இன்று ( 23-03-07)இந்தியா இலங்கைக்கு இடையே டிரினிடாடில் அதி முக்கியதுவம் வாய்ந்த மேட்ச் நடைபெறுகிறது.
இதில் டாஸில் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.
Friday, March 23, 2007
சற்றுமுன்: உலகக் கோப்பை இந்தியா X இலங்கை
Posted by சிவபாலன் at 7:16 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
49 comments:
அனில் கும்பளேவுக்கு பதிலாக HHarbhajan Singh வந்துள்ளார்.
SL 17/0 - 4.0 overs
பசங்க ஜெயிப்பாங்களா?
மணி
வெற்றி பெற்றால் உண்டு வாழ்வு.. இல்லை என்றால் இந்திய அணியில் பல பேருக்கு இதுதான் கடைசி போட்டி.. அடுத்த போட்டிக்கு அவர்கள் அணியில் இருக்கமாட்டார்கள்..
வெற்றி பெறுவோம் என நம்புவோமாக..
Agarkar ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை..
கடுப்பாக இருக்கிறது
இன்றைக்கு மழை வரப் போவுதுங்க.
இந்தியா சூப்பர் 8 போறது ரெம்ப சந்தேகம்.. என்னை நீங்க சபிச்சாலும் பரவாயில்ல.
ஒரு பெட்டிங் வச்சுக்கலாமா?
:)
ரெண்டு முறை LBW ஆகி, மூன்றாவதாக பேட் செய்ய கிடைத்த வாய்ப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெயசூரியா. நல்லாயிருங்க அம்பையர்ஸ்.
link please !!!!!!!!!
சிறில்
என்ன இப்படி டென்சன் ஏத்திறீங்க.. நம்ம ஆளுங்க இன்னை தோத்துட்டா .. அவ்வளவுதான்.. :)
vaanamtv.com
tamilkavithai.de
/பசங்க ஜெயிப்பாங்களா?
/
கண்டிப்பாக ஜெயிப்போம்.;)
/ரெண்டு முறை LBW ஆகி, மூன்றாவதாக பேட் செய்ய கிடைத்த வாய்ப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெயசூரியா. நல்லாயிருங்க அம்பையர்ஸ்.
/
நடுவர் எந்த 'ஊரு'ங்க?
SL: 36/1 (8 ஒவர்; 4.50RR)
ஒரு நடுவர் பாக்கிஸ்தான், மற்றொருவர் ஆஸ்திரேலியா
சிறில் என்ன பெட்டிங் எல்லாம் வக்கிறீங்க...;)
எனக்கென்னவோ அப்பையர்களையும் சேர்த்து இலங்கைக்கு 13 பேர் ஆடறாங்களோன்னு தோனுது.
அம்பையர் ஹார்ப்பர் டவுன் டவுன்!
மணி
என்னங்க் இது இந்தியாவிற்கு எதிராக 13 பேர் விளையாடுகிறார்கள்..
கேட்ச் இல்லை என சொல்லிட்டார்.. 13 பேரில் ஒருவர்..
Well done Dhoni, Great Catch! 53/2
What a catch!! A Treat to watch!
மணி
இதுல Fixing எல்லாம் ஒன்னும் இல்லையே.. ஏன்னா Leg side பாலை இப்படி கேப்ட்டன் அடிக்கிறாரே அதுனால கேட்ட்கிறேன்
//மணி
இதுல Fixing எல்லாம் ஒன்னும் இல்லையே.. ஏன்னா Leg side பாலை இப்படி கேப்ட்டன் அடிக்கிறாரே அதுனால கேட்ட்கிறேன்
//
You too சி.பா :). அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க . அப்படியே பண்ரதா இருந்தாலும், பங்களாதேஷ் பெர்முடா மேட்ச் fix பண்ணி பங்களாதெஷ் தோக்கற மாதிரி பண்ணுவாங்களே தவிர, இன்னைக்கு வாய்ப்பே இல்லை
பொறுத்திறுந்து பார்ப்போம்....
இலங்கை தனது வழமையான பாணியில் விளையாடவில்லை. இன்று கட்டாயம் வெல்லவேண்டும் என்ற அழுத்தம் ஸ்ரீலங்காவிற்க்கு கிடையாது.
ஜயசூரிய இவ்வளவு தடுமாற்றமாக விளையாட வேண்டியதில்லை. இன்று விளையாடியது அவரது பாணியே அல்ல.
ஜயவர்தன Leg sideல் போகும் பந்தை அடிக்காமல் விட்டிருக்கலாம்.
வெல்ல வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்க்கு மட்டுமல்லாமல் வேறுசில சக்திகளுக்கும் தேவை.
அதன்படி முடிவுகள் அமையலாம்.
அதையும் மீறி இந்தியா தோற்றால் அது இந்தியாவின் தலையெழுத்து.
//இன்று கட்டாயம் வெல்லவேண்டும் என்ற அழுத்தம் ஸ்ரீலங்காவிற்க்கு கிடையாது.
//
அப்படி சொல்ல முடியாதுங்க.. அடுத்த சுற்றுக்கு 2 புள்ளிகளோட போறது முக்கியம் அவங்களுக்கு.
/What a catch!! A Treat to watch!
/
வெறுப்பேத்தாதிங்க, சிவபாலன்!
/ஒரு நடுவர் பாக்கிஸ்தான், மற்றொருவர் ஆஸ்திரேலியா /
நமக்கு-னு வந்து அமையுது பாருங்க...;(
அங்க பெவிலியன்ல நம்ம க்ரெக் சாப்பல் கழுத்த தடவிகிட்டு உக்காந்துகிட்டிருக்காராம்.
:))
//மணி
இதுல Fixing எல்லாம் ஒன்னும் இல்லையே.. ஏன்னா Leg side பாலை இப்படி கேப்ட்டன் அடிக்கிறாரே அதுனால கேட்ட்கிறேன்//
சிபா,
என்ன கேள்வி இது. பங்களாதேஷ் கிட்ட அந்த அடி அடிச்சிட்டு அடுத்த மேட்சல இப்படி யாராவது தடவுவாங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவிங்க சி.பா
//அப்படி சொல்ல முடியாதுங்க.. அடுத்த சுற்றுக்கு 2 புள்ளிகளோட போறது முக்கியம் அவங்களுக்கு.//
இன்று தோற்றாலும் ஸ்ரீலங்கா அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
இங்கே இந்தியா வெல்ல வேண்டியது கட்டாயம்.
பங்களாதேஷ் பர்முடாவிடம் தோற்று, இந்தியா இலங்கையிடம் தோற்றால் இந்தியா அடுத்த சுற்றிற்க்கு செல்லும்.
அதைவிட இலங்கை தோற்பது இலகுவானது.
தென்றல்,
டெசன் ஆகாதீங்க.. எப்படியும் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் எனற நம்பிக்கை வந்துவிட்டது..
சிறில்,
//அங்க பெவிலியன்ல நம்ம க்ரெக் சாப்பல் கழுத்த தடவிகிட்டு உக்காந்துகிட்டிருக்காராம். //
Best Comment..
சந்தோஷ் ,
இப்பதாங்க கொஞ்ச கொஞ்சமா புரியுது
//சிபா,
என்ன கேள்வி இது. பங்களாதேஷ் கிட்ட அந்த அடி அடிச்சிட்டு அடுத்த மேட்சல இப்படி யாராவது தடவுவாங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவிங்க சி.பா
//
சந்தோஷ், நீங்க சொல்றது படி பார்த்தா ஒரு அணி தடவிகிட்டே தான் இருக்கனும், இல்லை அடிச்சிகிட்டே தான் இருக்கனும். எந்த டீமும் ஒரு நாள் ஆடின மாதிரி இன்னொரு நாளும் ஆட முடியாது. அப்படி ஆடினா அவங்க வின்னிங் % 100 இருக்கனும். ஆஸ்திரேலியாவொட வின்னிங் % கூட கிட்டத்தட்ட 63% கிட்ட தான். இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? (உங்களைன்னு சொல்லலை பொதுவா ஃபிக்ஸிங்னு சொல்ற எல்லாருக்கும் சொல்றேன்)
//இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? //
க்ரெக் சசப்பலின் நிலமை என்னவாகும்ணு தெரியவேண்டாமா?
க்ரிக்கெட்ட பொறுத்தவரைக்கும் நீங்க தீவிர பக்தர் நான் நாத்திகன் ஆயிட்டேன்.
:)
சிறில்
அப்ப உலகத்தில் பக்தி என்பது இப்படிதான் என சொல்ல வருகிறீர்களா? :)
மேட்ச் கொஞ்சம் SLOW ஆகிவிட்டது..அதனால் இப்படி எல்லாம் கேள்வி வருது.,.
சிறில்... சி.பா. சொன்னது மாதிரி காமெண்ட் எல்லாம் அமர்க்களம்.
---க்ரிக்கெட்ட பொறுத்தவரைக்கும் நீங்க தீவிர பக்தர் நான் நாத்திகன் ஆயிட்டேன்.---
இப்பத்தான் நம்ம பக்கம் வந்திருக்கீங்க ;)
//க்ரெக் சசப்பலின் நிலமை என்னவாகும்ணு தெரியவேண்டாமா?
//
சிறில், சிகாகோவுக்கு ஃப்ளைட் அனுப்பனுமா?
ஆஃபிஸுக்கு கிளம்பறேன். அரை மணி நேரம் கழிச்சு ஆட்டத்துல மறுபடியும் சேர்ந்துக்கறேன். அதுவரைக்கும் நம்ம பசங்களை எல்லாரும் பத்திரமா பார்த்துக்கோங்க:)
Dravid's gamble with Ganguly paid off!!
Sanggakara out caugt Patel bowled BT[Bengal Tiger]
:))
எப்படியோ அடுத்த விக்கெட்டும் விழுந்துவிட்டது.. அதெப்படி Long - On ஆள் நிக்கும் போதே அங்கேயே பால் செல்கிறது.. அட போங்கப்பா மேட்ச் பார்கிற போயிடும் போல
//எப்படியோ அடுத்த விக்கெட்டும் விழுந்துவிட்டது.. அதெப்படி Long - On ஆள் நிக்கும் போதே அங்கேயே பால் செல்கிறது.. அட போங்கப்பா மேட்ச் பார்கிற போயிடும் போல//
ஆகா நம்ம கட்சிக்கு ஏகப்பட்ட ஆள் சேருது போல.
//இன்னைக்கு மேட்ச் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க?//
மணி டென்ஷன் ஆகாதிங்க. நம்மளோட weirednessல இதுவும் ஒண்ணு. எல்லாரும் ஒரே பக்கம் பேசிட்டு இருந்தா போர் அடிக்கும். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆனால் தான், ஆட்டகளம் நல்லா இருக்கும் :))..
//Dravid's gamble with Ganguly paid off!!//
some one agrees it is all Gamble.
:)
//இந்தியா ஜெயிக்கும்னு தெரிஞ்சா எதுக்கு உக்காந்து மேட்சை பார்க்கறீங்க? (உங்களைன்னு சொல்லலை பொதுவா ஃபிக்ஸிங்னு சொல்ற எல்லாருக்கும் சொல்றேன்)//
//ஆஃபிஸுக்கு கிளம்பறேன்//
இப்படி சொல்லிட்டு நீங்க ஆபீசுக்கு கிளம்பினா எப்படி. உங்களுக்கே தெரியுது ஆனால் அதை ஏத்துக்க மனசில்ல.
சிலோன்காரங்கள் தோற்றாலும் அவிங்களுக்கும் லாபம்தான். நிறைய கிம்பளம் கிடைக்குமுங்க.
//இப்படி சொல்லிட்டு நீங்க ஆபீசுக்கு கிளம்பினா எப்படி. உங்களுக்கே தெரியுது ஆனால் அதை ஏத்துக்க மனசில்ல.
//
ஏங்க அனானி, இதுக்காக லீவ் போட்டா, இந்தியா ரிட்டர்ன் ஆகுதோ இல்லையோ நான் ஆயிடுவேன்
//ஆஃபிஸுக்கு கிளம்பறேன்//
இப்படி சொல்லிட்டு நீங்க ஆபீசுக்கு கிளம்பினா எப்படி. உங்களுக்கே தெரியுது ஆனால் அதை ஏத்துக்க மனசில்ல.//
இது எல்லாம் ஒவர்பா, ஒரு மனுசன் ஆபீசுக்கு போயி மேட்சு பாக்குறேன்ன்னு சொல்றது தப்பா. மேட்சு பாக்குறதுக்கு எல்லாம் வேலையை விட முடியாது சாமி.
//ஏங்க அனானி, இதுக்காக லீவ் போட்டா, இந்தியா ரிட்டர்ன் ஆகுதோ இல்லையோ நான் ஆயிடுவேன்//
மணி ஆபீசுக்கு வந்துட்டிங்க போல :))..
அடுத்த (கண்டம்)சுற்றுல இந்தியாவிற்க்கு முதல் மாட்ச் அவுஸ்திரேலியாவோ, தென்னாபிரிக்காவோதான்.
அதுல தெரியும் நம்ம வீரம்.
40 ஆயிடுச்சு .. சி.பா அடுத்த பதிவப் போடுங்க.
டென்ஷனில் தோற்கப் போவது உறுதி............
//ஒரு நடுவர் பாக்கிஸ்தான், மற்றொருவர் ஆஸ்திரேலியா /
நமக்கு-னு வந்து அமையுது பாருங்க...;//
கவலைப்படாதீங்க. அடுத்த மாட்ச்சில ரெண்டும் இந்தியன் நடுவர்களா போட்டுரலாம்:)))
//இது எல்லாம் ஒவர்பா, ஒரு மனுசன் ஆபீசுக்கு போயி மேட்சு பாக்குறேன்ன்னு சொல்றது தப்பா//
அப்ப ஆபீசுக்கு வேலைக்கு போகலையா? மாட்ச் பார்க்கத்தான் போனீங்களா?:))))
கருத்து பரிமாற்றத்திற்கு இங்கே செல்லுங்க..
http://satrumun.blogspot.com/
2007/03/blog-post_1820.html
அடுத்த பதிவில் தொடருவோமே..
சுட்டி
http://satrumun.blogspot.com/2007/03/1063.html
---இந்தியாவிற்க்கு முதல் மாட்ச் அவுஸ்திரேலியாவோ, தென்னாபிரிக்காவோதான். ---
இந்த மேட்சையே பிக்ஸ் செய்யறப்போ, அடுத்த ஆட்டத்தையும் 'வாங்கிடலாமே' ;))
சி.பா நீங்க போட தாமதமானதும் நானே போட்டுடேன்..
:(
Post a Comment