.

Tuesday, May 8, 2007

காவிரி: கர்நாடகத்துக்கு மாநில அதிமுக ஆதரவு

புதுதில்லி, மே 8: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு அதிமுக ஆதரவளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார் கர்நாடகத்தின் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எஃப்.எஸ். நாரிமன்.

காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, "இது சட்ட ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. அறிவியல் ரீதியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினை. நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் ஏராளமாக உப்பு நீர் உள்ளது. அதை நல்ல நீராக மாற்றுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும். இதற்காக, மத்திய அரசு சிறந்த விஞ்ஞானிகள் குழுவை நியமித்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நாரிமன், "இந்த விஷயத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் மாநிலத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. உதாரணமாகச் சொன்னால், கர்நாடகத்தில் உள்ள அதிமுகவினர் கர்நாடகத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்' என்றார். தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. பராசரனும், "அதுதான் உண்மை நிலை' என்று நாரிமனின் கருத்தை ஆமோதித்தார்.

Dinamani

ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.


1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.

சற்றுமுன் குறித்த விமர்சனங்களை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது பின்னூட்டங்களில் தாருங்கள்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

சரித்திரம் படைத்தது வட அயர்லாந்து

இன்றைய தினம் 'சற்றூமுன்'னிற்கு மட்டுமன்றி வட அயர்லாந்திற்கும் சரித்திரம் படைத்திட்ட நாளாகும். சண்டை போட்டுக்கொண்டு பிரிந்திருந்த பிராட்டஸ்டன்ட்களும் கத்தோலிக்கரும் தங்கள் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து அரசு அமைக்க முன்வந்துள்ளனர். நாற்பது ஆண்டுகாலமாக இருந்துவந்த போராட்டங்களும் வன்முறையும் ஒரு முடிவுக்கு வருகின்றது. பிரித்தானிய பிரதமர் டோனி பிளேயரும் அயர்லாந்து பிரதமர் பெர்டி அஹெர்னும் இந்த சரித்திர சம்பவத்திற்கு சாட்சியாக வட அயர்லாந்து நாடாளுமன்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Historic day for Northern Ireland: World: News: News24

Chronology: The Northern Ireland Conflict - UK

18 பழங்கால பஞ்சலோக சிலைகள் அகழ்ந்தெடுப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொறையாரின் அருகே அருண்டவம்புலம் ( ஆங்கிலத்திலிருந்து மொழிமாற்றத்தில் பிழை இருக்கலாம்) கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டுவதற்காக தோண்டும்போது பல்வேறு கடவுள் வடிவங்களில் பழைமையான பஞ்சலோக சிலைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மேலும்18 ancient 'panchaloha' idols unearthed in TN village- Hindustan Times

சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு

போட்டி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவை பார்க்கவும்


இது சற்றுமுன் தளத்தின் ஆயிரமாவது பதிவு.

சாதனை விவரம் இங்கே...

1. சற்றுமுன் 999

2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

சற்றுமுன்... ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி.

போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:-

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம்/வணிகம்

மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .

செய்திக்கட்டுரைகளின் விபரம்:-

நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையோ தொகுத்து முடிவுகளை எட்டும் கட்டுரைகளை வரையலாம்.

ஒரு தலைப்பின் கீழ் சில செய்திகளைத் தொகுத்து முடிவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, 'பெண்ணியம் ' எனும் தலைப்பின் கீழ் செய்திகள் , புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை வரையலாம். நானோ நுட்பம் (Nanotechnology) குறித்த செய்திக் கட்டுரை எழுதலாம்.

ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.

செய்திகளை நையாண்டி செய்யும் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள் :

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 1500/- மதிப்புள்ள புத்தகங்கள்

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 500/- மதிப்புள்ள புத்தகங்கள்.

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 15 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். அதாவது கீழுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மூன்று சமமான பரிசுகள்

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம் /வணிகம்

வித்தியாசமான கட்டுரைக்கான பரிசுகள்:-

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 500/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு)

சிறப்பு பரிசுகள் :-

போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .

பரிசுகளில் உங்களின் விருப்பம்:-

வெற்றி பெற்றவர் விரும்பினால் பரிசுத் தொகையைத் தான் விரும்பும் ( அல்லது சற்றுமுன் தேர்ந்தெடுக்கும்) ஒரு சமூக சேவைக்கு வெற்றி பெற்றவரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும் .

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு satrumun@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .

அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.

எந்தப் பிரிவின் கீழ் கட்டுரை சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியரே குறிப்பிடவேன்டும். இப்படிக் குறிப்பிடப்படாத கட்டுரைகளுக்கு சற்றுமுன் குழுவே பிரிவைத் தேர்ந்தெடுக்கும் .

பதிவர் அல்லாதவர்களும் முடிந்தவரை தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஒருங்குறியில் எழுத இயலாதவர்கள் மட்டும் பிற எழுத்துருக்களிலும் அனுப்பலாம்.

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 10, 2007

சில விதிமுறைகள் :

போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது சற்றுமுன் குழுவின் முடிவே.


ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது.

மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்

போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை சற்றுமுன் தக்கவைத்துக் கொள்கிறது.





குறிப்பு:
மேலே உள்ள சற்றுமுன் 1000 போட்டிக்கான பேனரில் சுட்டி நேரடியாக இந்த பதிவை அடையலாம்

சற்றுமுன் 999

சற்றுமுன் வலைப்பதிவு செய்தித்தளத்தின் 999 ஆவது பதிவு இது. இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் நாள் சிறில் அலெக்ஸ் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டு 20 உறுப்பினர்களின் கூட்டுப் பதிவாக வளர்ந்துள்ள சற்றுமுன் செய்தித்தளம் துவங்கப் பட்டு 83 ஆவது நாளான இன்று மே 8 அன்று 1000 பதிவுகளை இட்டு சாதனை புரிகிறது. இந்த வலைப்பதிவு கூட்டு முயற்சியில் ஈடுபட்ட 20 உறுப்பினர்களும் சற்றுமுன் செய்தித்தளத்தை இன்று தமிழ் வலைப்திவு தளத்தில் மிகவும் விரும்பப் படும் செய்தித்தளமாக ஆதரவளித்து வரும் வாசக, வலைப்பதிவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆதரவின் மகிழ்ச்சியான நினைவுக்காக சற்றுமுன் 1000 கொண்டாட்டத்தின் மாபெரும் செய்தி விமர்சனப் போட்டியை நடத்துகிறது. போட்டி அறிவிப்பு 1000 ஆவது பதிவில்...

அன்புடன்

சற்றுமுன் குழுவினர்

* சிறில் அலெக்ஸ்
* முத்துகுமரன்
* கோவி.கண்ணன் [GK]
* கவிதா|Kavitha
* மணியன்
* Vicky
* திரு
* அதிரை புதியவன்
* ரவிசங்கர்
* துளசி கோபால்
* ♠ யெஸ்.பாலபாரதி ♠
* Boston Bala
* ஆசிப் மீரான்
* Radha Sriram
* பெருசு
* மணிகண்டன்
* பொன்ஸ்~~Poorna
* ✪சிந்தாநதி
* சிவபாலன்
* சற்றுமுன்...

ச: கொலை வழக்கில் லாலு கட்சி எம்.பி., க்கு ஆயுள் தண்டனை

சிவான் : 1999ம் ஆண்டு சி.பி.ஐ.( எம் எல் ) கட்சி ஆதரவாளர் சோட்டேலால் கும்தா என்பவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லாலு கட்சி எம்.பி., சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தினமலர்

ச: மருத்துவ கவுன்சிலிங் ஜுலை 2

மருத்துவ கவுன்சிலிங் ஜுலை 2-ந்தேதி தொடங்குகிறது: விண்ணப்பங்கள் 28-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது

சென்னை, மே.8-

தமிழ் நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் (சென்னையில் மட்டும் 3 கல்லூரிகள்) உள்ளன. இங்கு மொத்தம் 1,645 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் உள்ளன. இது தவிர, ஈரோடு பெருந்துறையில் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரியில் தனியே 60 இடங்கள் இருக்கினëறன.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்விகளில் சேர நுழைவுத்தேர்வு கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பிளஸ்-2 மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த வருடம் மே 22-ந்தேதி வெளியானது. இந்த வருடம் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் வெளியிட அரசுத்தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணியில் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்கள் எதிர்பார்த்த மருத்துவக்கல்வி கவுன்சிலிங் மற்றும் விண்ணப்பத்திற்கான அனைத்து தகவல்கள் அடங்கிய அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல்மருத்துவம்), ஆகிய படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்பாக முழுவிவர அறிக்கை வெளியிடும் தேதி 27.5.2007. விண்ணப்பங்கள் 28.5.2007 முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற கடைசிநாள் 15.6.2007-ந்தேதி மாலை 5 மணிவரை ஆகும்.

மாணவர்களின் மார்க் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் 22.6.2007. முதல் கட்ட கவுன்சிலிங் தொடக்க நாள் 2.7.2007. முதல் கட்ட கவுன்சிலிங் முடியும் நாள் 8.7.2007. மாணவர்கள் கல்லூரியில் சேரும் நாள் 18.7.2007. வகுப்புகள் தொடங்கும் நாள் 1.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் தொடங்கும் நாள் 25.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் முடியும் நாள் 28.8.2007. 2-ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து மாணவர்கள் கல்லூரியில் சேரும் நாள் 30.8.2007.

அனைத்து மாணவர் சேர்க்கையும் முடிவடையும் நாள் 30.9.2007.

ஒரு காலத்தில் மருத்துவ படிப்பையே மாணவர்கள் மிகவும் விரும்பி படித்தனர். ஆனால் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்தால் போதாது என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் பி.இ. முடித்துவிட்டு கம்ப்ïட்டர் துறையில் பணிபுரியும் என்ஜினீயர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு மாத சம்பளமாக ரூ.1 லட்சத்திற்கும் அதிமாக கிடைக்கிறது. இதனால் பெற்றோர் டாக்டர்களாக இருந்து தனியாக மருத்துவமனை நடத்தி வருபவர்கள் விரும்பி மகன் மற்றும் மகளை படிக்க வைக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்தாவது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க வைக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ படிப்பை விட என்ஜினீயரிங் படிக்கவே விரும்புகிறார்கள்.

கடந்த வருடம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்த 2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேராமல் என்ஜினீயரிங்கில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு குறைந்த இடங்களே இருப்பதாலும், பிளஸ்-2 கணித தேர்வு எளிதாக இருந்ததாலும், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கணிதத்தில் 200-க்கு 200- மதிப்பெண்கள் வாங்க இருப்பதால் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்

ச: வங்கதேசம் - நாடு திரும்பினார் ஷேக் ஹசீனா

தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று நாடு திரும்பினார். அவரது வருகையை ஒட்டி, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது, வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்தது. 15 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த ஹசீனா, அங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென அவர் வங்கதேசம் திரும்புவதற்கான பயணச் சீட்டை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டது. ஹசீனா வங்கதேசம் திரும்பினால், வன்முறைகள் ஏற்படும் என கருதி, இடைக்கால அரசு வற்புறுத்தியதின் பேரிலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கிடையே உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக ஹசீனா வங்கதேசம் திரும்புவதற்கு இடைக்கால அரசு அனுமதி அளித்தது. நேற்று அவர் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து எதிகாட் ஏர்வேஸ் விமானம் மூலம் தாகா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். ஹசீனா நாடு திரும்புவதையொட்டி, நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாகா விமான நிலையத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக லண்டன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசீனா, ""நாட்டில் ஜனநாயகம் மீண்டும் மலர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனது செயல்பாடுகளை முடக்கும் வகையில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு என்னை கைது செய்யலாம். நாடு திரும்புவதற்கு எனக்கு ஆதரவு அளித்த உலகத் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

=தினமலர்

ச: தயாநிதி மாறன் 'பெஸ்ட்', சிதம்பரம் நெக்ஸ்ட்!

மே 07, 2007

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தான் சிறந்தவர் என்று ஏசி நீல்சன் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்கள் மனசு என்ற பெயரில் சன் டிவியுடன் இணைந்து ஏசி நீல்சன் அமைப்பு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படுவர் யார் என்ற கேள்வியை முன் வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.


இதில் தயாநிதி மாறனுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழக அளவில் அவர்தான் சிறந்த அமைச்சர் என்று 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

2வது இடம் ப.சிதம்பரத்திற்குக் கிடைத்துள்ளது. அவருக்கான ஆதரவு 27 சதவீதமாகும்.

டி.ஆர்.பாலுவுக்கு 7 சதவீத ஆதரவும், அன்புமணிக்கு 1 சதவீத ஆதரவும் உள்ளது.

வேறு அமைச்சர்கள் யாரையும் சிறந்த அமைச்சர்களாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தனியாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை.


மேலும் ""தட்ஸ்தமிழ்""

சைனாவில் துப்பியவர்களுக்கு அபராதம்

தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.

China cracks down on spitting, litter in holiday week Reuters AlertNet
Beijing fines spitters for city's image China Daily
China fines citizens for spitting during Labour Day holidaysHindu

தமிழில் நேரடி கிரிக்கெட்- ராஜ் .டி.வி ஒளிபரப்புகிறது

இந்தியா - வங்கதேசத்துக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் ராஜ் டி.வியில் தமிழ் வர்னணையோடு ஒளிபரப்பப்படவுள்ளது என ராஜ் டி.வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர்

ச: "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா?

சென்னை, மே 7:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' படத்தின் பெயர் தமிழ்ப் பெயரா என்று சட்டசபையில் காங் கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சுற்றுலா மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபை யில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பாமக உறுப்பினர் செந்தமிழ்ச் செல்வன், நல்ல தமிழ் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கும், பிற மொழி கலப்பில்லாத வசனங்கள் கொண்ட திரைப்படங்களுக்கும் அரசு கூடுதல் மானியமும், சலுகைகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய இ.எஸ்.எஸ். ராமன் (காங்.), தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங் களுக்கு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால் இப்போது பெயர் வைப்பதில் நல்ல மாற்றம் வந்துள் ளது. ஆனால், தமிழ் பெயர்கள் குறித்து முடிவு எடுக்க ஏதேனும் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள் ளதா? விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா? என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடம் இருந்து பதில் பெற உறுப்பினர் ராமன் விரும்பினார். ஆனால் பரிதி இளம்வழுதி உடனடியாக பதிலளிக் காமல் அப்புறம் சொல்கிறேன் என்று நழுவினார்.

- மாலைச்சுடர்

ச: மாநில அரசுகள் எதிர்ப்பு: `செக்ஸ்' கல்வி பாடத்தில் திருத்தம்

புதுடெல்லி, மே. 7-

`எய்ட்ஸ்' நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் `செக்ஸ்' கல்வியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பரீட்சார்த்தமாக மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் இவை இதை பாடத்திட்டமாக கொண்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வியை எப்படி போதிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாடத்திட்டம் மிக மோசமாக இருப்பதாகவும், இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், சதீஸ்கார் ஆகிய மாநில அரசுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் செக்ஸ் கல்விக்கு தடை விதித்து உள்ளன.

எனவே செக்ஸ் பாடத்திட்டம் தொடர்பாக மறு ஆய்வு செய்யதயாராக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு டைரக்டர் நிïலரல் சுஜாதா ராவ் தெரிவித்து உள்ளார்.

சில மாநில அரசுகள் இதற்கு தடை விதித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். பாடத்திட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

- மாலை மலர்

ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் தகவல்

சென்னையில் கவிஞர் பா.விஜய்யின் 10 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: "கடந்த ஆட்சியில் அரசு வேலையில் ஆள் சேர்க்கத் தடைச் சட்டம் கொண்டு வந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இந்த இமயம் வளரக் கூடாது என்பதற்காக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 11 மாதங்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 649 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இனி மேலும் தொடர்ந்து அரசு வேலைகள் வழங்கப்படும்."

இந்நிகழ்ச்சியில் கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், மு. மேத்தா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர்கள் விவேக், பாக்யராஜ், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ச:டெக்சாசில் 2 இந்திய மாணவர்கள் மர்ம மரணம்

கூஸ்டன், டெக்சாசில் இரண்டு இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி வளாகத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறந்து கிடந்ததனர்.இருவருக்கும் வயது 23.

இவர்கள் கொல்லப்பட்டார்களா என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் பெறப்படவில்லை என்றும், இருவரும் முந்தைய இரவில் மது அருந்திக்கொண்டிருந்ததைக் கண்ட சாட்சிகள் உள்ளதென்றும் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போன மாதம் அதே வளாகத்தில் இரு வெளி நாட்டு மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் அதற்கும் இதற்கும் தொடர்பிருக்குமா எனத் தெரியவில்லை எனவும் போலீஸ் தெரிவித்தனர்.

Indian students found dead

பீடியில் மண்டை ஓடு சின்னம்: உத்தரவை கைவிட பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, மே 7: பீடியின் மீது மண்டை ஓடு சின்னத்தை கட்டாயம் அச்சிட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய அறிவிப்பால் 15 லட்சம் பீடித் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம்.

உருக்கு ஏற்றுமதியைத் தடுக்க வெனிசுலா அதிபர் முடிவு

காராகாஸ், மே 7: வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய உருக்கு நிறுவனம் "சிடோர்", ஏற்றுமதிக்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு முதலில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால், நிறுவனத்தை அரசே ஒரு விலை நிர்ணயித்து எடுத்துக் கொண்டுவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

"சிடோர்" நிறுவனம் உருக்கு உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை வகித்தாலும் அது தன்னுடைய தயாரிப்பில் பெரும் பகுதியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறது. "சிடோர்" நிறுவனத்தின் தாய் நிறுவனம் லக்செம்பர்க்கில் உள்ள "டெர்னியம் சா" என்ற மிகப்பெரிய தொழில் குழுமம் ஆகும். அது ஆர்ஜென்டீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

"வெனிசுலாவிலிருந்து கனிமத்தை எடுத்து, வெனிசுலா நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு உருக்கைத் தயாரித்து, வெனிசுலா நாட்டு அரசு தரும் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, கிடங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தால் வெனிசுலா அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?" என்று கேட்டார் சாவேஸ்.

Dinamani

ச: காஷ்மீர் தால் ஏரி படம்


காஷ்மீரில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிய நீரூற்றுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்ணுக்கும் மனதுக்குள் குளிர்ச்சியாய் காட்சி தருகிறது தால் ஏரி. அடுத்த படம்: அதில் படகுச் சவாரி சென்று இயற்கை அழகை ரிலாக்ஸாக ரசிக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

ச: முதல்வரின் சட்டமன்ற பொன்விழாவுக்கு அரசு பணம் செலவிடப்படவில்லை

சென்னை, மே 7-
முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழாவுக்கு அரசு சார்பில் பணம் செலவிடப்படவில்லை. அதனால் மக்களை குழப்ப வேண்டாம் என்று தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.


முதல்வர் கருணாநிதியின் இந்த விழாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும் செய்யப்படவில்லை. பொதுக்கூட்ட விழா அனைத்தும் தி.மு.கவாலும், அதன் தோழமைக் கட்சிகளாலும்தான் செய்யப்படுகின்றது. சட்டமன்றத்தில் நடத்தப்படும் விழாவுக்கும் அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான செலவும், செய்யப்படாமல் நாங்களே பார்த்துக் கொள்வோம். எனவே அரசு பணம் செலவிடுவதாக நினைத்துக் கொண்டு யாரும் வருத்தப்பட வேண்டாமென்றும், மக்களை குழப்ப வேண்டாமென்றும், விழாக் குழுவின் பொருளாளர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

- மாலை முரசு

ச: ஆற்றல்மிக்க முதல்வர்கள் அண்ணா, காமராஜ்

சென்னை, மே 7-
ஆற்றல் மிகுந்த முதல்வர்கள் என்று பட்டியலிடச் சொன்னால் பேரறிஞர் அண்ணாதான் முதல் இடத்தில் இருப்பார் என்று இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்குபணி, கீழ்த்தட்டு மக்களிடம் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் 1950களில் இருந்து 1980 வரை இருந்த முதலமைச்சர்களை மதிப்பிடச் சொன்னால் உங்கள் பட்டியலில் யார் முதலிடம் வகிப்பார்? ஏன்? உங்கள் கருத்துப்படி- சட்டப்பேரவையில் ஆற்றல்மிக்க முதலமைச்சராக திகழ்ந்தவர் யார்?


ஆற்றல் மிகுந்த முதலமைச்சர் என்று பட்டியலிடச் சொன்னால் என் கருத்துப்படி அண்ணாதான் முதல் இடத்திலே இருப்பார். ஆனால் அவரது ஆட்சிக் காலம் இரண்டாண்டு காலமே நீடித்ததால் அதிகப் பயனைப் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு, பணி, கீழ்த்தட்டு மக்களிடம் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லவேண்டுமேயானால் ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி நடத்திய காமராஜரைத்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

- மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...