.

Thursday, July 19, 2007

'இரண்டு சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்' - கலாம்.

குடியரசுத்தலைவராக தனது பதவிக்காலத்தின் கடை வாரத்தில் உள்ள அப்துல்கலாம், குடியரசுத்தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவராக, அநேகமாக அவர் கலந்துக்கொண்ட கடைசி நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார். " என்னிடம் இரண்டு சிறிய சூட்கேஸ்களே இருக்கின்றன, அவற்றுடனே நான் வெளியேற ஆயத்தமாகி வருகிறேன்" என்ற கலாமிடம் ஒரு பெரிய நூலகமே இருக்கிறதாம். "அவை அனைத்தும் என் தனிஉடமைகள்"

நாட்டு மக்களுக்கு அறிவுரையாக, "பிரதிபலன் எதிர்பார்த்து தரப்படும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள்" என்றார் கலாம். " அவை ஆன்மாவின் உள்ளொளியை அணைத்துவிடும்" என்றார் - மனுஸ்மிருதியை பின்மொழிந்து.

Courtesy: Kalam: I will go with two small suitcases - TOI

வாஸ்துவால் விளைந்த தீ விபத்து - பெண் பலி.

சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெரு வைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு பவித்ரா (5), கீர்த்தனா (2) 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வெங்கடேசனுக்கும் தீபாவுக்கும் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இது சம்பந்தமாக அந்த பகுதியில் குறி சொல்லும் வாஸ்து நிபுணர் ஒருவரை வெங்கடேசன் அணுகி உள்ளார்.

அவர் வெங்கடேசன் தங்கியிருக்கும் வீட்டை ஆய்வு செய்து வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கிழக்கு பக்கம் வாசல், ஜன்னல் போன்றவை இருக்கக்கூடாது. எனவே இவற்றை அடைத்து விட்டு தெற்கு பக்கம் வாசல் மற்றும் ஜன்னல் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என அறிவுறுத்தி இருக்கிறார்.

அவரது பேச்சை கேட்ட வெங்கடேசனும் சமையல் அறையை ஒட்டி இருந்த கிழக்கு பக்க வாசல் ஜன்னல் போன்றவற்றை செங்கற்களால் அடைத்தார். இதனால் சமையலறைக்கு எந்தவித காற்றோட்டமும் கிடைக்கவில்லை.

இன்று காலை 6 மணி அளவில் பால் காய்ச்சுவதற்காக தீபா சமையலறைக்கு சென்றார். அங்கிருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து அடுப்பில் தீக்குச்சியை எடுத்து பற்ற வைத்தார். சில தீக்குச்சிகள் எரியவில்லை.

சமையலறை குறுகிய அளவில் இருந்ததால் திறக்கப் பட்ட கியாஸ் அறை முழுவதும் பரவியது. அப்போது தீபா உரசிய தீக்குச்சி பற்றியது. இதனால் குபீரென்று பிடித்த தீயில் தீபா சிக்கினார். அவர் அணிந்திருந்த நைலான் நைட்டியில் தீ பட்டதால் உடலில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

செய்வதறியாது திணறிய தீபா அறையில் அங்குமிங்கும் ஓடி தீயை அணைக்க முயன்றார். படுக்கையில் உருண்டார். தீ அணையவில்லை. வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பொருட்களும் எரிய தொடங்கியது. உடனடியாக அங்கிருந்த வெங்கடேசன் எவ்வளவோ போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 2 குழந்தை களையும் காப்பாற்றினார்.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இணை போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் ஓட்டேரி போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயை அணைத்தனர். அதற்குள் தீபா கருகி பலியானார். போலீசார் பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் வாஸ்து கோளாறுக்காக கதவு, ஜன்னல்களை அடைத்ததன் காரணமாகவே இந்த தீ விபத்து நடந்துள்ளது தெரிய வந்தது.

மாலைமலர்

அதிமுக வாக்களித்தது ஏன்? - ஜெ. விளக்கம்

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் 3வது அணி குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. ஆனால்அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றம் எம்.பி.,க்கள் திடீர்-வாக்களித்தது குறித்து ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், குடியரசுத் தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை. இருப்பினும், அது அவரவர்களுடைய விருப்பம் என்று தெரிவித்திருந்தது, மேலும், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிப்பதை கட்சி தலைமையால் கட்டுப்படுத்தமுடியாது எனவும் தெரிவித்திருந்தது. இந்த விவாதத்தை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி, இறுதியில், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக கொண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

செய்தி ஆதாரம்: தினமலர்

முந்தைய ;சற்றுமுன்'கள்: குடியரசுத்தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு ஜெ.ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

காரைக்கால்: சுயாட்சி வேண்டி ஒரு இலட்சம் கையெழுத்து.

காரைக்கால் தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பின்தங்கிய நிலையில் உள்ள காரைக்கால் பகுதி முன்னேற, புதுச் சேரியிலிருந்து பிரிந்து காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்க கோரி பல்வேறு போராட்டங்கள் கரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு சார்பில் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு 1 லட்சம் கடிதங்களை அனுப்பிட கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி மக்களிடமிருந்து முகவரி மற்றும் கையெழுத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு ஒரு லட்சம் மனுக்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த இயக்கத்தை தியாகி ரத்தினசாமி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு நிர்வாகிகளும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


மாலைமலர்


முந்தைய சற்றுமுன்: காரைக்காலுக்கு யூனியன் பிரதேச உரிமை?

கேரளா: பேய்மழைக்கு மேலும் 15 பேர் பலி

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பேய் மழைக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

1500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 28 ஆயிரம் வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன. மின்சாரம், போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கப் பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவார ணம் வழங்க நிவாரண தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப் பட்டு உள்ளது. அவர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையை செலவழிப்பார் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் அச்சுதானந்தன் கூறினார்.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் பெய்த கனமழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர். திருவனந்தபுரத்தில் 4 வீடுகள் இடிந்தன. 85 வீடுகள் பாதி அளவு சேதமடைந்தது. சில இடங்களில் பலத்த மழை கொட்டியது.

மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 14 இடங்களில் முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று பெய்த கனமழையால் 4 பேர் மாயமாகியுள்ளனர்.அவர்கள் கதி தெரியவில்லை.

மழை சேதத்துக்காக ரூ.250 கோடி நிதி கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகையை மத்திய அரசு அனுமதிக்கும் என்று நம்புவதாக முதல் மந்திரி அச்சு தானந்தன் கூறினார். மழை காரணமாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று எதிர்கட்சித்தலைவர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.

மாலைமலர்

விவசாய நிலங்களை அரசிடம் ஒப்படைத்தார் அமிதாப்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பானா அணைப்பகுதியில் அமிதாப்பச்சன் பெயரில் 5.31 ஹெக்டேர் நிலமும், அவரது மகன் பெயரில் 4.01 ஹெக்டேர் நிலமும் உள்ளது.

இதேபோல அமிதாப்புக்கு உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அடுத்த தாலட்டூர் கிராமத்தில் பெரிய அளவில் விவசாய நிலங்களை வாங்கி குவித்துள்ளார். அந்த நிலங் களை அவர் வீட்டுமனையாக விற்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் அமிதாப்பச்சன் 2 மாநிலங்களிலும் உள்ள தனது விவசாய நிலங்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்தார்.

மாலைமலர்

ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

இந்தியாவின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடெங்கும் விறு விறுப்பான தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தில் எம்.பி.க் களும், அந்தந்த மாநில தலை நகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர்.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீலும், பா.ஜ.க. கூட்டணி ஆதரவுடன் செகாவத்தும் களத்தில் உள்ளனர். "இவர்கள் இருவரையும் ஆதரிக்கப்போவது இல்லை. ஜனாதிபதி தேர்தலை புறக் கணிக்கிறோம்'' என்று அ.தி.முக., தெலுங்குதேசம், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக் தளம், அசாம் கன பரிஷத் உள்பட 7 கட்சிகளைக் கொண்ட 3-வது அணி முடிவு செய்து அறிவித்தது. 3-வது அணி ஆதரவை பெற பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் பல்வேறு வழி களில் முயன்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருப்பது தவறு என்று தேர்தல் கமிஷனில் புகார் கூட செய் தனர். என்றாலும் பா.ஜ.க. தலைவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 3-வது அணியில் உள்ள அ.தி.மு.க. ஆதரவையாவது பெற்று விட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், 2 தடவை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது ஜெயலலிதா பா.ஜ.க. வேட்பாளர் செகாவத் துக்கு ஆதரவு தர இயலாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா முடிவில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்று அ.தி.மு.க. எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்களை ஓட்டுப் போட வைப்பது என்று ஜெயலலிதா நேற்று மாலை தீர்மானித்தார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வியாழக்கிழமை (இன்று) காலை சென்னையில் இருக்கவேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் ஓட்டுப்போட வேண்டியதில்லையே என்று நினைத்த அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களில் பெரும்பாலானவர் கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றிருந்த னர். ஜெயலலிதா அழைப்பை கேட்டதும், அவர்கள் அவசரம், அவசரமாக பஸ், ரெயில்களில் சென்னை திரும்பினார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் காரில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர். ஜெயலலிதாவின் திடீர் அழைப்பால் ஏதோ முக்கிய உத்தரவை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப் பும் பரபரப்பும் நேற்றிரவு முதல் நாடெங்கும் எதிரொலித்தது. இன்று காலை அவர் ஜனாதி பதி தேர்தலில் ஓட்டுப்போடும் படி தன் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தர விட்டார். பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிடும் செகாவத்துக்கு வாக்களிக்கும்படி அவர் உத்தரவிட்டதாக தெரிகிறது. அதை ஏற்று டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் டி.டி.வி. தினகரன், எஸ்.எஸ். சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன் ஓட்டுப் போட்டனர். அதுபோல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் ஓட்டுப் போட்ட னர். 11.20 மணி அளவில் ஜெயக் குமார் தலைமையில் 15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவாக வந்து ஓட்டு போட்ட னர். அதில் கலைராஜன், பதர்சயீத், செந்தமிழன், எஸ்.வி. சேகர், சேகர்பாபு, ராமஜெயம், ரவிச்சந்திரன், அருண்மொழி தேவன், அமரகுரு, அரி, அக்ரி கிருஷ்ண மூர்த்தி, விஜயகுமார், பலராமன், சீனிவாசன் இடம் பெற்றிருந்தனர். 11.40 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அனிதா ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன், செ.ம. வேலுச்சாமி, பாண்டுரங்கன் ஆகியோர் வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அ.தி.மு.க.வின் திடீர் மாற்றம் ம.தி.மு.க.விலும் எதிரொலித்தது. அவர்களும் ஜனாதிபதி தேர்தல் புறக் கணிப்பை கைவிட தீர்மானித் தனர். வைகோ உத்தரவை ஏற்று ம.தி.மு.க.வைச் சேர்ந்த வீரஇளவரசன், வரதராஜன், ஞானதாஸ், சதன்திருமலைக் குமார் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஓட்டு போட்டனர். ம.தி.மு.க.வின் மற்ற 2 எம்.எல்.ஏ.க்களான கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் உடல்நலம் சரியில்லாததால் இன்று காலை வாக்களிக்க வரவில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வீரஇளவரசனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கட்சி மேலிட உத்தரவை ஏற்று நாங்கள் ஓட்டுப் போட்டுள்ளோம். கூடுதல் விவரங்களுக்கு எங்கள் பொதுச் செயலாளரிடம் கேளுங்கள் என்றார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி.

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.

குடியரசுத்தலைவர் தேர்தல்: ஷெகாவத்துக்கு ஜெ. ஆதரவு

குடியரசுத்தலைவர் தேர்தலில், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா தலைமையிலான எட்டுகட்சி மூன்றாவது அணி கொண்டிருந்தது.
இன்று வந்த தகவல்படி, ஜெயலலிதாவின் கடைசி நேர மாற்றம் காரணமாக, பா.ஜ.க ஆதரவு ஷெகாவத்தை ஆதரித்து வாக்களிக்கும் படி கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

பழனி கோயிலில் 21 நாளில் ரூ. 44 லட்சம் உண்டியல் வசூல்

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 21 நாள் வசூல் ரூ. 44,46,617 கிடைத்தது.

இது கடந்த ஆண்டு, இதே மாதத்தைக் காட்டிலும் ரூ. 5 லட்சம் அதிகமாகும். மேலும் தங்கம் 724 கிராமும், வெள்ளி 4,513 கிராமும் கிடைக்கப் பெற்றது. உண்டியலில் மலேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் 142-ம் இருந்தன. இவைதவிர ஏராளமான பக்தர்கள் நவதானியங்கள், ஏலக்காய் மாலைகள், கைக்கடிகாரங்கள், பாத்திரங்கள், பட்டுத் துணிகள், பரிவட்டங்கள் ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.

தினமணி

சிறையில் உள்ள ஆர்ஜேடி எம்.பி. சகாபுதீனுக்கு வாக்களிக்க அனுமதி

வியாழக்கிழமை (இன்று) நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. முகமது சகாபுதீனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இவரது மனு மீது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

பிகார் மாநிலம் சிவான் மாவட்ட சிறையிலிருந்து பரோலிஸ் தேவையான போலீஸ் பாதுகாப்புடன் சகாபுதீன், பாட்னாவில் மாநில சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க கொண்டு செல்லப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

தினமணி

The Hindu News :: SC allows Shahabuddin to cast vote in Prez poll
Tainted MPs could lose vote :: Economic Times

-o❢o-

b r e a k i n g   n e w s...