ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை கேள்வி நேரம் முடியும்வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் அவருடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் ஜனார்த்தன் ரெட்டிக்குச் சொந்தமான இரும்புத் தாது சுரங்கத்தில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாகக் கூறி தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரும்புத் தாது சுரங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைய முயன்றதாக அவர்களைப் காவல்துறையினர் கைது செய்தனர்.
திங்கள்கிழமை சட்டப் பேரவை கூடியதும் இந்த விவகாரத்தை தெலுங்குதேச உறுப்பினர்கள் அவையில் எழுப்பினர். இது தொடர்பாக அவர்கள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு இடதுசாரி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். எனினும், இந்த தீர்மானத்துக்கு பேரவைத் தலைவர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி அனுமதியளிக்கவில்லை.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதாக முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதியளித்ததையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொருட்படுத்தவில்லை.
அரசுக்கு எதிராகவும், பேரவைத் தலைவருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு பேரவையின் மையப்பகுதியில் அவர்கள் கூடினர். இதையடுத்து 10 நிமிடங்களுக்கு அவையை பேரவைத் தலைவர் ஒத்திவைத்தார்.
அவை மீண்டும் கூடியபோதும், அமளி தொடர்ந்ததால், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை வேளாண்துறை அமைச்சர் என். ரகுவீர ரெட்டி கொண்டுவந்தார். இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைக் கேட்டதும், மிகவும் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, தனது கையில் இருந்த காகிதங்களை மேஜை மீது வீசி எறிந்தார். இதைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவைக் காவலர்களின் உதவியோடு வெளியேற்றப் பட்டனர்.
தினமணி
Bedlam in Andhra House over CM's remark against Naidu - India - The Times of India
The Hindu News :: 21 TDP members suspended for stalling House proceedings
Telugu Desam MLAs stay put in police station - Newindpress.com
Tuesday, July 24, 2007
சந்திரபாபு நாயுடு 'சஸ்பெண்ட்'
Posted by Boston Bala at 1:32 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment