.

Tuesday, May 8, 2007

உருக்கு ஏற்றுமதியைத் தடுக்க வெனிசுலா அதிபர் முடிவு

காராகாஸ், மே 7: வெனிசுலா நாட்டின் மிகப்பெரிய உருக்கு நிறுவனம் "சிடோர்", ஏற்றுமதிக்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு முதலில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவுறுத்தியிருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால், நிறுவனத்தை அரசே ஒரு விலை நிர்ணயித்து எடுத்துக் கொண்டுவிடும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

"சிடோர்" நிறுவனம் உருக்கு உற்பத்தியில் மிகப்பெரும் பங்கை வகித்தாலும் அது தன்னுடைய தயாரிப்பில் பெரும் பகுதியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறது. "சிடோர்" நிறுவனத்தின் தாய் நிறுவனம் லக்செம்பர்க்கில் உள்ள "டெர்னியம் சா" என்ற மிகப்பெரிய தொழில் குழுமம் ஆகும். அது ஆர்ஜென்டீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

"வெனிசுலாவிலிருந்து கனிமத்தை எடுத்து, வெனிசுலா நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டு உருக்கைத் தயாரித்து, வெனிசுலா நாட்டு அரசு தரும் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, கிடங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதித்தால் வெனிசுலா அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?" என்று கேட்டார் சாவேஸ்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...