.

Monday, June 11, 2007

ஜூலை11ல் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கோவையில் இன்று அளித்த பேட்டி:

போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக பல இடங்களில் ஏராளமான ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. சென்னையில் 77.5 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. கோவையில் 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. மற்ற மாவட்டங்களில் சராசரியாக 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

திருத்தப்பணிகள் முடிந்ததும் ஜுலை 11-ந்தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். இங்கு 99.9 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. அங்கு போட்டோ வுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே ஓட்டு போட முன்னுரிமை வழங்கப்படும். அதே நேரத்தில் போட்டோ இன்றி முகவரி மட்டும் இருப் பவர்கள் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதைபோல ரேசன் கார்டுகள், டிரைவிங் லைசென்சு போன்றவற்றை காட்டி ஓட்டு பதிவு செய்யலாம்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...