர்வதாக தெரிய வந்துள்ளது. சட்டங்கள் இருந்தும் இந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. மேலும்...

48 புராதன கோயில்களை புனரமைக்க திட்டம்

சென்னை, ஜூன் 10:

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற 48 புராதன திருக்கோயில்களை புனரமைக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு இதற்கான உதவியை மத்திய அரசிடம் நாடியுள்ளது.

நாயன்மார்களால் பாடப்பெற்ற சைவ திருத்தலங்களும், ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருக்கோயில் களும் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன. அவற்றில் 48 புராதன திருக்கோயில் கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.

இந்த திருக்கோயில்களை புனரமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 12வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி கிடைத்துள்ள மானியத் தொகையான 9.87 கோடி ரூபாயை பயன்படுத்த திட்டமிட்டு விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது


மேலும் செய்திக்கு "மாலைச்சுடர்"

'பாய்ஸ்' சித்தார்த் இயக்குனராகிறார்

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சித்தார்த். மலையாளத்தில் ராஜசேனன் இயக்கிய 'அம்மினி நல்லொராள்' என்ற மலையாள படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். படத்தை இயக்கப் போகிறவரும் இவரே.

இவருக்கு ஜோடியாக 'தாமிரபரணி' பானு நடிக்கிறார்.

Yahoo Tamil

வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.

வெள்ள அபாயம் ஆஸ்தராலியாவில்.


இதுவரை 5000 மக்கள் வெள்ளம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். கடந்த 35 வருசங்களில் இதுபோல நடக்கலையாம்.

புயல் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 9.

மேற்கொண்டு தகவல்கள் இங்கே.அண்டைநாடான நியூஸியில் இருந்து
துளசி.

-o❢o-

b r e a k i n g   n e w s...