.

Friday, March 23, 2007

இந்தியா பேட்டிங்

255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கள்மிறங்கியுள்ள இந்தியா 2 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.

நண்பர்களே விவாதங்களை இங்கு தொடரலாம்.

சற்றுமுன்: இலங்கை பாதுகாப்பான ஆட்டம் 127/3

இந்தியா இலங்கை அனிகலுக்குள்ளான (இந்தியாவுக்கு) முக்கியமான போட்டியில் டாசை வென்ற இந்திய அணி இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது.

30 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை இலங்கை எடுத்துள்ளது. தற்போதைய ஓட்ட வேகம் ஓவருக்கு 4.16

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும் எனும் நிலையில் இந்தியா ஆடுகிறது.


Sri Lanka innings (50 overs maximum) R B 4s 6s SR

WU Tharanga not out 52 72 6 0 72.22
ST Jayasuriya c Agarkar b Khan 6 23 0 0 26.08
DPMD Jayawardene c Dhoni b Agarkar 7 20 1 0 35.00
KC Sangakkara c Patel b Ganguly 15 35 2 0 42.85
LPC Silva not out 6 8 0 0 75.00
Extras (lb 11, w 8, nb 1) 20

Total (3 wickets; 26.1 overs) 106

To bat TM Dilshan, M Muralitharan, WPUJC Vaas, RP Arnold, SL Malinga, CRD Fernando

Fall of wickets1-33 (Jayasuriya, 6.6 ov), 2-53 (Jayawardene, 12.4 ov), 3-92 (Sangakkara, 23.3 ov)

Bowling O M R W Econ
Z Khan 6 0 18 1 3.00 (1nb, 4w)
AB Agarkar 7 1 23 1 3.28 (3w)
MM Patel 6.1 1 20 0 3.24
Harbhajan Singh 4 0 17 0 4.25
SC Ganguly 3 0 17 1 5.66 (1w)

நேர்த்தியாக விளையாடும் இலங்கை

இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் கிரிகெட் போட்டி நடைபெறுகிறது.

முதலில் பேட்டிங் துவக்கியுள்ள இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் தாரங்காவின் ஆட்டத்தினால் நேந்த்தியாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்திய அணியும் தன் பங்கிற்கு நன்றாகவே விளையாடுகிறது. தற்பொதுவரை இரு அணிகளுக்கும் சம் வாய்ப்பே

பார்க்கலாம் என்னவாகிறது என

சற்றுமுன்:15 இங்கிலாந்து கடற்படை வீரர்களை ஈரான் கைதுசெய்துள்ளது

பெர்ஷியன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் இருந்த 15 பிரிட்டிஷ் கடற்படை வீரர்களை ஈரான் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளது.
வீரர்களை உடனடியாக விடுவிக்கும்படி இங்கிலாந்து ஈரானை கேட்டுள்ளது.

வீரர்கள் ஈராக் கடல் பகுதியில் இருந்தனர் என இங்கிலாந்து வாதிடுகிறது.

Iran 'seizes' 15 British sailors
An Iranian naval patrol seized 15 British marines and sailors who had boarded a vessel suspected of smuggling cars off the coast of Iraq, military officials said.
The British government immediately demanded the safe return of its troops and summoned Tehran's London ambassador to explain the incident.

சற்றுமுன்: உலகக் கோப்பை இந்தியா X இலங்கை

இன்று ( 23-03-07)இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் அதி முக்கியதுவம் வாய்ந்த மேட்ச் நடைபெறுகிறது.

இதில் டாஸில் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சற்று முன்: ஜூன் 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

டைரக்டர் கனேஷ்ராஜ் மரணம்.

விக்னேஷ் நடித்த சின்னதாயி .சரவணன் நடித்த மாமியார் வீடு நெப்போலியன் நடித்த பரணி. ஆகிய படங்களை இயக்கிய கனேஷ்ராஜ் நுரையீரல் பாதிப்பு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார்.அவரின் உடலுக்கு நடிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மாலைமுரசு

சற்றுமுன்: கோயம்பேடு வியாபாரிகள் இன்று உண்ணாவிரதம்!

சென்னையில் ரிலையன்ஸ் நிறுவனம் 12க்கும் மேற்பட்ட இடங்களில் சில்லரை விற்பனை நிலையங்களை திறந்துள்ளது. மேலும் பல கடைகளை திரக்க முயற்ச்சி மேர்க்கொண்டுள்ளதுஇதை கண்டித்து அ தி மு க ஆதரவுடன்கோயம்பேடு வியாபாரிகள் இன்று உண்ணவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.பல ஊர்களில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

சற்றுமுன்: இரான் எண்ணெய் குழாய் திட்டம் U.S. எதிர்ப்பு

ஐக்கிய அமெரிக்க குடியரசு இரானிய எண்ணெய்/வாயு குழாய் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இரானின் அணுஆயுத வளர்ச்சிக்கு வித்திடுவதால் இந்தியா இத்திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்துவதாக யு.எஸ் எரிசக்தி செயலர் சாமுவல் போட்மன் மும்பையில் கூறினார். இதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பு பாதிக்கப் படாது என்றும் தெளிவுபடுத்தினார்.


U.S. Urges Delhi To Drop Iran Pipeline Project - Forbes.com

சற்றுமுன்;மஞ்சுநாத் கொலைவழக்கில் 8 பேருக்கு தண்டனை

உத்தரப் பிரதேச இலக்கிம்பூர் கேரியில் உள்ள மாவட்ட & செஷன்ஸ் நீதிமன்றம் இன்று IOC விற்பனை அதிகாரி மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த எட்டு பேரையுமே குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை மார்ச் 26 அன்று வழங்கப் படும்.

மேலும்...: CNN-IBN

சற்றுமுன்: ஜமைகா காவல்துறையின் முழு அறிக்கை:

ஜமைகா கன்ஸ்டபுலரி ஃபோர்ஸ் (JCF) இன்கிரிக்கெட் கோச் பாப் உல்மரின் மரணம் குறித்த முழு அறிக்கை:DNA - Sport - Daily News & Analysis

சற்றுமுன்:72 பேர் மரணம் - மொசாம்பிக் ஆயுதக் கிடங்கு வெடிப்பு

மொசாம்பிக்கின் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடிப்புகள், தீயில் 72 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகர் கூறினார்.300 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சாவு எண்ணிக்கை உயரலாம் என்றும் மேலும் அவர் கூறினார். கிடங்கிலிருந்த இராணுவத்தினரும் அருகாமையில் அமைந்த சேரிவாசிகளும் பாதிக்கப் பட்டவர்களாகும்.

72 Die in Mozambique Weapons Depot Blast - washingtonpost.com

சற்றுமுன்: புதிய வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் புதிய வரிவிதிப்பு இல்லை
சென்னை : தமிழக சட்டசபையில் 2007 2008 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.இதில் , 22 லட்சம் கூட்டுறவு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் ரூ1150 கோடி புதிய கடன். மேலும் விவசாயிகள் நலத்திட்டங்களுக்கு 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , 10 லட்சம் விவசாயிகளுக்கு பயீர் காப்பீட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் , விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் எனவும் ,14 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரசு சாதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.பால் உற்பத்தியை பெருக்க மான்ய திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு , *காவல்துறைக்கு 2136 கோடி ஒதுக்கீடு * காவிரி டெல்டா மாவட்டங்களில் துõர் வார ரூ 40 கோடி ஒதுக்கீடு * நீதித்துறைக்குரூ 270 கோடி ஒதுக்கீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது *திருவாருர் , தருமபுரியில் மருத்துவ கல்லுõரிகள் * கூட்டுறவு சங்க தேர்தல் மே , ஜூன் மாதங்களில் நடத்த முடிவு * அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்க முடிவு * நெல்லையில் புதிய தொழில்நுட்ப பல்கலைகழகம் *விருதுநகரில் சிறப்பு பொருளாதார மையம் *ரூ 9000 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் * சென்னை எண்ணுõர் கடலுõரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு *தனியார் பஸ்களுக்கு வரிச்சலுகை * மாணவர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை 300 கோடி ஒதுக்கீடு * அரிசி பருப்பு எண்ணெய் விலை உயராமல் தடுக்க தீவிர நடவடிக்கை உள்ளிட்டவை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமலர்

சற்றுமுன்: 'பாப் உல்மர் கொலை செய்யப்பட்டார்' - ஜமைக்கா போலிஸ்

ஜமைக்கா போலிஸ் பாப் உல்மர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்து அவரின் இறப்பை கொலையாக கருதி விசாரணையை துவங்கியுள்ளது. முன்னதாக பாக்கிஸ்தான் அணியினரின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

Woolmer died of strangulation
Jamaican police: Bob Woolmer was murdered
Woolmer death treated as murder
Jamaican police say Woolmer was strangled

மின்னஞ்சலில் செய்தி அனுப்பிய பரணிக்கு நன்றி

சற்றுமுன்:குஜராத் கலவரம்-92.39 கோடி நிவாரணம்

குஜராத் கலவரத்தின்போது படுகாயம் அடைந்த 2548 பேருக்கு தலா ரூ 1.25 லட்சமும், இறந்துபோன 1169பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 3.5 லட்சமும் நிவாரணம் வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மாநில அரசின் நிவாரனமும் அடங்கும்.

நன்றி தினமலர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...