.

Tuesday, July 24, 2007

அஸ்ஸாம்: வெள்ளத்திலிருந்து 40,000 பேர் மீட்பு

துடிப்புமிக்க இளம் இ.ஆ.ப அதிகாரி ஒருவரின் முயற்சியால் அஸ்ஸாமில் வெள்ளத்தால் சூழப்பட்ட 40,000 கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றிய தினமலர் செய்தி:

இளம் துடிப்பான ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் அதிரடி முயற்சியால் வெள்ளத்தில் சிக்கிய 40 ஆயிரம் கிராம மக்கள் மீட்கப்பட்டனர்.

சமீபத்தில், அசாமில் பெய்த பேய் மழையால், தேமாஜி மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஜியாதோல் நதியின் உபநதியான குமோடியா நதியில் திடீர் வெள்ளப் பெருக்கும், உடைப்பும் ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை 52ல் ஆயிரத்து 500 மீட்டர் துõர சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இருந்து தேமாஜி மாவட்டம் துண்டிக்கப்பட்டது.

நதிநீர் புகுந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த 50 கிராமங்களில் வசிக்கும் 40 ஆயிரம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டனர். வெள்ளத்தால் சூழப்பட்டு தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்பது தான் மாவட்ட நிர்வாகத்தின் முதல் பணியாக இருந்தது. இதனால், மாவட்ட நிர்வாக அதிகாரியான இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்களின் உதவியை கேட்டார்.ஆனால், அந்த கிராமப் பகுதிகளில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மரங்கள், ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறப்பதற்கு தடையாக இருந்தன. அதுமட்டுமின்றி, தரையிறங்க எங்கும் இடமே கிடைக்கவில்லை. இதனால், ஹெலிகாப்டர்கள் மூலம் கிராம மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. அந்த கிராமங்களை சென்றடைவது கடினம் என்று ராணுவத்தினரும் கைவிரித்து விட்டனர்.தானாக உதவிக்கு முன்வர துடிப்பான இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அழைப்பு விடுத்தார். ஏராளமான இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் உதவுவதற்கு முன் வந்தனர்.அவர்கள், நாட்டுப்படகை பயன்படுத்தி, வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கிராமங்களுக்கு சென்றனர். அங்கிருந்த அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரப்பட்டனர். துடிப்புடனும், தீரத்துடன் உதவிய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாராட்டினார்.மீட்கப்பட்ட கிராம மக்கள், அதிகாரியின் அதிரடி நடவடிக்கைக்கு பெரிதும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...