.

Tuesday, May 8, 2007

ச: மாநில அரசுகள் எதிர்ப்பு: `செக்ஸ்' கல்வி பாடத்தில் திருத்தம்

புதுடெல்லி, மே. 7-

`எய்ட்ஸ்' நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் `செக்ஸ்' கல்வியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பரீட்சார்த்தமாக மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் இவை இதை பாடத்திட்டமாக கொண்டு வந்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வியை எப்படி போதிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பாடத்திட்டம் மிக மோசமாக இருப்பதாகவும், இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், சதீஸ்கார் ஆகிய மாநில அரசுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் செக்ஸ் கல்விக்கு தடை விதித்து உள்ளன.

எனவே செக்ஸ் பாடத்திட்டம் தொடர்பாக மறு ஆய்வு செய்யதயாராக இருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு டைரக்டர் நிïலரல் சுஜாதா ராவ் தெரிவித்து உள்ளார்.

சில மாநில அரசுகள் இதற்கு தடை விதித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும். பாடத்திட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

- மாலை மலர்

2 comments:

Anonymous said...

// சில மாநில அரசுகள் இதற்கு தடை விதித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. //

மிகச் சரி

மங்கை said...

சிவா

Sex Education சொன்னா இதுக்கு எதிர்ப்பு இருக்குன்னு தான் அதுக்கு இப்ப Life Skills education னு பேர் வச்சிறுக்கோம்...நம்ம ஊர்ல நாங்க 2 வருஷத்துக்கு முன்னாடியே இத பண்ணிட்டோம்..முதல்ல ஒரு 10 ஸ்கூல பண்ணோம்..முதல்ல எதிர்ப்பு இருந்தது..அதுக்கு அப்புறம் நல்ல வரவேற்பு...இதுக்கு module கூட தயாரா இருக்கு..

-o❢o-

b r e a k i n g   n e w s...