.

Thursday, July 19, 2007

ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

இந்தியாவின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடெங்கும் விறு விறுப்பான தேர்தல் நடந்தது.
பாராளுமன்றத்தில் எம்.பி.க் களும், அந்தந்த மாநில தலை நகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போட்டனர்.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீலும், பா.ஜ.க. கூட்டணி ஆதரவுடன் செகாவத்தும் களத்தில் உள்ளனர். "இவர்கள் இருவரையும் ஆதரிக்கப்போவது இல்லை. ஜனாதிபதி தேர்தலை புறக் கணிக்கிறோம்'' என்று அ.தி.முக., தெலுங்குதேசம், சமாஜ்வாடி, இந்திய தேசிய லோக் தளம், அசாம் கன பரிஷத் உள்பட 7 கட்சிகளைக் கொண்ட 3-வது அணி முடிவு செய்து அறிவித்தது. 3-வது அணி ஆதரவை பெற பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் பல்வேறு வழி களில் முயன்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருப்பது தவறு என்று தேர்தல் கமிஷனில் புகார் கூட செய் தனர். என்றாலும் பா.ஜ.க. தலைவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 3-வது அணியில் உள்ள அ.தி.மு.க. ஆதரவையாவது பெற்று விட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், 2 தடவை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது ஜெயலலிதா பா.ஜ.க. வேட்பாளர் செகாவத் துக்கு ஆதரவு தர இயலாது என்று திட்டவட்டமாக கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதா முடிவில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்று அ.தி.மு.க. எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்களை ஓட்டுப் போட வைப்பது என்று ஜெயலலிதா நேற்று மாலை தீர்மானித்தார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வியாழக்கிழமை (இன்று) காலை சென்னையில் இருக்கவேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் ஓட்டுப்போட வேண்டியதில்லையே என்று நினைத்த அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களில் பெரும்பாலானவர் கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றிருந்த னர். ஜெயலலிதா அழைப்பை கேட்டதும், அவர்கள் அவசரம், அவசரமாக பஸ், ரெயில்களில் சென்னை திரும்பினார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் காரில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர். ஜெயலலிதாவின் திடீர் அழைப்பால் ஏதோ முக்கிய உத்தரவை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப் பும் பரபரப்பும் நேற்றிரவு முதல் நாடெங்கும் எதிரொலித்தது. இன்று காலை அவர் ஜனாதி பதி தேர்தலில் ஓட்டுப்போடும் படி தன் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தர விட்டார். பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிடும் செகாவத்துக்கு வாக்களிக்கும்படி அவர் உத்தரவிட்டதாக தெரிகிறது. அதை ஏற்று டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் டி.டி.வி. தினகரன், எஸ்.எஸ். சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன் ஓட்டுப் போட்டனர். அதுபோல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் ஓட்டுப் போட்ட னர். 11.20 மணி அளவில் ஜெயக் குமார் தலைமையில் 15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவாக வந்து ஓட்டு போட்ட னர். அதில் கலைராஜன், பதர்சயீத், செந்தமிழன், எஸ்.வி. சேகர், சேகர்பாபு, ராமஜெயம், ரவிச்சந்திரன், அருண்மொழி தேவன், அமரகுரு, அரி, அக்ரி கிருஷ்ண மூர்த்தி, விஜயகுமார், பலராமன், சீனிவாசன் இடம் பெற்றிருந்தனர். 11.40 மணிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், அனிதா ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன், செ.ம. வேலுச்சாமி, பாண்டுரங்கன் ஆகியோர் வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அ.தி.மு.க.வின் திடீர் மாற்றம் ம.தி.மு.க.விலும் எதிரொலித்தது. அவர்களும் ஜனாதிபதி தேர்தல் புறக் கணிப்பை கைவிட தீர்மானித் தனர். வைகோ உத்தரவை ஏற்று ம.தி.மு.க.வைச் சேர்ந்த வீரஇளவரசன், வரதராஜன், ஞானதாஸ், சதன்திருமலைக் குமார் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஓட்டு போட்டனர். ம.தி.மு.க.வின் மற்ற 2 எம்.எல்.ஏ.க்களான கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் உடல்நலம் சரியில்லாததால் இன்று காலை வாக்களிக்க வரவில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று ம.தி.மு.க. எம்.எல்.ஏ. வீரஇளவரசனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கட்சி மேலிட உத்தரவை ஏற்று நாங்கள் ஓட்டுப் போட்டுள்ளோம். கூடுதல் விவரங்களுக்கு எங்கள் பொதுச் செயலாளரிடம் கேளுங்கள் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...