தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் புதிய வரிவிதிப்பு இல்லை
சென்னை : தமிழக சட்டசபையில் 2007 2008 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.இதில் , 22 லட்சம் கூட்டுறவு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியில் ரூ1150 கோடி புதிய கடன். மேலும் விவசாயிகள் நலத்திட்டங்களுக்கு 152 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் , 10 லட்சம் விவசாயிகளுக்கு பயீர் காப்பீட்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் , விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் எனவும் ,14 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரசு சாதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.பால் உற்பத்தியை பெருக்க மான்ய திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் சில முக்கிய அம்சங்கள் வருமாறு , *காவல்துறைக்கு 2136 கோடி ஒதுக்கீடு * காவிரி டெல்டா மாவட்டங்களில் துõர் வார ரூ 40 கோடி ஒதுக்கீடு * நீதித்துறைக்குரூ 270 கோடி ஒதுக்கீடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது *திருவாருர் , தருமபுரியில் மருத்துவ கல்லுõரிகள் * கூட்டுறவு சங்க தேர்தல் மே , ஜூன் மாதங்களில் நடத்த முடிவு * அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்க முடிவு * நெல்லையில் புதிய தொழில்நுட்ப பல்கலைகழகம் *விருதுநகரில் சிறப்பு பொருளாதார மையம் *ரூ 9000 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் * சென்னை எண்ணுõர் கடலுõரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு *தனியார் பஸ்களுக்கு வரிச்சலுகை * மாணவர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை 300 கோடி ஒதுக்கீடு * அரிசி பருப்பு எண்ணெய் விலை உயராமல் தடுக்க தீவிர நடவடிக்கை உள்ளிட்டவை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தினமலர்
Friday, March 23, 2007
சற்றுமுன்: புதிய வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்
Labels:
தமிழ்நாடு,
பொருளாதாரம்
Posted by ✪சிந்தாநதி at 11:16 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டை.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயர்வு.
எல்லைப் போராட்ட தியாகிகளுக்கான நிதியுதவி ரூ. 4.000 ஆக உயர்வு.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கில, பிறமொழிக் கையேடுகள்
அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.
தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு.
வரும் கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் மாற்று முறை அறிமுகம்.
அரசுக் கல்லூரிகளில் ரூ. 25 கோடியில் புதிய வகுப்பறைகள்.
திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
திருவாரூர், தர்மபுரியில் தலா ரூ. 100 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.
செலவே இல்லாத பட்ஜெட் போட மாட்டாங்களா ? எல்லாம் இலவசம் !!!
Post a Comment