.

Monday, June 4, 2007

மருத்துவக்காப்பீடு சவூதியில் கட்டாயமாகிறது!

வெளிநாட்டவர்களுக்கான குடியுரிமை அனுமதியை (Iqama) புதிதாகப் பெறவோ, புதுப்பிக்கவோ, இனி மருத்துவக்காப்பீடு கட்டாயம் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள், குடும்பத்தினர், இதனால் பலனடைவர்.
இதன் மூலம் காப்பீடு வணிகமும் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரப்நியூஸ்

அசாமில் இரு அரசியல்வாதிகள் சுட்டுக்கொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமிலுள்ள பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் இரண்டு முக்கிய உள்ளூர் அரசியல்வாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

வடக்கு கச்சார் மலைப் பகுதிகான தன்னாட்சி சபையின் தலைமை நிர்வாகி பூர்னேண்து லாங்த்ஸா அவார்கள் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நெருங்கிய சகாவான நிண்டு லாங்த்ஸாவும் கொல்லப்பட்டுள்ளார்.

இம்மாதம் 12 ஆம் தேதி அந்த மலைப் பகுதி தன்னாட்சி சபைக்காக நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிண்டு லாங்க்த்ஸா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

கறுப்பு விதவைகள் என்கிற பழங்குடியினர் அமைப்பின் சார்பான பேச்சாளர் என அடையாளம் கூறிக் கொண்ட ஒருவர், தமது அமைப்பினரே இந்தக் கொலைகளை செய்ததாக கூறியுள்ளார்.

- பிபிசி தமிழ்

1. Zee News - CEM, EM shot dead in the run-up to NC hills poll
2. BBC NEWS | South Asia | Policemen die in 'rebel' attack

மதுரை மேற்கு தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு - ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜுக்கு 55 வயது ஆகிறது. பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது தந்தை பெயர் காமாட்சி தேவர். தாயார் பெயர் ஒச்சம்மாள். செல்லூர் ராஜுவின் மனைவி பெயர் ஜெயரதி. இவர்களுக்கு ரம்யா, சவுமியா என்ற 2 மகள்களும், தமிழ்மணி என்ற மகனும் உள் ளனர்.

செல்லூர் ராஜு 16-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து பின்னர் படிப்படியாக கட்சியின் பல்வேறு பதவிகளை பெற்றவர். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதன் பின்பு 2001-ல் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோற்றார்.

2002 முதல் 2004 வரை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார்.

மாலைமலர்

அமீரகத்தில் பொது மன்னிப்பு

அமீரகத்தில் முறையான நுழைமதி, பணி செய்ய் உரிமை, குடியுரிமை இல்லாதவர்கள் அனைவரும்எவ்விதமான தண்டனையும் பொருட்சேதமும் இன்றி தங்கள் தாயகத்திற்கு திரும்பும் வகையில் அமீரக அரசு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் அனுமதியின்றி இங்கே தங்கியிருக்கும் தொழிலாளர்கள், தங்களது புரவலரிடமிருந்து தப்பித்து சென்று தனியாக பணிபுரிகிறவர்கள், தங்கள் பணிக்காலம் முடிந்த பின்னும் எவ்வித முறையான அனுமதியுமின்றி இங்கேயே தங்கி விட்ட்வர்கள் என்று சட்டத்திற்கு முரணான வகையில் தங்கி விட்டவர்கள அனைவருக்கும் அமீரகத்தை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் துபாயில் மட்டுமே சுமார் மூன்று லட்சம் அங்கீகாரமற்ற தொழிலாளர்கள் சட்டத்திற்கு முரணாகப் பணியாற்றுவதாக ஒரு தகவலறிக்கை சொல்கிறது. இதில் 80% இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இன்னும் மூன்று மாத காலத்திற்குள் அமீரகத்தை விட்டு வெளியேறாதவர்கள் பொது மன்னிப்பு காலம் முடிந்ததும் க்டும் தண்டனைக்குள்ளாவார்கள் என்றும் அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ச:ஜி8 கூட்டங்களுக்கு எதிர்ப்பு: ஜெர்மெனியில் அடிதடி

இந்தவாரம் ஜெர்மெனியில் நடக்கவிருக்கும் ஜி8 சமிட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் ஜெர்மெனியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டோர் சிலர் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாய் நடந்த போலீஸ் தடியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கார்ரர்கள் காயமடைந்தனர்.

ஜி8 சமிட் நடக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகமயமாக்கலை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. பாதுகாப்பிற்கு தேவைக்கதிகமான போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய கலவரங்கள் ஒரு மோசமான துவக்கத்தை தந்துள்ளன என ஊடக செய்திகள் சொல்கின்றன.

Protesters, police clash as German G8 summit nears Washington Post, DC
G-8 Protesters, Police Clash in GermanyGuardian Unlimited, UK
Anti-globalization protesters clash with police ahead of G8 summit ...Canada.com, Canada

ச:இந்திய கிரிக்கெட்:அடுத்த பயிர்ச்சியாளர் யார்?

இங்கிலாந்து சுற்றுப்பயண்ணத்திற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கான அடுத்த பயிர்ச்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதுவரை தாவ் வாட்மோர் தேர்வுக்காக பரிந்துரையில் இருந்தார் ஆனால் இன்று புதிதாக கிரகாம் ஃபோர்டின் விண்ணப்பமும் பெறப்பட்டிருப்பதை பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

46 வயது நிரம்பிய ஃபோர்ட் 1999 முதல் 2001வரை தேன் ஆப்ரிக்காவின் பயிர்ச்சியாளராய் இருந்தவர். வாட்மோர் இலங்கை அணியை 1996 உலகக் கோப்பை வெற்றிக்கு இட்டுச்சென்ற பயிர்ச்சியாளர்.

இதுவரை வாட்மோர் தேர்வாளர்களின் முன்னணி தேர்வாக இருந்துவந்தார். இதனிடையே இந்திய பயிர்ச்சியாளரை் நியமிக்க ்நியமிக்க முன்னுத்துவம் தரவேண்டும் என முன்னாள் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போதைய அணியின் மூத்த வீரர்களான சச்சின். திராவிட், கங்குலி, கும்ளே வெளிநாட்டு பயிர்ச்சியாளார் வேண்டும் என பிசிசிஐ தலைவர் சரத் பவாரிடம் தெரிவித்துள்ளனர்.

BCCI confirms receiving Ford's application Hindustan Times, India
Whatmore favourite for India coaching job Rediff, India
The job of a coach Times of India, India
How can they recommend Whatmore: Kapil Dev Hindustan Times, India

ச:ஆர்குட் எதிர்ப்பு சைபர்கஃபேக்களை குறிவைக்கிறது சிவசேனா

ஆர்குட்டில(்Orkut) சிவசேனாவை எதிர்த்து உருவாகியுள்ள குழுக்களை கண்டித்து சிவசேனா பலத்த எதிர்ப்புகளை தெரிவித்துவருகிறது. இதில் அடுத்த கட்டமாக நேற்று (ஜூன் 3, 2007) மும்பை, கல்யாணில் உள்ள ஒரு சைபர்கஃபே தாக்கப்பட்டுள்ளது. சுமார் 40 சிவ சேனா தொண்டர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை்.

போலீஸ் சம்பவம் குறித்து கூறுகையில் சைபர்கஃபேயின் வெளிக் கண்ணாடி மட்டும் உடைக்கப்பட்டது எனக் கூறினர் எனினும் தொலைக்காட்சி காட்சிகளில் உள்ளே இருந்தவர்கள் தாக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

Shiv Sena targets cyber cafe to protest Orkut Show allTimes of India
Sainiks pull down cafes over e-slur Daily News & Analysis
Sena activists ransack cyber cafe over defamatory material NewKerala.com

ச: இராஜஸ்தானில் பேச்சு வார்த்தைகளில் வெற்றி: போராட்டம் கைவிடப்படுகிறது

கடந்த எட்டு நாட்களாக தொடர்ந்து வந்த குஜ்ஜர் போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது. இராஜஸ்தான் அரசு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு ST ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேரடங்கிய குழு ஒன்று ஆராய்ந்து மூன்று மாதங்களில் தன் அறிக்கையை வெளியிடும் என்று வாக்களித்திருக்கிறது.

DNA - India - Gujjar-Raje talks successful; agitation called off - Daily News & Analysis

ச: இந்தியாவும் பிரேசிலும் ஏழு உடன்படிக்கைகளில் கையொப்பம்

வளரும் பொருளாதாரங்களில் முக்கிய இரு நாடுகளான இந்தியாவும் பிரேசிலும் இன்று தங்கள் வணிகத்தையும் திட்ட பிணைப்புகளையும் வலுப்படுத்தும் வகையில் விண்வெளி, குடிகளுக்கான அணுசக்தி, தாவர எரிசக்தி,வணிக மற்றும் சுற்றுச்சூழலில் ஒருங்கிணைந்த உலகக் கொள்கைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை விஸ்தரிப்பு என பலதரப்பட்ட விதயங்களில் ஏழு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன. இன்று நிறைவுற்ற மன்மோகன்சிங்- லூலா பேச்சு வார்தைகளின் முடிவில் இந்த உடன்படிக்கைகள் ஏற்பட்டன.

மேல் விவரங்களுக்கு...India and Brazil ink seven pacts to boost their ties (1st Lead) - Americas

ச:தில்லி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

இராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் சாலை மறிப்பு மற்றும் கடையடைப்பு போராட்டத்தால் தலைநகர் தில்லியின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. இதனிடையே அவர்களின் தலைவர் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுடன் இப்பிரச்சினைக்கு முடிவு காண பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

முழு விவரம்..NDTV.com: Gujjar bandh hits normal life in Delhi

அமெரிக்கா நேக்கட் நியூஸ் (NAKED NEWS)


அழகிகள் நிர்வாணமாக நின்று செய்தி வாசிக்கும் நேக்கட் நியூஸ் சேனலுக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. செய்தி வாசித்துக்கொண்டே ஆடைகளை கழற்றியெறியும் வாசிப்பாளரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்வு நடந்தது. அதில் வெற்றி பெற்ற கனடா நாட்டு அழகி ஹோலி யெகிளின்டன், நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் அரைகுறையாக ஒருவரை பேட்டி காண்கிறார்.


நன்றி: "மாலைச் சுடர்"

ச- பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்.

She is my TEACHER daddy... How can she HURT ME? என்று பெருமிதங்கள் ஒரு பக்கம்.
'இன்றாவது அடி விழாமல் இருக்கவேண்டுமே' என்று நடுக்கங்கள் இன்னொரு பக்கம். (இதில் பக்கம் என்பதை, பிரதேசம், பிற'தேசம்' என்று குழப்பத்தேவையில்லாமல் ஆக்கி விடுகின்றனர் மனிதர்கள்).

இதில் 'சற்று முன்' செய்தி என்னவென்றால், விழுப்புரம் அருகிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்படி 'சற்று முன்' உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தான். விண் தொ.கா. செய்தி.

இதே போன்ற ஒரு பழைய செய்தி நினைவுக்கு வருகிறது.

சர்வதேச தொழிலாளர் மாநாடு - சற்றுமுன் நேரடிச் செய்தி!

சிலி நாட்டு அரச அதிபர் மாண்புமிகு. Ms. Michelle Bachelet அவர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்து உரையாற்றினார்.

ஜெனிவா நகரில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தில் நடந்து வருகிற சர்வதேச தொழிலாளர் மாநாடு பொது அமர்வில் இன்று இந்திய நேரம் மதியம் 02.00 மணிக்கு சிலி நாட்டு தலைவர் வருகை தந்தார். அவரது உரையில் "சம உரிமையுடன் கூடிய வளர்ச்சி, சமூகநீதியுடன் கூடிய முன்னேற்றம்" நமக்கு தேவை என குறிப்பிட்டார்.

மேலும் விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில்.

இன்னும் சில நிமிடங்களில் கானா நாட்டு அதிபர் வருகை தருகிறார்.

=திரு=

ச- கைப்பேசியை 29 ஜூனுக்குப் பிறகு மாற்றுங்கள்!

"இன்னும் இந்த பழைய போனையே வச்சுகிட்டிருக்கீங்களே. எப்ப மாத்தப்போறீங்க?"
"அடுத்த வருசம் ஐ.போன் வந்தவுடனே ஒரேயடியா மாத்திக்கலாம்பா. "
('சாகர அலை'யில் ஒரு டயலாக்)
அதென்ன ஐ-ஃபோன்?
ஐ-போட், கைப்பேசி, இணையம் மூன்றையும் உள்ளடக்கியதும் மின்னணுவியலின் மற்றொரு படியுமான ஐ-ஃபோன் என்கிற புதிய கண்டுபிடிப்பு ஜூன் 29முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இத்தகவலை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் $500 - $600 விலையுள்ள இந்த ஐ-ஃபோன் 2008ல் 10 மில்லியன் சாதனங்கள் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கைப்பேசிகளின் வருடாந்திர மொத்த விற்பனையில் சுமார் 1 சதவீதமே ஆகும்.

ராய்ட்டர்

ச: அந்தமானில் நிலநடுக்கம்

இன்று காலை 6:52 மணிக்கு அந்தமானில் 5.2 ரிச்டர் அளவு கொண்ட சுமாரான நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர் சேதம் , பொருள்சேதம் பற்றி தகவல் இல்லை.
The Hindu News Update Service

ச: தமிழீழத்தில் பலத்த சண்டை: 82 பேர்வரை மரணம்

சிறீலங்காவின் வடக்கு மாகாணங்களான வவுனியா, மன்னார் பகுதியில் தமிழீழப் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே நேற்று பலத்த சண்டை ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் 30 இராணுவத்தினர் இறந்தனர் என்றும் சிறீலங்கா அரசு 52 புலிகள் இறந்தனர் என்றும் கூறுகின்றனர். இருதரப்பினரும் இறந்தவர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கூறக் கூடுமாதலால் சரியான எண்ணிக்கையை தெளிவுபடுத்த வியலாது.

NDTV.com: Lanka bloodshed claims 82 lives

ச- மனைவியிடமிருந்து விடுதலை கேட்கும் முதியவர்.

71 வயதாகும் தனது மனைவி ராணி தேவி தன்னை உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தி வருவதாகக் கூறி பூபேஷ்வர் குப்தா என்னும் 80 வயது முதியவர் விவாகரத்து கோரியுள்ளார். கான்பூரைச்சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 53 வருடங்கள் ஆகிறதாம். அச்சமயத்தில் ஹிந்து திருமணச்சட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ட்ரல் வங்கியின் முன்னாள் ஊழியரான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தன் மகள், மருமகன் மீதும் பல குற்றச்சாட்டுகளை இவர் சுமத்தியுள்ளார்.

பி.டி.ஐ

ச: பிரேசில் நாட்டு அதிபர் இந்தியா வருகை

பிரேசில் நாட்டின் அதிபர் லூயி இனாசியொ லூலு டசில்வா நேற்று புதுதில்லி வந்தார். அவர் இன்று இந்திய தலைவர்களூடன் வணிக,பொருளாதார ஒத்துழிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்.

ANTARA News :: Brazilian president in India to push ties

ச:உ பியில் 4000 சிறைக்கைதிகள் விடுதலை

உத்தரபிரதேச சிறைகளில் பல குற்றங்களுக்காக 18,334 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 4000 பேரை விடுவிப்பதாக முதல்வர் மாயாவதி தன் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார். பயங்கர வெளிநாட்டு மற்றும் வெளிமாநில குற்றவாளிகள் விடுவிக்கப் படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 கீழும் குற்றவியல் சட்டம் 432 கீழும் உபி சிறை செயற்புத்தகம் பிரிவு 195,196 மற்றும் 197 கீழும் இவர்களை விடுவிக்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது.


About 4000 prisoners to be released from UP jails : Mayawati @ NewKerala.Com News Channel

ச: ஆப்பிரிக்காவின் சியாரா லியானில் ஹெலிகாப்டர் விழுந்து 22 பேர் மரணம்

ஞாயிறன்று சியோரா லியானின் முக்கிய பன்னாட்டு விமானநிலையத்தில் உருசிய MI8 ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் இறந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள்
டோகோ நாட்டு விளையாட்டு அதிகாரிகள் ; ஆப்பிரிக்க தேசங்களிடையேயான கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துவிட்டு திரும்பும் பயணத்தில் இவ்வாறு நடந்துள்ளது.
மேலுமறிய DNA - World - Helicopter crashes in Sierra Leone, 22 killed - Daily News & Analysis

ச- இராஜஸ்தான் கிளர்ச்சி: டெல்லி சாலைகள் அடைப்பு

இராஜஸ்தானில் குர்ஜார் இனமக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சாலைகள் அடைபட்டிருப்பதாக சிறப்பு செய்தியாளர் (பி.டி.ஐ) தெரிவிக்கிறார்.

'எல்லா சாலைகளும் டெல்லிக்கு செல்லும்' என்று தற்போதைக்கு சொல்ல இயலாது!

ச- பாப் உல்மர் மரணம்: பதவியிழக்கும் அதிகாரிகள்!

பாப் உல்மர் மரணம் இயற்கையானது என்று முடிவு காணப்பட்டதை 'சற்றுமுன்' செய்தி அளித்திருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது, இதைத் தொடர்ந்து இரண்டு பதவியிழப்புகள் பற்றி பிடிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இம்மரணத்தை கொலை என்று அறிவித்த; பிரேதப் பரிசோதனை செய்த இந்திய வம்சாவழி மருத்துவர் சேஷைய்யா, ஜமைக்காவின் துணை காவல் ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் ஆகியோரே அவர்கள்.


பதவியிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் ஷீல்ட்ஸ் தாமாக முன்வந்து பதவி விலகக்கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணிகளை மறுக்கும் டாக்ஸி டிரைவர்கள்!

(மின்னசோட்டா), ஜூன் 3: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், குடித்திருப்பவர்களை வாடகைக் காரில் ஏற்றிச் செல்ல சில முஸ்லிம் டிரைவர்கள் மறுப்புத் தெரிவித்து முரண்டுபிடிக்கின்றனர்.

இதனால் அவர்கள் விமான நிலைய அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், மின்னபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வாடகைக் கார் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரைவர்களில் பலர் சோமாலியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

இவர்கள் குடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களை காரில் ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றனர். இந்த வகையில் 2002-ம் ஆண்டில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்ல அவர்கள் மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இதையடுத்து இப்பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, நகருக்குள்ளும் யாராவது மது வகைகளை வாங்கிச் சென்றால் அவர்களையும் ஏற்றிச் செல்ல இந்த டிரைவர்கள் மறுக்கின்றனர்.

பலர் இத்தகைய சூழ்நிலையில் வேறு வாடகைக் காரில் ஏறிச் சென்று விடுகின்றனர். ஆனால் காரில் வாடிக்கையாளர்கள் ஏறிய பிறகு, அவர்கள் மது வாங்கிச் செல்வது தெரிந்தால் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர், இந்த டிரைவர்கள்.

சோமாலிய நாட்டில் இருந்து குடிபெயர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மின்னசோட்டாவில் வசித்து வருகின்றனர். இதனால் இதுபோன்ற கலாசார வேறுபாடுகள் அங்கு தலைதூக்குகின்றன. இங்கு சில கடைகளில், காசாளர்கள் உள்ள சில முஸ்லிம்கள் பில் போடும்போது பன்றிக் கறியை தொடமறுப்பதும் நடக்கிறது.

தினமணி

தி.மு.க.,வை அழித்தே தீருவேன்: ஜெ சபதம் - வீடியோ

தி.மு.க.,வை என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே? நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்? தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா? ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.

மேலும் செய்திக்கு "தினமலர்"

-o❢o-

b r e a k i n g   n e w s...