.

Showing posts with label வெள்ளம். Show all posts
Showing posts with label வெள்ளம். Show all posts

Thursday, August 16, 2007

ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன. இன்னும் 52 பேர் சிம்லாவிலிருந்து 175 கி.மீ தூரத்திலுள்ள கான்வி என்ற அந்தக் கிராமத்திலிருந்து காணவில்லை. மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவு பெரும் பாறைகளை உருட்டி விட்டு வழியில் இருந்த அனைத்து வீடுகளையும் தவிடுபொடியாக்கியது. இறந்த அறுவரில் ஐவர் பெண்டிர். காணாமல் போனவரிலும் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த திடீர்மழையும் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

HP cloudburst: 6 bodies found, 52 still missing-India-The Times of India

Tuesday, August 14, 2007

வட கொரியாவில் வெள்ளத்தால் பெருத்த சேதம்

வட கொரியாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெல்ளத்தால் பலத்த உயிர், பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சேவை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது 200 பேராவது இறந்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழைநாடான வட கொரியா தன் மக்களுக்கு உணவளிக்க ஒரு வருடத்திற்காவது சிரமப்படவேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Red Cross: 200 dead or missing in North Korea floods - The Hindu

Wednesday, August 8, 2007

கோவாவில் பலத்த மழை: உயிர்சேதம்

பிஹார், குஜராத், உ.பியை அடுத்து கோவாவில் பலத்தமழை பெய்து உயிர்சேதம் விளைவித்துள்ளது. மஹராஷ்ற்றாவின் சில இடங்களும் மத்திய பிரதேசத்தில் சில இடங்களும் பெரும் மழையால் பாதிப்படைந்துள்ளன.

Rain fury on in Goa, MP; scene in Bihar, UP improves - The Hindu

Tuesday, August 7, 2007

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்

தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல் போன்ற பல விதமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்கள், மிகப் பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இந்தியாவில் இருக்கும் ஐ நா சபையின் குழந்தைகள் நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய மாநிலமான பீஹாரில் மட்டும், நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு மேலும் பல ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாகவும், வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடிய வாய்வழி திரவ மருந்துப் பாக்கெட்டுகள் குறைந்தது பத்து லட்சம் தேவை என்றும் ஐ நா சபை தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வெள்ளத்தின் உயரம் குறையத் துவங்கியிருந்தாலும், பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து மேடான பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

தமிழ் பிபிசி

U.N. sees health crisis risk from South Asia floods | Top News | Reuters
Monsoon health crisis 'days away' - Weather - MSNBC.com
South Asian Flood Death Toll Hits 311
India, Nepal bicker over cause of flood

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சைதாபாதிலிருந்து பதர்காட் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு நோக்கி கடுமையான காற்று வீசியது. இதில் நிலைகுலைந்த படகு, நடு ஆற்றில் அப்படியே மூழ்கியது என சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.

தினமணி

The Hindu : Front Page : 80 feared drowned in boat tragedy

Thursday, August 2, 2007

தலைநகர் தில்லியில் பலத்தமழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு

பருவமழையின் தீவிரத்தால் தில்லி தடுமாறுகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த 166.6மிமீ மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பயணிகள் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கிழக்கு தில்லியில் 30க்கும் மேலான இரயில்கள் மழைநீரால் தடைபட்டு நிற்கின்றன. ஹௌரா,புவனேஸ்வர்,ராஞ்சிக்கான இராஜதானி விரைவுவண்டிகளும் இதில் அடக்கம்.
NDTV.com: Delhi reels under heavy waterlogging

Wednesday, August 1, 2007

இந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

அடைமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுமார் ஒருகோடிபேர் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களில் பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். விளைநிலங்கள் பெருமளவு நீரில் மூழ்கியதால், பரவலாக பயிர் நாசமாகியிருக்கிறது.

அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரக்கணக்கான கிராமசவாசிகளுக்கு, ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் இராணுவத்தினர் நிவாரணப் பொருட்களை அளித்துவருவதாக, அசாம் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளத்திலிருந்து தப்பும் நோக்கத்தில் அவசரமாக படகில் பயணம் செய்யமுயன்ற கிராமவாசிகள் 28 பேர், அவர்கள் பயணம் செய்த படகு மூழ்கியதில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக வட இந்திய மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய சற்றுமுன்...: வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

BBC Tamil

BBC NEWS | South Asia | Flood evacuees die in India storm
Floods worsen in India's Assam state, 5 million displaced

Sunday, July 29, 2007

வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள்.

மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திட்டங்களை கவனிக்காமல் அனாதரவாக விட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரப்ரி தேவி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கிழக்கு உத்தரபிரதேசமும் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இங்கு காக்ரா, குணோ, காதிநாயன் ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. மழை வெள்ளத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

Nearly three million hit by floods in India
The Hindu : National : Rain cripples North Bihar
Death, darkness, dripping roofs in S.Asia floods
Nitish carries Hanuman Chalisa and Gangajal to Mauritius- Hindustan Times

Tuesday, July 24, 2007

அஸ்ஸாம்: வெள்ளத்திலிருந்து 40,000 பேர் மீட்பு

துடிப்புமிக்க இளம் இ.ஆ.ப அதிகாரி ஒருவரின் முயற்சியால் அஸ்ஸாமில் வெள்ளத்தால் சூழப்பட்ட 40,000 கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய தினமலர் செய்தி:

இளம் துடிப்பான ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் அதிரடி முயற்சியால் வெள்ளத்தில் சிக்கிய 40 ஆயிரம் கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

சமீபத்தில், அசாமில் பெய்த பேய் மழையால், தேமாஜி மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஜியாதோல் நதியின் உபநதியான குமோடியா நதியில் திடீர் வெள்ளப் பெருக்கும், உடைப்பும் ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை 52ல் ஆயிரத்து 500 மீட்டர் துõர சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இருந்து தேமாஜி மாவட்டம் துண்டிக்கப்பட்டது.

நதிநீர் புகுந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த 50 கிராமங்களில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்பது தான் மாவட்ட நிர்வாகத்தின் முதல் பணியாக இருந்தது. இதனால், மாவட்ட நிர்வாக அதிகாரியான இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களின் உதவியை கேட்டார்.ஆனால், அந்த கிராமப் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மரங்கள், ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறப்பதற்கு தடையாக இருந்தன. அதுமட்டுமின்றி, தரையிறங்க எங்கும் இடமே கிடைக்கவில்லை. இதனால், ஹெலிகாப்டர்கள் மூலம் கிராம மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அந்த கிராமங்களை சென்றடைவது கடினம் என்று ராணுவத்தினரும் கைவிரித்து விட்டனர்.தானாக உதவிக்கு முன்வர துடிப்பான இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அழைப்பு விடுத்தார். ஏராளமான இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் உதவுவதற்கு முன் வந்தனர்.அவர்கள், நாட்டுப்படகை பயன்படுத்தி, வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கிராமங்களுக்கு சென்றனர். அங்கிருந்த அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். துடிப்புடனும், தீரத்துடன் உதவிய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாராட்டினார்.மீட்கப்பட்ட கிராம மக்கள், அதிகாரியின் அதிரடி நடவடிக்கைக்கு பெரிதும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

Friday, July 13, 2007

அசோமில் வெள்ளம்:120 கிராமங்கள் நீரில் மூழ்கின

அசோமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் நதிகளின் கரையோரங்களில் இருந்த 40,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். கௌஹாட்டியிலிருந்து 500 கி.மீ தூரத்திலுள்ள தேமாஜி மாவட்டத்தில் 120 கிராமங்கள் குமோடியா நதியின் கரையுடைப்பினால் மூழ்கியுள்ளன என அரசு செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இது பற்றி..Assam floods displace 40,000, over 120 villages washed away-India-The Times of India

Saturday, July 7, 2007

இராஜஸ்தானில் அணை உடைந்து வெள்ளம்

தொடர்ந்த மழையினால் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஜஸ்வந்த் சாகர்அணை இன்று விரிசல் ஏற்பட்டு உடைந்தது. இதனால் சுற்றுபுறத்தில் உள்ள 39 கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வேலையில் உதவ இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. ஜெய்பூர்-ஜோத்பூர் சாலை போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு...Mass evacuation as Rajasthan dam breaches- Hindustan Times

-o❢o-

b r e a k i n g   n e w s...