கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பேய் மழைக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
1500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 28 ஆயிரம் வீடுகள் பாதி அளவு சேதமடைந்துள்ளன. மின்சாரம், போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கப் பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவார ணம் வழங்க நிவாரண தொகை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கப் பட்டு உள்ளது. அவர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையை செலவழிப்பார் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் அச்சுதானந்தன் கூறினார்.
இந்த நிலையில் நேற்று கேரளாவில் பெய்த கனமழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர். திருவனந்தபுரத்தில் 4 வீடுகள் இடிந்தன. 85 வீடுகள் பாதி அளவு சேதமடைந்தது. சில இடங்களில் பலத்த மழை கொட்டியது.
மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 14 இடங்களில் முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று பெய்த கனமழையால் 4 பேர் மாயமாகியுள்ளனர்.அவர்கள் கதி தெரியவில்லை.
மழை சேதத்துக்காக ரூ.250 கோடி நிதி கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகையை மத்திய அரசு அனுமதிக்கும் என்று நம்புவதாக முதல் மந்திரி அச்சு தானந்தன் கூறினார். மழை காரணமாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று எதிர்கட்சித்தலைவர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
மாலைமலர்
Thursday, July 19, 2007
கேரளா: பேய்மழைக்கு மேலும் 15 பேர் பலி
Posted by வாசகன் at 9:09 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment