.

Tuesday, May 8, 2007

ச: "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா?

சென்னை, மே 7:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' படத்தின் பெயர் தமிழ்ப் பெயரா என்று சட்டசபையில் காங் கிரஸ் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சுற்றுலா மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீது சட்டசபை யில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பாமக உறுப்பினர் செந்தமிழ்ச் செல்வன், நல்ல தமிழ் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கும், பிற மொழி கலப்பில்லாத வசனங்கள் கொண்ட திரைப்படங்களுக்கும் அரசு கூடுதல் மானியமும், சலுகைகளும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய இ.எஸ்.எஸ். ராமன் (காங்.), தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங் களுக்கு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இதனால் இப்போது பெயர் வைப்பதில் நல்ல மாற்றம் வந்துள் ளது. ஆனால், தமிழ் பெயர்கள் குறித்து முடிவு எடுக்க ஏதேனும் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள் ளதா? விரைவில் வெளிவர இருக்கும் "சிவாஜி' திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயரா? என்று கேட்டார்.

அந்த கேள்விக்கு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடம் இருந்து பதில் பெற உறுப்பினர் ராமன் விரும்பினார். ஆனால் பரிதி இளம்வழுதி உடனடியாக பதிலளிக் காமல் அப்புறம் சொல்கிறேன் என்று நழுவினார்.

- மாலைச்சுடர்

5 comments:

Anonymous said...

நல்ல கேள்வி

துளசி கோபால் said...

மகாராஷ்ட்டிரப் பெயர்.

மராத்தி மொழி.

-L-L-D-a-s-u said...

'சிவா' என்று மட்டுமே இருந்திருந்தால் தமிழ் என்றும் சொல்லலாம். 'சிவாஜி' தமிழ் இல்லை.

Guru Prasath said...

அது தமிழாக இருந்தா என்ன, ஹிந்தியாக இருந்தா என்ன. அவரவர்க்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த பிரச்சனை பெயருக்காக அரசிடம் வரிச்சலுகை பெரும்போது தான் வரவேண்டும்.

உண்மைத்தமிழன் said...

வரி பிரச்சினைக்காகத்தான் அவரும் கேட்டிருக்கிறார். அதனால்தான் அமைச்சரும் நழுவியிருக்கிறார். படம் திரைக்கு வருவதற்கு முன் பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியமில்லை. பெயர் மாற்றமில்லை என்றால் படத்தின் மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பொருள்.

ஒருவேளை சிவாஜி என்பது தமிழ் பெயர்தான் என்பதை ஏதாவது ஓலைச்சுவடியில் கண்டுபிடித்துச் சொன்னாலும் சொல்வார்கள்.. எதுவாக இருந்தாலும் அது சிவாஜி கோபாலபுரத்திற்கு படியேறுவா என்பதைப் பொறுத்துத்தான் வரிவிலக்கு கிடைப்பதும், கிடைக்காததும் இருக்கிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...