.

Monday, June 11, 2007

ஏழை பொறியியல் மாணவர்களுக்கு முதல்வர் நிதியுதவி.

பொறியியல் கல்லூரிகளில் பயிலுகின்ற ஏழை எளிய மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடர முதல்- அமைச்சர் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதி உதவி வழங்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.

ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் இருந்து தொழில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவ- மாணவியர்க்கு, அவர் களுடைய படிப்பைத் தொடர வும், அவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்தவும், முதல்-அமைச்சர் கருணாநிதி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி யாக வழங்கிட அனுமதி அளித்துள்ளார்.

2006-2007 ஆம் ஆண்டில் ஒற்றைச் சாளர முறை மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயின்று கொண்டிருக்கும் 142 மாணவ-மாணவியர்க்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப் படுகிறது. உதவித் தொகையினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாணவ-மாணவியர்க்கு வழங்குவார்கள்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுவதாக.....மாலைமலர்

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கல்வி, மருத்துவம் எல்லாம் இலவசமாகத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையும் கூறு போட்டு விற்றுவிட்டு ஊருக்கு ஊர் மூக்குக் கண்ணாடிகள், note புத்தகங்கள், படிப்புதவித் தொகை தந்து நம்மை வள்ளல் போல் காட்டிக் கொள்வது வெட்கக்கேடு

-o❢o-

b r e a k i n g   n e w s...